முதன் முதலில் சிம்புவுடன் தான் அது நடந்துச்சு.. நயன்தாராவை அனுப்பி வைத்த இயக்குனர்..!

பல போட்டிகளையும் ஏற்ற இறக்கங்களையும் கண்ட பிறகு தற்சமயம் தமிழ் சினிமாவின் டாப் நடிகையாக இருந்து வருகிறார் நடிகை நயன்தாரா. தமிழ் சினிமாவிலேயே அதிகமாக சம்பளம் வாங்கும் ஒரு நடிகையாக நயன்தாரா இருந்து வருகிறார்.

நயன்தாராவின் சம்பளம் ஒரு படத்திற்கு 10 கோடியில் இருந்து 12 கோடி வரை இருக்கும் என்பது பலரின் கருத்தாக இருக்கிறது. நயன்தாராவின் காலகட்டத்தில் அவரைப் போலவே அறிமுகமான திரிஷா மாதிரியான மற்ற நடிகைகளே மூன்று கோடி, நான்கு கோடிகள்தான் சம்பளமாக பெற்று வருவதாககூறப்படுகிறது.

பெரும் மார்க்கெட் பெற்ற நடிகை:

அந்த அளவிற்கு நயன்தாராவின் மார்க்கெட் என்பது தமிழ் சினிமாவில் வளர்ந்து இருக்கிறது. அதே சமயம் நயன்தாரா கடந்து வந்த பாதையில் அவர் கண்ட சர்ச்சைகள் என்பது அதிகமாகவே இருந்து வந்துள்ளது.

ஆரம்பத்தில் சிம்புவுக்கும் நயன்தாராவுக்கும் இடையே இருந்த காதல் அதிக சர்ச்சையாகி வந்தது. மன ரீதியாக அது நயன்தாராவிற்கு அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியது. அதற்குப் பிறகு இயக்குனர் பிரபு தேவாவுடன் நயன்தாராவிற்கு உறவிருந்ததாக பேச்சுக்கள் இருந்து வந்தன.

ஆனால் இந்த பேச்சுக்கள் அனைத்தையும் உடைத்து நயன்தாரா தனக்கென தனி இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்திருக்கிறார். சிம்புவுடன் நயன்தாராவிற்கு காதல் இருந்த காலகட்டங்களில் அவர்கள் இருவரும் நெருங்கி இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

முதல் காதல்:

முதன்முதலில் வல்லவன் திரைப்படத்தின் மூலமாகத்தான் இவர்கள் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாக பேச்சுக்கள் உண்டு. வல்லவன் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த பொழுதுதான் நயன்தாரா சிம்புவை காதலிக்க துவங்கினார் என்று அந்த படத்தின் தயாரிப்பாளர் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

ஆனால் ஆரம்பத்தில் முதன்முதலில் நயன்தாரா நடிக்க இருந்த படமே சிம்புவின் படம்தான் என்று கூறப்படுகிறது. ஒருவேளை அப்பொழுதே சிம்புவின் திரைப்படத்தில் நயன்தாரா நடித்திருந்தால் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் பொழுதே சிம்புவின் காதலியாக இருந்திருப்பார் என்று கூறப்படுகிறது.

VZ துரை இயக்கத்தில் சிம்பு நடித்த தொட்டி ஜெயா திரைப்படத்தில் முதன்முதலில் கதாநாயகியாக நயன்தாராவைதான் தேர்ந்தெடுத்தனர். அந்த திரைப்படத்தின் ஆடிஷனில் நயன்தாரா நடித்த போது நயன்தாராவின் நடிப்பு இயக்குனருக்கு அவ்வளவாக ஏற்புடையதாக இல்லை.

அதனால் நயன்தாராவை அழைத்த இயக்குனர் உனக்கெல்லாம் நடிப்பு செட்டாகாது நீ கிளம்புமா என்று கூறி அனுப்பி இருக்கிறார். அதற்கு பிறகுதான் நயன்தாரா சரத்குமார் நடித்த ஐயா திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். தொட்டி ஜெயா திரைப்படத்தில் அதற்குப் பிறகு நடிகை கோபிகா கதாநாயகியாக நடித்தார். ஆனால் கோபிகா இப்பொழுது திரைத் துறையில் பிரபலமாக இல்லை நயன்தாராதான் பிரபலமாக இருக்கிறார்

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version