“இனி பஜ்ஜி வடைக்கு Bye Bye..” – குழந்தைகள் விரும்பி உண்ணும் சத்துக்கள் நிறைந்த ஸ்டஃப்டு பனானா …!!

மாலை நேரத்தில் பிள்ளைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் குறுந்தீனியை தின்ன வேண்டும் என்ற அதீத ஆவலில் இருப்பார்கள். மேலும் எப்போதுமே பஜ்ஜி போண்டாவை சாப்பிட்டு சலித்து போன நமக்கு ஸ்டஃப்டு பனானா ரெசிபி எப்படி செய்வது என்பதை புரிந்து கொண்டு செய்து தந்தால் கூடுதல் சத்தோடு பிள்ளைகள் விரும்பி சாப்பிடக்கூடிய பண்டமாக இருக்கும் என்பதில் எந்த விதமான ஐயமும் இல்லை.

வெறும் வாழைப்பழத்தை குழந்தைகளுக்கு தின்ன கொடுத்தால் முகம் சுழிப்பார்கள். ஆனால் இதுபோல நேந்திரம் பழத்தைப் பயன்படுத்தி நாம் ஒரு பனானா ஸ்டப்டு செய்து கொடுப்பது மூலம் அவர்கள் வேண்டும் வேண்டும் என்று விரும்பி சாப்பிடுவார்கள்.

 மொறு மொறு ஸ்டப்டு பனானா செய்ய தேவையான பொருட்கள்:

1.பழத்த நேந்திர பழம் –  இரண்டு

2.பொறிப்பதற்கு போதுமான அளவு எண்ணெய் அல்லது நெய்.

3.உள்ளே ஸ்டாப் செய்வதற்கு துருவிய தேங்காய் கால் கப்

4.வெல்லம் – மூன்று டேபிள் ஸ்பூன் 5.ஏலக்காய் பொடி – அரை டீஸ்பூன்

கோட்டிங் செய்வதற்கு தேவையான பொருட்கள்:

1.மூன்று டீஸ்பூன் அளவு மைதா

2. ஒரு டீஸ்பூன் அளவு அரிசி மாவு

3.சர்க்கரை ஒரு டீஸ்பூன்

4. உப்பு சிறிதளவு

5.பிரட் தூள் அரைக்கப்

செய்முறை

முதலில் ஸ்டாப் செய்வதற்கு தேவையான தேங்காய் துருவல், வெல்லம்,ஏலக்காய் பொடியை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு கைகளால் கலந்து கொண்டு விட்டால் ஸ்டஃப் தயார் ஆகிவிடும்.

 நேந்திரம் பழத் தோலை நீக்கிவிட்டு நடுவே சிறிது சதையையும் எடுத்துவிட்டு அதனுள் சப் செய்ய வைத்துள்ள பொருளை நிரப்பி விட வேண்டும்.

 பின்னர் அகலமான ஒரு பாத்திரத்தில் அரிசி, மைதா மாவு, சர்க்கரை உப்பு ஆகியவற்றில் சிறிதளவு நீரை ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.

 பிறகு பிரெட் துகள்களை ஒரு தட்டில் வைத்துக் கொள்ளலாம். ஸ்டஃப் வாழைப்பழத்தை எடுத்து மைதா மாவில் பிரட்டி பின்னர் நீரில் கலந்து வைத்துள்ள மாவில் பிரட்டி அதன் பிறகு பிரட் தூளில் பிரட்டி தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

 இது போல சிறிது சிறிதாக வெட்டி வைத்திருக்கும் நேந்திரம் பழத்தை ஸ்டாப் செய்து பின்னர் கோட்டிங் உள்ள பொருட்களின் மீது அதை அப்படியே கோட் செய்து பின்னர் பிரட் தூள்களில் நன்கு  பிரட்டி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

 பின்னர் வாணலியை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெயை ஊற்றி சூடேற்றி மிதமான தீயில் வைத்துக் கொள்ளுங்கள்.

 அதன் பிறகு ஸ்டஃப் செய்து வைக்கப்பட்டிருக்கக்கூடிய நேந்திர பழத்தை எடுத்து எண்ணெயில் போட்டு அப்படி பொரித்து எடுத்தால் சூடான சுவையான குழந்தைகள் விரும்பும் ஒருவொருப்பான ஸ்டஃப்டு பனானா தயார்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …