“மேக்கப்பே போடாம சோக்கா உங்கள காட்ட..!” – இந்த வழிகள யூஸ் பண்ணுங்க..!!

கெட்டப்ப மாத்தி, மேக்கப் போட்டு இன்று இருக்கக்கூடிய பெண்கள் தங்களை அழகாக வெளிப்படுத்த அதிக அளவு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். அதற்காக  பெரும் அளவு பணத்தை செலவு செய்து இவர்கள் அதற்குரிய பொருட்களை வாங்கி தங்களின் அழகை மேலும் அழகு சேர்க்க முயற்சி செய்கிறார்கள்.

எனினும் செயற்கை அழகுக்கு முன் இயற்கை அழகு என்பது ஒரு அற்புதமான விஷயம் என்பதை புரிந்து கொள்ளுங்கள். அது முகத்துக்கு போடுகின்ற ஒப்பனையாக இருந்தாலும் சரி உங்கள் கூந்தலுக்கு செய்கின்ற அலங்காரமாக இருந்தாலும் இயற்கை அழகுக்கு என்று ஒரு தனி மவுஸ் என்றும் உள்ளது.

அந்த வகையில் மேக்கப் போடாமல் உங்களை அழகியாக காட்டிக் கொள்ள இந்த டிப்சை ஃபாலோ செய்தால் போதுமானது.

மேக்கப்பே இல்லாமல் ஜொலி ஜொலிக்க சில டிப்ஸ்

💐உங்கள் முகம் மற்றும் சருமத்தை எப்போதும் வறட்சி இல்லாமல் ஈரப்பதத்தோடு வைத்துக்கொள்ள நீங்கள் முதலில் அதிகளவு நீர்ச்சத்து இருக்கக்கூடிய பொருட்களை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் சரும வறட்சி ஏற்படாமல் உங்கள் சருமம் ஆரோக்கியமாக பளபளக்கும்.

💐பதப்படுத்தப்பட்ட உணவு, சர்க்கரை, ஆல்கஹால் ஆகியவற்றை அதிகளவு உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளாமல் காய்கறிகள் புரதங்கள் நிறைந்த பொருட்களை எடுத்துக் கொள்வதின் மூலம் உங்கள் சருமம் ஆரோக்கியமாக இருக்கும்.

💐அடிக்கடி நீரை பருகுவதின் மூலம் உங்கள் சருமம் ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் இருக்கும். ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 10 ல் இருந்து 12 டம்ளர் அளவு தண்ணீரை நீங்கள் குடிப்பதின் மூலம் உங்கள் சரும சருமம் ஆரோக்கியமாக பளபளப்பாக இருக்கும்.

💐தினமும் காலை எழுந்தவுடன் ஒரு கிளாஸ் எலுமிச்சம் நீரை குடிக்க பழகிக் கொள்ளுங்கள். தேங்காய் எண்ணெயை மாயசரைசலாக பயன்படுத்துங்கள். வெயிலுக்குச் சென்று வந்தால் கற்றாழையை உங்களுக்கு ஃபேஸ் பேக்காக பயன்படுத்திக் கொள்ளலாம்.

💐அதுமட்டுமல்லாமல் தினமும் உடற்பயிற்சியை மேற்கொள்வது உங்கள் மனநிலையை நேர்மறையாக வைத்துக் கொள்ளுதல், யோகா போன்றவற்றை செய்வதின் மூலம் உங்கள் உடல் அழகு மேலும் மெருகேறும்.

மேற்கூறிய இந்த வழிகளை நீங்கள் ஃபாலோ செய்வதின் மூலம் அதிக அளவு ஒப்பனைப் பொருட்கள் இல்லாமலேயே உங்களை இயற்கையான முறையில் அழகாக வெளிப்படுத்த முடியும்.

--- Advertisement ---

Check Also

ratan tata

ரத்தன் டாடாவின் மோசமான அந்த பழக்கம் என்ன மனுஷன்யா நீ.. டாடா இறப்பதற்கு பின் தெரிந்த உண்மை..

இருந்தாலும் மறைந்தாலும் ஊர் சொல்ல வேண்டும் என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப நம்மை விட்டு பிரிந்து சென்ற இந்திய தொழில் …