நடிகை நமீதா-வுக்கு ஆப்பு வைத்த உயரமான நடிகர்..! – ஓஹோ அப்படியா விஷயம்..!

தமிழ் சினிமாவில், கொடி கட்டி பறந்த கவர்ச்சி நடிகைகளில் நமீதாவும் ஒருவர். ரசிகர்களை ‘மச்சான்ஸ்’ என அழைத்து, ஜொள்ளுவிட வைத்த நடிகை இவர் ஒருவர்தான். அரேபிய குதிரை என, ரசிகர்களால் மட்டுமின்றி, திரையுலகை சார்ந்த சிலர் வர்ணித்த நடிகையும் இவர்தான்.
விஜய்காந்த் நடித்த எங்கள் அண்ணா படத்தில்தான் நமீதா அறிமுகமானார். அதன்பின், பல படங்களில் நமீதா நடித்தார். சரத்குமாருடன் ஏய், சத்யராஜூடன் இங்கிலீஸ்காரன், ஜீவனுடன் நான் அவன் இல்லை பொட்டு, புலிமுருகன், சாணக்யா, மந்தர கண்ணாலே பாண்டி,பில்லா, சண்ட, தீ, மகா நடிகன் உள்ளிட்ட பல படங்களில் நமீதா நடித்தார்.

நமீதாவின் பிளஸ் பாயிண்டும் ஒன்றுதான், அவரது மைனஸ் பாயிண்டும் ஒன்றுதான். அவரது .உயரம். வழக்கமான நடிகைகளை காட்டிலும் மிக உயரமான நடிகை நமீதா என்பதால் சரத்குமார், சத்யராஜ், ஜீவன் போன்ற உயரமான நடிகர்களுடன் நடித்தால் மட்டுமே, அவரது நடிப்பு எடுபடும் என்ற நிலையில், நடிக்க வந்த புதிதில் சத்யராஜ், சரத்குமார் படங்களில் நடிக்கவே நமீதா ஆர்வம் காட்டினார்.

அதன் விளைவாக ஏய், சாணக்யா, சத்யராஜூடன் இங்கிலீஷ்காரன், மகா நடிகன் போன்ற படங்களில் நடித்தார். அதன்பிறகு பல படங்களில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதற்கிடையில், சிறிது காலம் அதிமுக கட்சியில் இணைந்து, நமீதா பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போதுதான், ரசிகர்களை பார்த்து மச்சான்ஸ் மச்சான்ஸ் என இவர் அழைக்க, இன்னும் அது டிரெண்டிங் ஆனது. அதன் பிறகு, சினிமா நிகழ்ச்சிகளிலும், பொது நிகழ்ச்சிகளுக்கு எங்கு நமீதா சென்றாலும், நமீதாவை மச்சான்ஸ் மச்சான்ஸ் என்று அழைக்குமாறு கூறி ரசிகா்கள் புளகாங்கிதம் அடைந்தனர்.

இந்நிலையில், மானாட மயிலாட நமீதா நிகழ்ச்சியில் பங்கேற்று, சிறந்த நடனக் கலைஞர்களை தேர்வு செய்யும் நடுவராக செயல்பட்டார். அதுவும், சில ஆண்டுகள் மட்டுமே நீடித்தது.
அதன்பின்பு, இரட்டை குழந்தைகளுக்கு தாயான நமீதா, இல்லத்தரசியாக மாறி விட்டார். மற்ற நடிகைகளை போல மார்க்கெட் இழந்தவுடன் டிவி சீரியல்களுக்கு நடிக்க செல்லாமல், குழந்தைகளின் தாயாக குடும்பத்தை கவனித்து வருகிறார்.

நமீதாவை பொருத்த வரை, அவர் நடித்த பல படங்களில் அவருக்கு கிடைத்தது கிளாமர் ரோல்தான். சேலை கட்டியிருந்தாலும், மாடர்ன் டிரஸெ் என்றாலும், சினிமா ரசிகர்கள் அவரை பார்த்தது கிளாமராக மட்டுமே. அதற்கு ஏற்றது போல்தான், படங்களில், பாடல் காட்சிகளில் படு கவர்ச்சியாக நடித்திருக்கிறார்.  எனினும் இப்போது சினிமா உலகை விட்டு விலகி, குடும்ப ஸ்திரியாக குழந்தைகளை, ஒரு தாயாக கவனித்துக்கொள்கிறார்.இந்த நிலையே நீடிக்குமா, அல்லது மீண்டும் பெரிய திரை, அல்லது சின்னத்திரையிலோ நமீதா காட்சியளிப்பாரா என்ற கேள்விகளுக்கு, காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …