குளிர்காலத்தில் ஏற்படும் உதடு வெடிப்புகளை சரி செய்யும் இயற்கை லிப் பாம்..! – பார்க்கலாம் வாங்க…!

குளிர்காலத்தில் பொதுவாக உடலில் மட்டுமல்ல உதட்டிலும் வெடிப்புகள் ஏற்படுவது வாடிக்கைதான். அந்த வெடிப்புகளை சரி செய்யக்கூடிய இயற்கை லிப்பாம் – மை நாம் பயன்படுத்தும் போது அதீத கவனத்தோடு செயல்படுவது மிகவும் அவசியமான ஒன்று.

மார்கழியில் நம்மை உலுக்கி எடுத்த குளிர் தை மாதத்தில் தரையெல்லாம் நடுங்கும் என்று சொன்னது உண்மைதான் என்று உணர்த்தக் கூடிய வகையில் குளிரின் கொடுமை தற்போது பரவலாக தமிழகத்தில் எல்லா பகுதிகளிலும் உள்ளது.

குறிப்பாக பெண்களின் உதடுகள் வெளிறிய நிலையில் எரிச்சல் வெடிப்பு, வறட்சி போன்றவை அதிக அளவு ஏற்படுகிறது.

உடலில் இருக்கும் தோல்களிலேயே அதிகளவு மென்மையாக இருக்கக்கூடிய தோல்களைக் கொண்டிருக்கக் கூடிய முகத்தில் இருக்கும் இந்த உதடு வெடிப்பு காரணமாக ரத்தம் வடிதல், உதடு சிவந்த நிறமாய் மாறிவிடுதல் போன்றவை ஏற்படுகிறது.

 இதனை சரி செய்வதற்காக நாம் லிப் பாம் மாய்ஸ்ரைசர் போன்றவற்றை பயன்படுத்துகிறோம். இதன் மூலம் உதட்டில் இருக்கக்கூடிய அந்த சரும வறட்சி நீங்கும்.

 மேலும் உதடுகளை சுற்றி வெடிப்பு ஏற்படுவதற்கான காரணம் நமது உடலில் வைட்டமின் பி2 குறைவாக இருக்கக்கூடிய தன்மை தான். எனவே இந்த காலகட்டத்தில் நீங்கள் பி2 சத்துள்ள காய்கறிகளை உணவில் போதுமான அளவு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

 லிப் பாம் பயன்படுத்துவதற்கு பதிலாக இயற்கையாக இருக்கும் வெண்ணையை இரவு உறங்குவதற்கு முன்பு நீங்கள் உங்கள் உதடுகளில் பூசிக் கொள்வதின் மூலம் செயற்கையாக உண்டாக்கப்படும் வேதிப்பொருட்களால் ஏற்படும் பாதிப்புக்களில் இருந்து தப்பித்துக் கொள்ள முடியும்.

 அதுமட்டுமல்லாமல் சரும வளர்ச்சியை தடுப்பதற்காக சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்ள அடிக்கடி தண்ணீரை குடிக்க வேண்டும். மேலும் நீங்கள் அதிக அளவு பழங்கள், காய்கறிகளை சேர்த்துக் கொள்ளும் போது உடலில் நீர் சம நிலையில் இருக்கும்.

 மேலும் மரச்செக்கில் ஆட்டிய சுத்தமான தேங்காய் எண்ணெயை உதட்டில் தடவுவதன் மூலம் உதடு வெடிப்பிலிருந்து நாம் தப்பித்துக் கொள்ளலாம். அது மட்டுமல்லாமல் பன்னீரை பஞ்சால் நனைத்து அவ்வப்போது இரவு உறங்குவதற்கு முன்பு உங்கள் உதட்டில் தடவி வர வெடிப்புகள் குணமாகும்.

உங்கள் உதட்டில் இருக்கும் கருப்பு நிறம் மறைய இயற்கையான நிறம் கிடைக்க இது போன்ற இயற்கை வழிமுறைகளை நீங்கள் ஃபாலோ செய்தால் போதும.லிப் பாம் தேவை இல்லை.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam