இயக்குநர் அட்லியின் கட்டளைக்கு அடிபணிவாரா நயன்தரா?

பாலிவுட் ஸ்டார் ஷாருக்கான் நடிக்கும் ‘ஜவான்’ இந்தி படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்துவருகிறார். இப்படத்தின் இயக்குநர் அட்லி. ஏற்கனவே, அட்லி இயக்கத்தில் ராஜா ராணி, பிகில் படங்களில் நயன்தாரா நடித்துள்ளார்.

ஷாருக்கான் நடித்த ‘பதான்’ படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, ஜவான் படம் வர உள்ளதால், இந்த படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு பலமடங்கு அதிகரித்து இருக்கிறது.

இயக்குநர் அட்லி, நடிகை நயன்தாரா இருவருக்குமே, பாலிவுட்டில் இது முதல் படம் என்பது மிகவும் கவனிக்கத்தக்கது. இருவருமே, இந்த படத்தில் திறமையை நிரூபித்தால்தான், அடுத்தடுத்து பாலிவுட் பட வாய்ப்புகளை பெற முடியும்.

நயன்தாரா, நடிக்க வந்த ஆரம்ப காலத்தில் படுகவர்ச்சியாக சில படங்களில் நடித்தார். குறிப்பாக பில்லா மற்றும் வில்லு படங்களில், அவரது கிளாமர் எல்லை தாண்டிய கவர்ச்சியாக, ரசிகர்களின் கண்களுக்கு விருந்து படைத்தது.

அதன்பின், முக்கிய கேரக்டர்களில் நடிக்க துவங்கிய நயன்தாரா, கவர்ச்சிக்கு விடை கொடுத்தார். கம்பீரமான கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்து, லேடி சூப்பர் ஸ்டராக புகழ் பெற்றார்.

இந்தி படங்களில், நாயகிகளின் கவர்ச்சி தூக்கலாக இருக்கும் என்பதால், ஜவான் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகும் போதே, நயன்தாரா கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று கூற, அட்லியும் அதற்கான தேவை இல்லை என, அப்போது அதற்கு சம்மதித்தார்.

ஆனால், தற்போது ஜவான் படத்தில் சில காட்சிகளில் தூக்கலான கவர்ச்சி இருக்க வேண்டும் என, ஷாருக்கான் கூற, அதற்கு அட்லியும் ஒத்துக்கொண்டுள்ளார்.

ஏனெனில், இதற்கு முன் வந்த பதான் படத்தில், தீபிகா படுகோன் நீச்சல் உடையில், உச்சக்கட்ட கிளாமரை காட்டி, ரசிகர்களை சூடேற்றி இருந்தார். இது, கடுமையாக விமர்சிக்கப்பட்டாலும், ரசிகர்கள் ஏற்றுக்கொண்டதால் தான் படம், மெகா மெகா ஹிட் அடித்தது. 

 

எனவே, இப்போது ஜவான் படத்தின் நாயகி நயன்தாராவும், கவர்ச்சி காட்ட வேண்டும் என, அட்லி புது ஆர்டர் போட்டுள்ளார், 75 சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில், நயன்தாரா படத்தை விட்டு இனிமேல் விலகவும் முடியாது.

அதனால்,  கவர்ச்சியாக நடிப்பதில்லை என்ற தனது கொள்கை முடிவை மாற்றிக்கொண்டு, நீச்சல் உடையை மாட்டிக்கொண்டு நயன்தாரா தோன்றுவாரா? என்பதை பொறுத்திருந்தால், திரையில் காணலாம்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …