வயநாடு நிவாரண நன்கொடை.. கிண்டல் செய்த நெட்டிசன்.. நவ்யா நாயர் கொடுத்த நெத்தியடி பதில்..!

கேரளாவில் வடநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஏறத்தாழ 300க்கும் அதிகமானோர் மண்ணில் புதைந்து உயிரிழந்த சம்பவம் நாட்டையே பெரும் சோகத்திற்கு உள்ளாக்கியது .

இந்த இயற்கை பேரிடர் கேரள மாநிலம் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் கடந்த 30ஆம் தேதி அதிகாலை வயநாடு மாவட்டம் மேம்பாடி அடுத்த சூழல் மலைப்பகுதியில் திடீரென இந்த நிலச்சரிவு ஏற்பட்டது.

வயநாடு நிலச்சரிவு:

வெறும் 2 மணி நேரத்தில் அதாவது அதிகாலை 4.30 மணி அளவில் மேம்பாடிக்கு அருகில் உள்ள பகுதியில் மற்றொரு நிலவு சரிவு ஏற்பட்டது.

இதில் மேம்பாடி , சூழல்மலை, முண்டக்கை, வைத்திரு , வெள்ளரிமலை, புத்தகலூர் உள்ளிட்ட பலிட்ட கிராமங்கள் கடுமையான பாதிக்கப்பட்டு பல உயிர் பலிகள் அதிகமானது.

மக்கள் எல்லோரும் தூங்கிக் கொண்டிருந்தபோது இந்த நிலச்சரிவு ஏற்பட்டதால் அங்கு என்ன நடக்கிறது என்பதை யாராலும் உணரக்கூட முடியாத அளவுக்கு அடுத்தடுத்த உயிர்பலிகள் அதிகரித்துவிட்டது .

மேலும் உதவிக்கு யாரும் வர முடியாதுதால் அங்கு மிக குறுகிய நேரத்திலே உயிர் பலிகள் எண்ணிக்கை அதிகரித்தது.

பல வீடுகள் அனைத்தும் மண்ணால் மூடப்பட்டு அடையாளம் தெரியாத அளவுக்கு பலியானவர்களின் உடல்கள் தோண்டப்பட்டது.

மிகவும் கொடுமையான பேரிடர். மனதை ரணம் ஆகியது. இதில் இதுவரை 300க்கும் அதிகமானோர்.

பத்திரமாக மீட்கப்பட்டுள்ள நிலையில் ஆரம்பத்தில் 100 முதல் 150 வரை உயிரிழப்பு இருக்கிறது என கூறப்பட்டது .

தற்போதைய நிலவரப்படி உயிர் பலி எண்ணிக்கை 300-க்கும் அதிகமாக இருப்பதாக அதிகமான சடலங்கள் மீட்டெடுக்கப்படுகின்றன என கேரளா அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

மேலும் தோண்ட தோண்ட உயிர் சடலங்கள் வருவதால் உயிரிழப்பின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அச்சப்படுகிறது.

நிவாரண நன்கொடை:

இந்த நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நடிகர் , நடிகைகள் பலரும். தங்களால் முடிந்த நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார்கள்.

அந்த வகையில் தமிழில் அழகே தீயே ,ராமன் தேடிய சீதை, மாய கண்ணாடி உள்ளிட்ட சில திரைப்படங்களின் நடித்த நடிகை நவ்யா நாயர் தனது பங்களிப்பாக ரூபாய் ஒரு லட்சம் நிவாரண நிதி வழங்கியுள்ளார்.

அதனை தனது பெற்றோர் மற்றும் மகனுடன் இணைந்து முதல்வர் நிவாரண நிதி பிரிவு அதிகாரிகளிடம் வழங்கினார்கள் .

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது instagram-ல் வெளியிட்ட நவ்யா நாயர் தற்போது நான் குமுளி பகுதியில் ஒரு படப்பிடிப்பில் இருக்கிறேன்.

என்னால் இதில் கலந்துகொண்டு நேரில் சென்று தொகை வழங்க முடியவில்லை. இதனால் எனது மகன் மற்றும் பெற்றோர் மூலம் நிவாரண நிதி வழங்கியதாக கூறியிருந்தார்.

நவ்யா நாயர் நெத்தியடி பதில்

இந்த பதிவுக்கு விமர்சனம் செய்திருந்த நீட்டிசன் ஒருவர்” ஐந்து ரூபாய் நன்கொடை கொடுத்தால் பத்து பேரிடம் சொல்ல வேண்டுமா?’ என சமூக வலைதளவாசி ஒருவர் கருத்து தெரிவித்திருந்தார்.

அதற்கு பதிலளித்த நவ்யா…. எல்லாவற்றிலும் குற்றம் கண்டுபிடிப்பதற்கு பதிலாக உங்களுடைய மனது என்ன சொல்கிறதோ அதை நீங்கள் கொடுங்கள்.

உங்களுக்கு அப்படி ஒரு புகைப்படத்தை பதிவிடுவது சரியாக தோன்றவில்லை என்றால் நீங்கள் அதை செய்யாதீர்கள் என்று பதிலடி கொடுத்தார் .

நவ்யா நாயரின் இந்த பதிலுக்கு நெட்டிசன்கள் பலரும் தங்களது ஆதரவையும் பாராட்டுகளையும் தெரிவித்து அந்த நபரை திட்டி வருகிறார்கள்.

பல நட்சத்திரங்கள் இதேபோன்று 10 லட்சம் 20 லட்சம் என கொடுத்து வருவதால் ஒரு லட்சம் என்பது கூட சிலரின் பார்வையில் ரொம்பவே குறைவான தொகையாக இருப்பது தான் இந்த கிண்டலுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. ஆனால் பல பேர் நவ்யா நாயரின் இந்த செயலை பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam