பொன்னியின் செல்வனுக்கு பின் பல்லக்கில் ஏறி திரைக்கு வரும் பல்லவ மன்னன் நந்திவர்மன்…!

 சோழர்களின் வரலாற்று காவியமான கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக தனது கைதேர்ந்த தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கியிருக்கிறார் மணிரத்தினம்.தற்போது சோழர்களுக்கு பின் பல்லவ மன்னனான நந்திவர்மன் கதை வர உள்ளது.

 இந்த படமானது கடந்த 30ஆம் தேதி வெளிவந்து விக்ரம் பட வசூலை விட அதிகமாக வசூலை குவித்து வருகிறது. இதையடுத்து தற்போது திரைத்துறையில் வரலாற்று படங்களை படம் பிடிக்க அதிக ஆர்வமும் போட்டியும் நிலவுகிறது.

 இந்த வரிசையில் தற்போது சோழர்களுக்கு பின் பல்லவ மன்னனான நந்திவர்மன் கதையை படம்பிடிக்க உள்ளார்கள். இந்த கதையானது ஏ கே பிலிம் பேக்டரி சார்பில் அருண்குமார் தயாரித்து வழங்க உள்ளார்.

 மேலும் இந்த படத்தில் காவல்துறை உங்கள் நண்பன் என்ற படத்தில் நடித்த சுரேஷ் ரவி நாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக ஆயிஷா கவுடா  நடிக்க இருக்கிறார்.

  இந்தப்படத்தில் இவர்களோடு இணைந்து  போஸ் வெங்கட், நிழல்கள் ரவி, ஆடுகளம் முருகதாஸ் ,கஜராஜ் ,அம்பானி சங்கர், முல்லை கோதண்டம், மீசை ராஜேந்திரன், அசுரன் அப்பு, பூமி ராஜன், ஜேஎஸ்கே கோபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளார்கள்.

 மரகத நாணயம், ராட்சசன், புரூஸ்லி ஆகிய படங்களில் இணை ஒளிப்பதிவாளராக பணியாற்றிய வரும் கன்னிமாடம் படத்தின் இயக்குனருமான பெருமாள் வரதன் இந்த படத்தை இயக்க போகிறார்.

மேலும் உண்மை சம்பவத்தை மையமாக கொண்டிருக்கக்கூடிய இந்தப்படத்தில் சூழ்ச்சியால் கொலை செய்யப்பட்ட நந்திவர்மன் பற்றிய கதைகள் இருக்கும் என தெரிகிறது.

நந்திவர்மன் ஆட்சி செய்த ஊர் போரின்போது பூமியின் அடியில் புதைந்து விடுகிறது. இந்த புதைந்த  பகுதியை தொல்லியல் துறையினர் தேடி வருகிறார்கள். அங்கு செல்லும் போது ஒவ்வொருவரும் மர்மமான முறையில் மரணம் அடைகிறார்கள்.

 

இதற்கு காரணம் என்ன என்பதை கண்டறிய நிகழ்வு தான் எந்த கதைக்கான களமாக உள்ளது. இந்தப் படத்தில் செஞ்சிக் கோட்டைக்கு இடையே உள்ள தொடர்பையும் அங்கு நிகழக்கூடிய அமானுஷ்யங்கள் பற்றியும் இவர்கள் கூறப் போகிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …