அசின் போட வேண்டியதை.. நயன்தாரா போட்டு.. முன்னணி நடிகையாக மாறிய கதை..! பலரும் அறியாத ரகசியம்..!

வாய்ப்புகள் விஷயத்தைப் பொறுத்தவரை மற்ற நடிகைகளுக்கு வாய்ப்புகளை விட்டுக் கொடுக்கக் கூடாது என்பதில் மிக கவனமாக இருக்கக் கூடியவர்தான் நடிகை நயன்தாரா. அவர் சினிமாவில் இவ்வளவு பெரிய உச்சத்தை தொட்டு இருக்கிறார் என்றால் அதற்கு முக்கியமான இரண்டு காரணங்கள் ஒன்று அவர் தேர்ந்தெடுக்கும் கதை.

மற்றொன்று நல்ல கதையாக இருந்து வேறு நடிகை அதில் நடித்தால் அதில் கண்டிப்பாக இவர் நடிப்பதற்கான முயற்சிகளை எடுப்பார் என்று சில பேச்சுக்கள் உண்டு.

வாய்ப்புக்கு முக்கியத்துவம்:

பிரபல நடிகரான ஆர்.ஜே பாலாஜி கூட ஒரு முறை பேட்டியில் பேசும் பொழுது மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் முதலில் நடிகை ஸ்ருதிஹாசனைதான் அம்மனாக நடிக்க வைக்க இருந்ததாக கூறினார். பிறகு அந்தக் கதையை கேட்ட விக்னேஷ் சிவன் அதை நயன்தாராவிடம் கூற இந்த கதை சிறப்பான ஒரு கதையாக இருக்கிறது என்று எண்ணிய நயன்தாரா அவர்தான் நடிப்பேன் என்று வான்டடாக கூறி சுருதிக்கு பதிலாக இவர் வந்து அந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

அதே மாதிரியான ஒரு சம்பவம் பில்லா திரைப்படத்திலும் நடந்து இருக்கிறது பில்லா திரைப்படம் அஜித் நடிப்பில் உருவாகி மாபெரும் வெற்றியை கொடுத்த ஒரு திரைப்படம். கிட்டத்தட்ட அஜித்துக்கே அது ஒரு முக்கியமான திரைப்படம் என்று கூற வேண்டும். இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடித்திருந்தார்.

அஜித் மற்றும் நயன்தாரா காம்பினேஷன் என்பது சினிமாவில் நல்ல வரவேற்பு பெற்ற ஒரு காம்பினேஷன் ஆகும். பில்லா திரைப்படத்தில் மிகவும் கவர்ச்சியான ஒரு காட்சி ஒன்று உண்டு. டூ பீஸ் ஆடை அணிந்து நயன்தாரா வரும் காட்சி ஒன்று இருக்கும்.

அஜித் படத்தில் வந்த வாய்ப்பு:

அந்த காட்சி காரணமாகத்தான் அந்த படத்தில் நயன்தாரா நடிக்கும் சூழலே ஏற்பட்டு உள்ளது. முதலில் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக அசின்தான் நடிப்பதாக இருந்தது. ஏனெனில் அப்போதைய காலகட்டத்தில் அசினுக்கு நல்ல வரவேற்பு இருந்து வந்தது. ஆனால் அசினை பொறுத்தவரை அதிக கவர்ச்சியான காட்சிகளில் அவர் நடிக்க மாட்டார்.

இதனால் டூப்பீஸ் உடையில் நடிப்பதற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார் அசின். அதனை தொடர்ந்துதான் அந்த திரைப்படத்தில் அசினிற்கு பதிலாக நயன்தாராவை நடிக்க வைத்திருக்கின்றனர். நயன்தாரா அந்த காட்சியில் நடித்த பிறகு அவருக்கு தமிழ் சினிமாவில் பெரிய வரவேற்பு கிடைக்க துவங்கியது.

அதனை தொடர்ந்து வாய்ப்புகளும் அவருக்கு அதிகரிக்க துவங்கியது அந்த வகையில் கதை தேர்ந்தெடுப்பதில் நயன்தாரா எப்பொழுதுமே தனிப்பட்ட கவனம் செலுத்த கூடியவர் என்பதற்கு இந்த நிகழ்வே ஒரு உதாரணமாக இருந்திருக்கிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version