மலச்சிக்கலை தீர்க்கும் இயற்கை வழிகள்.

மலச்சிக்கல் மனிதனுக்கு பல சிக்கலைத் தரும் என்பது பழமொழி மட்டுமல்ல ,மலச்சிக்கலால் பாதிக்கப்படும் நபர்கள் பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.  

மலசிக்கலை குணப்படுத்த சில வழிமுறைகள்

 நார்ச்சத்து நிறைந்த கோதுமை, கேழ்வரகு ,திணை, வரகு, கொள்ளு போன்ற தானிய உணவு வகைகள் மலச்சிக்கலைத் தவிர்க்க உதவும். எனவே முழு தானியங்கள் ஏதாவது ஒன்றை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. 

அதிக அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். இரவில் படுக்கச் செல்லுமுன் வெதுவெதுப்பான சுடு நீரை குடிப்பது மிகவும் நல்லது. காலையில் எளிதாக மலம் கழிக்க இவை உதவிகரமாக இருக்கும். 

புகை ,மது இவற்றை உபயோகப்படுத்தக்கூடாது. அதுமட்டுமல்ல பொரித்த உணவுகளுக்கு பதிலாக பழங்கள், காய்கறிகள் எடுத்துக் கொள்ள வேண்டும் .கொய்யாப்பழத்தை விதையுடன் உண்ண வேண்டும். இது குடலியக்கத்தை சீராக்கி அதோடு உள் அடுக்குகள் இருக்கும் இறுக்கத்தை நீக்கி மலச்சிக்கலை நீக்கும். 

பப்பாளி பழம் சிறந்த மலமிளக்கியாகவும் இரவு உணவின்போது ஒரு கோப்பை பப்பாளிப்பழத்தை  பப்பாளிப் பழச்சாற்றை அருந்தினால் மிக நல்ல பலன் கிடைக்கும். 

பசலைக்கீரை, வல்லாரைக் கீரை, முருங்கைக் கீரை இதில் ஏதேனும் ஒன்றை தேங்காய் சீரகம் சேர்த்து உணவில் சேர்த்து வர மலச்சிக்கல் தீரும். 

வெள்ளரிக்காய், வெள்ளரி பழம் போன்றவை மலச்சிக்கலுக்கு வராமல் காத்துக் கொள்ளும் அதுபோல் அத்திப்பழம், பேரீச்சம்பழம் போன்றவற்றை தினமும் சாப்பிடும் போது மலச்சிக்கல் ஏற்படாது. 

இரவில் கடுக்காய் கஷாயம் அல்லது திரிபலா சூரணம் சாப்பிட்டு வருவதன் மூலம் மலச்சிக்கல் பிரச்சனைக்கு நிவாரணம் கிடைக்கும். 

விளக்கெண்ணை ,வேர்க்கடலை, இஞ்சி எண்ணெய் போன்றவற்றை இரவில் படுக்கும் போது ஒரு ஸ்பூன் அளவுக்கு குடித்து விட்டு படுத்தால் காலையில் மலம் மிக எளிதில் வந்துவிடும்.

குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்பட்டால் பச்சை திராட்சை அல்லது கருப்பு திராட்சையில் சாறை கொடுப்பதின் மூலம் மலச்சிக்கல் நீங்கும். 

அதேபோல் சப்போட்டா பழத்தை பாதியாக எடுத்து மேலிருக்கும் கொட்டைகளை நீக்கிவிட்டு சதைப்பகுதியை நன்கு மசித்து குழந்தைகளுக்கு கொடுத்து வர குழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல் தீரும்.

மிக முக்கியமாக மலம் கழிக்கும் எண்ணம் வந்தவுடன் கழிவறைக்கு உடனே சென்றுவிடவேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் மலம் கழிப்பதை தள்ளிப் போடக்கூடாது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam