நடிகை நந்திதா ஸ்வேதா டு பீஸ் நீச்சல் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை தன்னுடைய இணையப் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
சமீப காலமாக சொல்லிக் கொள்ளும்படி பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வரும் இவர் தன்னுடைய கவர்ச்சி ஆயுதத்தை கையில் எடுத்திருக்கிறார். பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயார் என்று சொல்லும்விதமாக இப்படியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தையும் தமிழ் சினிமா உலகின் கவனத்தையும் பெற முயற்சி செய்து வருகிறார்.
என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை நந்திதா ஸ்வேதா அடுத்தடுத்த படங்களில் நடித்து ரசிகர்களின் ஒரு நடிகையாக மாறினார். நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
இந்தப் படத்தில் கதாநாயகன் விஜய் சேதுபதி அடிக்கடி கூறக்கூடிய குமுதா ஹாப்பி அண்ணாச்சி என்ற வசனத்தில் இருக்கக்கூடிய குமுதா என்ற பெயருக்கு சொந்தக்காரி ஆக நடித்து இருந்தார் நடிகை நந்திதா ஸ்வேதா.
தொடர்ந்து நடிகர் விஜய் நடிப்பில் வெளியான புலி திரைப்படத்தில் நடிகர் விஜயின் மனைவியாக சில காட்சிகளில் நடித்திருந்தார். அதன்பிறகு அவர் நடித்த படங்கள் எதுவுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறத் தவறினார்.,
இதனால் பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் சூழல் உருவானது. தற்போது தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்ளும் இடமாக அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வரும் நந்திதா ஸ்வேதா தற்போது நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
இதைப்பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.