“காடு போல முடி அடர்த்தியாய் வளர..!” – இந்த டிப்ஸ் யூஸ் பண்ணுங்க..!

இளம் வயதிலேயே இன்று முடி உதிர்தல் தொல்லை அதிகரித்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் இவர்களுக்கு இள நரை ஏற்படுவது சகஜமான ஒன்றாகிவிட்டது.

இந்த சூழ்நிலையில் இவர்களின் கூந்தல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது எப்படி என்பது பற்றிய டிப்ஸை இந்த கட்டுரையில் நீங்கள் படிப்பதின் மூலம் உங்களுக்கு நீளமான அடர்த்தியான கூந்தல் அமைவதற்கு கட்டாய வாய்ப்புகள் உள்ளதால் தவிர்த்து விடாமல் படித்து விடுங்கள்.

Hair Growth

நமது உடலை எவ்வளவு வலிமையாக வைத்துக் கொள்கிறோமோ அந்த அளவுக்கு வலிமையாக தலைமுடியை வைத்துக் கொள்வது மிகவும் அவசியமாகும். இதற்கு போதுமான அளவு ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் கிடைத்தால்  தலை முடி உதிராது.

உச்சந்தலையில் உங்கள் முடி வளர்ச்சியை அதிகரிக்க தேங்காய் எண்ணெயை லேசாக சூடு செய்து மசாஜ் செய்வது மட்டுமல்லாமல் உங்கள் மன அழுத்தத்தை குறைத்துக் கொண்டால் நிச்சயமாக முடி வளர்ச்சி அதிகரிக்கும்.

உங்கள் கூந்தலுக்கு ஏற்ற இயற்கை ஷாம்புவை பயன்படுத்துவது மிகவும் நல்லது. வறட்சியான கூந்தல் இருப்பவர்கள் ஈரப்பதத்தை தரும் ஷாம்புவை தேர்வு செய்வதின் மூலம் உங்கள் முடி வலிமையாகும்.

Hair Growth

ஆரோக்கியமான இரும்பு சத்து அதிகம் இருக்கக்கூடிய உணவுகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதின் மூலம் உங்கள் கூந்தல் வளர்ச்சியை சீராக்க முடியும். அது மட்டுமல்லாமல் முடி உதிர்தலை நீங்கள் தவிர்த்து விடலாம்.

வாரத்திற்கு இருமுறை உங்கள் தலைமுடியை நன்கு அலசி சுத்தம் செய்யுங்கள். உச்சந்தலை சுத்தமாக இருப்பது மிகவும் அவசியமானது.அதற்கு மென்மையான ஷாம்பூக்களை கொண்டு உங்கள் கூந்தலை கழுவுவது சிறப்பாக இருக்கும்.

வெங்காயச் சாறு கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க கூடிய தன்மை கொண்டதால் இந்தச் சாறை எடுத்து உங்கள் முடிவின் வேர் கால்களில் வரை பரவ நன்கு அழுத்தம் கொடுத்து தேய்த்து விடுவதின் மூலம் முடி உதிர்தல் பிரச்சனை ஏற்படாது.

Hair Growth

உச்சந்தலை சூடேறி விடாமல் இருக்க கற்றாழையை நீங்கள் பயன்படுத்துவது மிகவும் நல்லது. கற்றாழை  குளிர்ச்சித் தன்மையை   உடலுக்கு கொடுப்பதோடு மட்டுமல்லாமல் உச்சந்தலையின் ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்ள உதவி செய்யும்.

வெந்தயத்தை அரைத்து ஹேர் பேக் ஆக நீங்கள் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் முடி உதிர்வதை குறைத்து ஆரோக்கியமான முடி வளர்ச்சியை எளிதில் பெற முடியும்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …