பீரியட்ஸ் நேரத்தில் இதை செய்தால் வசதியாக இருக்கும்.. ரகசியம் உடைத்த நயன்தாரா..! தீயாய் பரவும் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கும் அளவிற்கு அதிக பிரபலமான ஒரு நடிகையாக இருந்து வருபவர் நடிகை நயன்தாரா. ஆரம்பத்தில் மலையாளத்தில் பெரிய நடிகையாக வேண்டும் என்பதுதான் நயன்தாராவின் பெரிய ஆசையாக இருந்தது.

ஆனால் மலையாளத்தில் அவருக்கு ஒரு சில திரைப்படங்களில்தான் வாய்ப்பு கிடைத்தது. தமிழில்தான் அதிக வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது. மேலும் மலையாளத்தை விட தமிழ் சினிமாவில்தான் நடிகைகளுக்கான சம்பளம் என்பது அதிகமாக இருக்கிறது.

இந்த நிலையில் ஐயா திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். நயன்தாராவிற்கு அடுத்து ரஜினி நடிப்பில் அவர் நடித்த சந்திரமுகி திரைப்படம் முக்கிய திரைப்படமாக அமைந்தது. அதனை தொடர்ந்து அவருக்கு பெரும் நடிகர்கள் திரைப்படங்களில் வாய்ப்புகள் கிடைக்க துவங்கின.

 

தமிழ்நாட்டில் வளர்ச்சி:

தமிழ் சினிமாவில் அப்போது நடிக்க நயன்தாரா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென தனி இடத்தை பிடித்திருக்கிறார். திருமணத்திற்கு பிறகும் கூட அவருக்கான வரவேற்பு என்பது குறையவில்லை. பெரும்பாலும் சினிமாவில் திருமணத்திற்கு பிறகு நடிகைகளுக்கான வரவேற்பு என்பது குறைய தொடங்கும்.

ஆனால் திருமணத்திற்கு பிறகும் பாலிவுட் சென்று ஜவான் திரைப்படத்தில் நடித்து அங்கும் பிரபலமாகி இருக்கிறார் நயன்தாரா.  அதனை தொடர்ந்து பாலிவுட்டிலும் அவருக்கு வரவேற்புகள் அதிகமாக துவங்கியிருக்கின்றன. இந்த நிலையில் தொடர்ந்து அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் நயன்தாரா இந்த நிலையில் நயன்தாரா.

புதிய தயாரிப்பு:

ஃபெமி நயன் என்கிற ஒரு நிறுவனத்தை தொடங்கி அதில் பெண்களுக்கான அழகு சாதன பொருட்களை விற்பனை செய்து வருகிறார் நயன் தாரா. தற்சமயம் அந்த அழகு சாதன பொருட்களில் பீரியட் பேட்களையும் விற்பனை செய்ய துவங்கியுள்ளார் நயன் தாரா.

 

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பதிவிட்டிருந்தார் நயன்தாரா. அதில் பெண்களுக்கு ஹார்மோன் தொடர்பாக ஏற்படும் மாற்றங்கள் அவர்களுக்கு நிறைய பாதிப்பை ஏற்படுத்துகின்றன. மேலும் இந்த மாதவிடாய் சமயங்களில் அது அவர்களுக்கு பெரிய பிரச்சனையாக இருக்கிறது.

எனவே மாதவிடாய் சமயங்களில் அவர்கள் நிறைய கஷ்டங்களை அனுபவிக்கின்றனர். அவர்களுடைய சௌகரியத்தை கருத்தில் கொண்டு ஃபெமி9 இந்த பொருளை அறிமுகம் செய்கிறது. இது கண்டிப்பாக பெண்களுக்கு சௌகரியமானதாக இருக்கும் என்று நம்புகிறோம்.

ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் பிரச்சனை ஏற்படும் போது அதை சமாளிக்க இது உங்களுக்கு உதவும் என்று நான் நம்புகிறேன் என்று பதிவிட்டு இருக்கிறார் நயன்தாரா. இந்த நிலையில் இந்த பதிவுதான் சமீபத்தில் அதிக வைரலாகி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version