நயன்தாரா அடுத்த படத்தின் ஹீரோ யாரு தெரியுமா..? – தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இப்போது, பாலிவுட் ஸ்டார் ஷாருக்கான் நடிக்கும் ‘ஜவான்’ இந்தி படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்துவருகிறார். இப்படத்தின் இயக்குநர் அட்லி. ஏற்கனவே, அட்லி இயக்கத்தில் ராஜா ராணி, பிகில் படங்களில் நயன்தாரா நடித்துள்ளார்.ஷாருக்கான் நடித்த ‘பதான்’ படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, ஜவான் படம் வர உள்ளதால், இந்த படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு பலமடங்கு அதிகரித்து இருக்கிறது.

இயக்குநர் அட்லி, நடிகை நயன்தாரா இருவருக்குமே, பாலிவுட்டில் இது முதல் படம் என்பது மிகவும் கவனிக்கத்தக்கது. இருவருமே, இந்த படத்தில் திறமையை நிரூபித்தால்தான், அடுத்தடுத்து பாலிவுட் பட வாய்ப்புகளை பெற முடியும்.
இந்த படத்தை முடித்து விட்டு, தனது 75வது படத்தில், நயன்தாரா நடிக்க இருக்கிறார். இன்னும் படத்தின் பெயர் வைக்கப்படவில்லை. இப்போதைக்கு நயன்தாரா 75 என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இ்ந்த படத்தை இயக்கும் வாய்ப்பு புதுமுக இயக்குநர் ஒருவருக்கு தரப்பட்டுள்ளது.

நயன்தாரர நடிக்க உள்ள 75வது படத்தின் புதிய தகவல் ஒன்று அப்டேட் ஆகி உள்ளது. இந்த படத்தில் நயன்தாராவு்க்கு ஜோடியாக நடிப்பது ஜெய். இவர், ராஜா ராணி படத்தில் நயன்தாராவை காதலிப்பார். ஆனால், படத்தில் ஆர்யாவை, நயன்தாரா திருமணம் செய்துகொள்வார்.ராஜா ராணி படம் வெளிவந்து பல ஆண்டுகளுக்கு பிறகு, இந்த படத்தில் நயன்தாராவுக்கு ஜோடியாக நடிப்பது உறுதியாகி உள்ளது.

சுப்ரமணியபுரம், எங்கேயும் எப்போதும், ராஜா ராணி படங்களுக்கு பிறகு, ஜெய்க்கு பெரிய அளவில் படங்கள் பேசப்படவில்லை. இடையில் நடிகை அஞ்சலி, வாணிபோஜன் ஆகியோருடன், பலமாக கிசுகிசுக்கப்பட்டார். அஞ்சலிக்கு பிறகு, வாணி போஜனுடன் நெருங்கிய உறவில் இருந்த இவர், சமீபத்தில் பிரிந்து விட்டதாகக் கூறப்படுகிறது.இந்நிலையி்ல், ஜெய் பிறந்த நாளில் நயன்தாரா லேடீ சூப்பர் ஸ்டார் 75 போஸ்டர், ஜெய் படத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு, நயன்தாராவுடன் ஜோடி சேரும் ஜெய், இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டால், படமும் சிறப்பாக அமைந்தால், தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு ரவுண்டு வரலாம்.

அதேபோல், கடந்தாண்டு வந்த ஓ2, கனெக்ட் படங்கள், நயன்தாராவுக்கு எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. எனவே, தனது 75 வது படம் சிறப்பாக வர வேண்டும் என்பதற்காக, கும்பகோணம் பகுதியில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு கணவருடன் சென்று வந்திருக்கிறார். இந்த மூக்குத்தி அம்மனின் ஆசை நிறைவேறுமா, என காத்திருந்து பார்ப்போம்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …