கையில் பீரியட்ஸ் பேடுடன் நடிகை நயன்தாரா..! தீயாய் பரவும் வீடியோ..!

தமிழ் சினிமாவில் மற்ற எந்த நடிகைகளை விடவும் அதிகமான வரவேற்பு பெற்ற ஒரு நடிகையாக இருந்து வருபவர் நடிகை நயன்தாரா. தொடர்ந்து நயன்தாரா நடிக்கும் திரைப்படங்களுக்கு வரவேற்பு என்பது அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.

தமிழில் தற்சமயம் அதிகமான சம்பளம் வாங்கும் நடிகையாக நயன்தாரா இருந்து வருகிறார். ஆரம்ப காலகட்டங்களில் மலையாள சினிமாவில் பிரபலம் அடைவதா அல்லது தமிழ் சினிமாவில் பிரபலம் அடைவதா என்று இரண்டு ஆப்ஷன்கள் நயன்தாராவிற்கு இருந்தன.

அப்போதே மலையாள சினிமாவை விட தமிழ் சினிமாவில்தான் அதிக சம்பளம் வழங்கப்படுகிறது என்பதை அறிந்த நயன்தாரா தொடர்ந்து மலையாள சினிமாவில் ஈடுபாடு காட்டாமல் தமிழ் சினிமாவில் பிரபலம் அடைய துவங்கினார்.

சினிமாவில் வளர்ச்சி:

அதன்பிறகு நயன்தாரா குறித்து தொடர்ந்து நிறைய சர்ச்சைகள் தமிழ் சினிமாவில் வந்து கொண்டிருந்தன. ஆரம்பத்தில் நயன்தாரா சிம்புவை காதலித்து வந்தார் என்றெல்லாம் பேச்சுக்கள் இருந்தன. அதற்கு தகுந்தார் போல சில போட்டோக்களும் வெளியாகி அதிக வைரலாகி வந்தன.

அதன் பிறகு சிம்புவுக்கு நயன்தாராவுக்கும் ஏற்பட்ட மோதலின் காரணமாக அவர்கள் இருவரும் பிரிந்தனர். அதற்கு பிறகு நயன்தாரா நடிகரும் டான்ஸ் மாஸ்டருமான பிரபுதேவாவை காதலிப்பதாக செய்திகள் பரவி வந்த வண்ணம் இருந்தன.

ஆனால் அந்த காதலும் மிக நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை இந்த நிலையில் அவருடைய வாழ்க்கையில் வெற்றி பெற்ற காதல் என்றால் அது இயக்குனர் விக்னேஷ் சிவனோடு ஏற்பட்ட காதல்தான். தற்சமயம் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர்.

விற்பனையில் இறங்கிய நயன்:

இதற்கு நடுவே பெண்கள் அழகு சாதன பொருட்களை தயாரித்து விற்கும் வகையில் ஃபெமி நயன் என்கிற நிறுவனம் ஒன்றை தொடங்கினார் நயன்தாரா. ஆரம்பத்தில் இந்த நிறுவனத்திற்கான சில புகைப்படங்களையும் அவர் வெளியிட்டிருந்தார்.

முகத்திற்கு தேவையான அலங்கார கிரிம்கள் போன்றவற்றை ஆரம்பத்தில் இதில் விற்க துவங்கினார் நயன்தாரா. தற்சமயம் மாதவிடாய் காலங்களில் பயன்படுத்தப்படும் சானிட்டரி பேடுகளையும் தன்னுடைய பொருட்களில் சேர்த்து இருக்கிறார் நயன்தாரா.

பெண்களுக்கு தேவைப்படும் அத்தியாவசிய பொருளாக இந்த மாதவிடாய் சானிட்டரி பேடுகள் இருக்கின்றன. எனவே அவற்றை நேற்று வெளியிட்டு போட்டோ ஒன்றை வெளியிட்டு இருந்த நயன்தாரா அது குறித்த வீடியோ ஒன்றையும் வெளியிட்டு இருக்கிறார்.  பெண்கள் குறித்து ஆதரவாக பேசும் நயன்தாரா இந்த சானிடரி பேடுகளை குறைந்த விலைக்கு வழங்குவாரா என்பதுதான் இப்போது பேச்சாக இருந்த வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version