இன்று வெளியான திரைப்படங்களில் அதிக வரவேற்பை பெற்ற திரைப்படமாக நந்தன் திரைப்படம் இருந்து வருகிறது. சசிகுமார் நடித்து வெளியாகி இருக்கும் இந்த திரைப்படம் ஜாதிய வேறுபாட்டிற்கு எதிரான திரைப்படமாக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த திரைப்படத்தை இயக்குனர் இரா. சரவணன் இயக்கியிருக்கிறார் இவருக்கு முதல் படம் என்று கூறப்படுகிறது. நடிகை சுருதி பெரியசாமி மற்றும் பாலாஜி சக்திவேல் ஆகியோர் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.
இன்னொரு வெர்ஷனா நந்தன்
இந்த நிலையில் இன்று வெளியான இந்த திரைப்படம் அதிக வரவேற்பை பெற துவங்கியிருக்கிறது. இந்த படத்தின் கதை என்னவென்று பார்க்கும் பொழுது புதுக்கோட்டையில் இருக்கும் ஒரு கிராமத்தில் நடக்கும் கதை களம்தான் இந்த திரைப்படம் என்று கூறப்படுகிறது.
அந்த கிராமத்தில் வெகு காலங்களாக பெரிய சாதியை சேர்ந்த ஒரு நபராக பாலாஜி சக்திவேல் இருந்து வருகிறார். தொடர்ந்து அந்த கிராமத்தில் அவருடைய சாதிக்காரர்களையே ஜெயிக்க வைத்து கொண்டு இருக்கிறார் பாலாஜி சக்திவேல்.
படம் எப்படி இருக்கு
இந்த நிலையில் திடீரென்று அந்த கிராம பஞ்சாயத்து ரிசர்வேஷன் கோட்டாவிற்குள் செல்கிறது. அதனால் தாழ்த்தப்பட்ட மக்கள் மட்டுமே அந்த தொகுதியில் போட்டியாளராக நிற்க முடியும் என்கிற நிலை வருகிறது. இந்த நிலையில் தாழ்த்தப்பட்ட மக்களில் ஒருவராக இருக்கும் சசிகுமார் தொடர்ந்து பாலாஜி சக்திவேலிடம் அடிமையாக வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் அவரை தேர்தலில் நிற்கவைக்கின்றனர் பிறகு என்னவெல்லாம் நடக்கிறது என்பதாக இந்த கதை செல்கிறது. பெரும்பாலும் தமிழ் சினிமாவில் தற்சமயம் சமூக நீதிப் பேசும் படங்களுக்கு இடையே அதிகமான வரவேற்புகள் இருந்து வருகின்றன.
திரை விமர்சனம்
அந்த வகையில் இந்த திரைப்படமும் வரவேற்பு பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் வெளியான முதல் நாளே இந்த திரைப்படத்திற்கு நேர்மறையான விமர்சனங்கள் கொஞ்சம் அதிகமாகவே வந்திருக்கிறது.
மேலும் சசிகுமார் சமீப காலமாக தேர்ந்தெடுத்து நடிக்கும் திரைப்படங்கள் எல்லாமே அவருக்கு வரவேற்பு கொடுக்கும் படங்களாக இருக்கின்றன. அதில் கொஞ்சம் மாறுபட்ட திரைக்கதைகளையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் சசிகுமார்.
இந்த திரைப்படத்தின் முதல் பாதி கிட்டத்தட்ட தற்சமயம் சூரி நடித்த கருடன் திரைப்படத்தின் கதையோடு ஒத்திருப்பதாகவும் ஒரு பக்கம் பேச்சுக்கள் இருக்கின்றன. எனவே இன்னும் சில நாட்களில் தான் நந்தன் படத்தின் உண்மையான வசூல் நிலவரம் என்னவென்பது தெரியும்.