பொது மேடையில் நடிகை அஞ்சலியை அந்த இடத்தில் தொட்டு தள்ளிய நடிகர்.. குவியும் கண்டனங்கள்..!

வயசு 37 ஆனாலும் பார்ப்பதற்கு இன்னும் இளமையான நடிகையாகவே தோற்றமளித்து வருபவர் தான் நடிகை அஞ்சலி.

தென்னிந்திய சினிமாவில் நட்சத்திர நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், தமிழ் திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்த வரும் அஞ்சலிக்கு மிகப்பெரிய மார்க்கெட் இருக்கிறது.

குறிப்பாக தமிழை தாண்டி அவருக்கு தெலுங்கில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து அங்கு பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார்.

நடிகை அஞ்சலி

ஆந்திர பிரதேசத்தை சொந்த ஊராகக் கொண்ட இவர் திரைப்படங்களில் நடிக்க வருவதற்கு முன்னர் குறும்படங்களில் நடித்து வந்தார்.

அதன் மூலம் தான் திரைப்படம் துறையில் நுழைவதற்கு அவருக்கு வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது. தமிழில் முதன் முதலில் ஜீவா நடிப்பில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “கற்றது தமிழ்” திரைப்படத்தில் அஞ்சலி மிகச்சிறப்பாக நடித்து தனது அறிமுகத்தை பதித்தார்.

அந்த திரைப்படத்திற்காக 2008 ஆம் ஆண்டிற்கான சிறந்த அறிமுக நடிகைக்கான விருதை அஞ்சலி பெற்று கௌரவிக்கப்பட்டார்.

அதை எடுத்து ஆயுதம் செய்வோம் திரைப்படத்தில் நடித்தார். பின்னர் வசந்த பாலன் இயக்கத்தில் அங்காடி தெரு திரைப்படத்தில் நடித்து மீண்டும் எல்லோரது கவனத்தையும் ஈர்த்தார்.

அந்த திரைப்படத்தில் அஞ்சலி கனி எனும் கதாபாத்திரத்தில் தனது மிகச் சிறப்பான நடிப்பால் எல்லோரது கவனத்தையும் ஈர்த்தார்.

அந்த திரைப்படத்திற்காக 2011 ஆண்டிற்கான சிறந்த நடிகைக்கான விருது பெற்று கௌரவிக்கப்பட்டார் நடிகை அஞ்சலி.

அஞ்சலியின் திரைப்படங்கள்:

தொடர்ந்து மங்காத்தா, ரெட்டை சுழி, தூங்கா நகரம், கலகலப்பு, சேட்டை, வத்திக்குச்சி , இறைவி , தரமணி, மாப்பிளை சிங்கம், பலூன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக முகமறியப்பட்டு வருகிறார்.

இதற்கிடையில் அவ்வப்போது தெலுங்கு சினிமாவிலும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதனால் அங்கும் பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார்.

இதனிடையே நடிகை அஞ்சலி தமிழ் சினிமாவின் பிரபல ஹீரோவான விஜய்யை சில ஆண்டுகள் காதலித்து அவருடன் லிவிங் லைப் வாழ்ந்து வந்தார்.

இருவரும் திருமணம் செய்யாமலே கணவன் மனைவியாக வாழ்ந்து வந்ததை அடுத்து திடீரென நடிகர் ஜெய்யின் போக்கே சரியில்லை அவர் போதைக்கு அடிமையாகிவிட்டதாக அஞ்சலி கூறியிருந்தார்.

மேலும் திரைப்படங்களில் கூட தன்னை நடிக்க விடுவதில்லை என்றெல்லாம் கூறி நடிகர் ஜெய்யை பிரேக் அப் செய்துவிட்டு பிரிந்து விட்டார் அஞ்சலி.

பின்னர் மீண்டும் தனது உடல் எடையை குறைத்து சிக்கென தோற்றத்திற்கு மாறி இரண்டாவது இன்னிசை தொடங்கி தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது அஞ்சலியின் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் “கேங்ஸ் ஆப் கோதாவரி” என்ற திரைப்படம்.

அஞ்சலியை தள்ளிவிட்ட நந்தமூரி பாலகிருஷ்ணா:

இப்படம் நேற்று மேம் 31ஆம் தேதி வெளியாகியிருந்தது. இந்த படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றிருந்த நிலையில் அதில் தெலுங்கு நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா கலந்து கொண்டார்.

அப்போது மேடையில் படக்குழுவினர் எல்லோரும் நின்று கொண்டு போஸ் கொடுத்து கொண்டிருக்கும் போது திடீரென பாலகிருஷ்ணா அஞ்சலியை தள்ளிவிட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரல் ஆகி வருகிறது.

அது மட்டும் இல்லாமல் பாலகிருஷ்ணாவின் இந்த செயலை பலரும் கண்டித்து வருகின்றனர். அஞ்சலி இதை சிரித்துக்கொண்டு சமாளித்தாலும் இது பார்ப்பவர்களுக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் பாலகிருஷ்ணாவின் செயலுக்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version