பாதம் கருமை நீங்க : உடலுக்கு கொடுக்கின்ற முக்கியத்துவத்தை உடலை தாங்கி நிறுத்துகின்ற பாதங்களுக்கு தருகிறோமா என்றால் அது சற்று சந்தேகமானது தான். முக அழகைத் பாதுகாக்க நினைக்கக்கூடிய பலரும் பாத பராமரிப்பில் அதிக அக்கறை செலுத்துவதில்லை.
அதனை சரி செய்து பியூட்டி பார்லருக்கு செல்லாமலேயே பாதங்களில் இருக்கும் கருமை நிறத்தை போக்கி கால்களை அழகாக பராமரிக்க கூடிய சில பெடிக்யூர் வழிமுறைகளை வீட்டில் எப்படி செய்யலாம் என்பதை படித்து தெரிந்து கொள்ளலாம்.
பெடிக்யூர் வழிமுறைகள்
முதலில் நீங்கள் உங்கள் பாதம் நகங்களில் நைல்யில் பாலிஸ் போட்டிருந்தால் அதை நைல்பாலிஸ் ரிமூவர் கொண்டு நீக்கி விட வேண்டும்.
இதன் பிறகு ஒரு அகண்ட பாத்திரத்தில் கால் பொறுக்கக்கூடிய சூடு நிறைந்த நீரை நிரப்பி அதில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவு ஷாம்பை கலந்து உங்கள் கால்களை ஐந்து நிமிடம் வரை அதில் ஊற விட வேண்டும்.
ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு காலை மேலே தூக்கி வைத்துக் கொண்டு பிரஸ்சினால் வெளிப்புறப் பகுதி மற்றும் உள் பகுதிகளை நன்கு தேய்த்து விடவும்.
பிறகு அந்த நீரினை கொட்டி விட்டு வேறு இளம் சூடாக இருக்கும் நீரில் ஒரு டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் எலுமிச்சை சாறு பிழிந்து உங்கள் கால்களை அந்த நீரில் ஊற விட வேண்டும்.
மேலும் சாறு பிழிந்து வைத்திருக்கின்ற எலுமிச்சை தோலை உங்கள் பாதங்களில் நன்றாக மசாஜ் செய்து தேய்ப்பது சிறப்பாக இருக்கும். இதனை அடுத்து பியூமிக் கல்லை பயன்படுத்தி குதிங்கால்களை நன்கு தேய்க்க வேண்டும்.
இதனை அடுத்து ஒரு பவுலில் இரண்டு ஸ்பூன் காபி பொடி இரண்டு ஸ்பூன் சர்க்கரை ஒரு டீஸ்பூன் கத்தாழை ஜெல் பாதி எலுமிச்சை இவற்றை எல்லாம் ஒரு பேஸ்ட் போல் மாற்றி அதை கால்களில் நன்கு தடவி ஐந்து நிமிடம் ஊற விடவும்.
இது ஊறிய பிறகு உங்கள் கால்களை நன்றாக தேய்த்து கழுவ வேண்டும். இதனை அடுத்து உங்கள் கால்களை குளிர்ந்த நீரில் சுத்தமாக காட்டன் துணி கொண்டு துடைக்கவும். கடைசியாக மாய்ஜ்சரைசர் கிரீம் ஏதேனும் இருந்தால் அதை உங்கள் கால்களில் தடவி ஐந்து நிமிடம் மசாஜ் செய்து விடுங்கள்.
உங்கள் பாதங்களில் இருக்கும் கருப்பு நிறம் மெல்ல மெல்ல போவதோடு இருக்கும் இறந்த செல்கள் அனைத்தும் நீங்கி பார்ப்பதற்கே பாதம் பக்காவாக காட்சி அளிக்கும்.