” என்ன செய்தாலும் முடி உதிர்தல் நிற்கவில்லையா..!” இத செய்தா முடி உதிர்வு பேச்சுக்கே இடமில்லை..!

முடி உதிர்வு பிரச்சனையால் இன்றைய இளம் தலைமுறை அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று கூறலாம். அது மட்டும் அல்லாமல் இந்த பிரச்சனை காரணமாக அவர்களிடையே மன அழுத்தமும் நிரம்பி வருகிறது.

 இதற்கு என்ன காரணம் என்று யோசித்துப் பார்த்தால் நான் பாரம்பரிய வழிகளை பின்பற்றாமல்  செயற்கை பொருட்களின் மீது அதிக அளவு நாட்டம் கொண்டு விட்டதால் உடலில் ஏற்பட்டிருக்கக் கூடிய சமநிலை மாறுபாடு காரணமாக இத்தகைய பிரச்சனைகள் ஏற்படுகிறது.

 இந்தப் பிரச்சினைகளுக்கு எண்ணற்ற வழிமுறைகளை தேடி செல்லும் இளம் தலைமுறைகினர் இன்று இதில் கூறப்பட்டிருக்கும் மூன்று பொருட்களை வாரத்தில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தி பார்த்தால் போதும் நிச்சயமாக முடி உதிர்வு என்ற பேச்சுக்கே இடம் இருக்காது.

இது அதிக செலவுகளை ஏற்படுத்தாத இந்த அற்புதமான மூன்று பொருட்களை நீங்கள் எளிதில் பெற முடியும். அதன் மூலம் நீங்கள் முடி உதிர்வை சமாளிப்பதோடு உங்கள் முடி அடர்த்தியாக வளர்வதற்கான தூண்டுதல்களையும் இது ஏற்படும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

முடி உதிர்வதை தடுக்கும் முக்கிய பொருட்கள்

1.கருஞ்சீரகம் 2 டேபிள் ஸ்பூன்

2.வெந்தயம் இரண்டு டேபிள் ஸ்பூன்

3.தேங்காய் எண்ணெய் 200 மில்லி

முதலில் கருஞ்சீரகத்தை நன்கு பொடியாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அது போலவே வெந்தயத்தையும் நீங்கள் அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளலாம்.

இதனை அடுப்பில் ஒரு பெரிய பாத்திரத்தை வைத்து அதில் நீர் ஊற்றி சிறிய கிண்ணத்தில் தேங்காய் எண்ணெயை விட்டு அதில் அரைத்து வைத்திருக்கும் கருஞ்சீரகம் மற்றும் வெந்தய பொடியை நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

 இந்த எண்ணெய் கிண்ணத்தை கொதிக்கும் தண்ணீரில் வைத்து கொட்டி விடாமல் மிதமாக சூடேற்ற வேண்டும். இது சூடான பின்பு அடுப்பினை அணைத்து விடவும்.

 இதனை அடுத்து அந்த சூடான மூன்று கலவைகளையும் வெளியே எடுத்து வைத்து விட்டு இளம் சூட்டில் தலைக்கு குளிப்பதற்கு முன்பு உச்ச தலையில் நன்கு அழுத்தம் கொடுத்து வியக்கால்கள் வரை எண்ணெய் பரவும் படி பார்த்து பக்குவமாக தேய்க்க வேண்டும்.

பிறகு தலை முழுவதும் மசாஜ் செய்து விடவும். இதனை அடுத்து ஒரு மணி நேரம் அல்லது 2 மணி நேரம் கழித்து மிதமான ஷாம்புவில் தலைக்கு தேய்த்து குளித்தால் போதுமானது.

இதனை தொடர்ந்து வாரம் ஒருமுறை நீங்கள் செய்யும் போது உங்கள் முடி உதிர்வு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வாக அமைவதோடு புதிய முடிகள் எளிதில் வளரக்கூடிய வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version