சினிமாவுக்காக தன் லட்சிய கனவை தொலைத்த நடிகை நயன்தாரா..! உருக்கமான பேச்சு..!

கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட நடிகை நயன்தாரா தென்னிந்திய திரை உலகில் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் முன்னணி நடிகையாக விளங்குகிறார்.

இதனை அடுத்து அண்மையில் தமிழ் இயக்குனர்களில் ஒருவரான அட்லி இயக்கிய ஜவான் திரைப்படத்தில் ஷாருக்கானோடு இணைந்து நடித்த பாலிவுட் திரை உலகிற்கு என்ட்ரி கொடுத்து அங்கும் தனது அசாத்திய திறமையால் ரசிகர்கள் பலரை ஈர்த்திருக்கிறார்.

நடிகை நயன்தாரா..

தமிழ் திரை உலகப் பொருத்த வரை நடிகை நயன்தாரா சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரோடு இணைந்து ஐயா திரைப்படத்தில் அறிமுகமானதை அடுத்து அடுத்தடுத்து படங்களில் நடிக்க கூடிய வாய்ப்பை பெற்றார்.

ஆரம்ப காலத்தில் திரைப்படம் திரு தன்னை நிலை நிறுத்திக் கொள்ள கவர்ச்சி காட்டி நடித்த நடிகை நயன்தாரா பில்லா படத்தில் 2 பீஸ் உடையில் கூட நடித்திருக்கிறார்.

அந்த வகையில் பில்லா படத்தில் தனது அசாத்திய நடிப்புத் திறனை வெளிப்படுத்திய இவர் ஒவ்வொரு படத்திலும் தனது நடிப்பை பக்குவமாக வெளிப்படுத்துவதின் மூலம் இளைஞர்களின் கனவு கன்னியாக மாறினார்.

ஒரு காலகட்டத்தில் கவர்ச்சியை கைவிட்டு பெண்களுக்கு முக்கியத்துவம் தரக்கூடிய கேரக்டர்களை தேர்வு செய்து நடிக்க ஆரம்பித்த இவர் என்றுமே எவர்கிரீன் நடிகையாகவும் நடிகையர் திலகம் சாவித்திரியை போல முன்னணியில் அதிக சம்பளம் பெறும் நடிகையாக விளங்குகிறார்.

இந்நிலையில் திரைப்படங்களில் நடிக்கும் போது இவரைப் பற்றி பல்வேறு விமர்சனங்கள் வெளி வந்த போதும் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டு வாடகை தாயின் மூலம் இரண்டு குழந்தைகளுக்கு தாயாராகிவிட்டார்.

சினிமாவுக்காக தன் லட்சிய கனவை தொலைத்தாரா?

இவர் திரைப்படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் தொழில் முனைவோராக திகழும் நடிகை நயன்தாரா பல்வேறு தொழில்களில் முதலீடு செய்து இருப்பது மட்டுமல்லாமல் அழகு சாதன பொருட்களின் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடிய நயன்தாரா சமீபத்திய பேட்டி ஒன்று சினிமா துறைக்கு தான் வராமல் இருந்திருந்தால் என்ன ஆகி இருப்பார் என்பது பற்றி விரிவாக சொல்லி இருக்கிறார்.

அந்த வகையில் இவர் சி ஏ என்று சொல்லப்படும் சேட்டன்ட் அக்கவுண்டன்ட் படிப்பில் மிகவும் ஆர்வம் கொண்டு இருந்தவராக இருந்திருக்கிறார். இவர் ஒருவேளை சினிமாவில் நடிக்காமல் போயிருந்தால் நிச்சயமாக ஒரு ஆடிட்டராக வந்திருப்பார்.

இப்படி இவர்களது உறவினர்கள் ஒருமித்த குரலில் சொல்லி வருவதோடு திரைத்துறைக்காக தனது சிஏ கனவை தவிர்த்து என்று மாபெரும் நடிகையாக மாறி இருக்கிறார் என்று புகழாரம் சூட்டுகிறார்கள்.

உருக்கமான பேச்சு..

இந்நிலையில் திரைத்துறைக்காக தன்னுடைய லட்சியத்தை தொலைத்த நயன்தாரா பற்றிய விஷயங்கள் இணையங்களில் வேகமாக பரவி ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகிவிட்டது.

மேலும் அண்மையில் இவர் நடிப்பில் வெளி வந்த அன்னபூரணி திரைப்படம் இவருக்கு போதிய வரவேற்பை கொடுக்காத நிலையில் இனி வரும் படங்களில் ஆவது இவர் தன்னை நிலை நிறுத்தக்கூடிய வகையில் நடித்திருப்பாரா என்பது விரைவில் தெரியவரும்.

அது வரை நாம் காத்திருப்பது மிகவும் அவசியமான ஒன்று. இதனை அடுத்து நயன்தாராவின் லட்சியம் பற்றி விவரம் தெரியாத தங்களது நண்பர்களுக்கும் இந்த விஷயத்தை விரிவாக சொல்லி ஷேர் செய்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version