அதெல்லாம் பண்ண முடியாது.. சிவகார்த்திகேயனுடன் நடிக்க கிடுக்கு பிடி போட்ட நயன்தாரா..

கோலிவுட் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அனைவராலும் அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா. ஐயா திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நயன்தாரா அதற்குப் பிறகு தொடர்ந்து வாய்ப்புகளை பெற்றார்.

அவர் நடித்த ஐயா, சந்திரமுகி இரண்டு திரைப்படங்களுமே ஆரம்பத்தில் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் முக்கியமான ஒரு நடிகையாக மாறினார். நயன்தாரா தமிழ் சினிமாவில் நடிப்பதற்கு முன்பே மலையாளத்தில் பிரபலமான ஒரு நடிகையாக நயன்தாரா இருந்தார்.

டாப் நடிகை:

ஆனால் மலையாளத்தை விடவும் தமிழ் சினிமாவில்தான் மார்க்கெட் அதிகம். மேலும் வருமானமும் அதிகம் என்பதை அறிந்த நயன்தாரா பிறகு தமிழ் சினிமாவின் மீது கவனம் செலுத்த துவங்கினார். இப்பொழுது தமிழ் சினிமாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக நயன்தாராதான் இருந்து வருகிறார்.

மேலும் பல தொழில்களை செய்யும் தொழிலதிபராகவும் நயன்தாரா இருந்து வருகிறார். நயன்தாரா வளர்ந்து வந்த காலகட்டங்களில் நிறைய முறை சின்ன நடிகர்களுடன் நடிக்க முடியாது என்று கூறியிருக்கிறார். முக்கியமாக நடிகர் சிவகார்த்திகேயனுடன் ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு வந்துமே கூட அவர் நடிக்க மறுத்துவிட்டார் என்று கூறப்படுகிறது.

ஏனெனில் அப்பொழுது சிவகார்த்திகேயன் சின்ன நடிகராக இருந்து வந்தார். இந்த நிலையில் சிவகார்த்திகேயன் கொஞ்சம் வளர்ச்சியை கண்ட பிறகு வேலைக்காரன் திரைப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்தார்.

நயன்தாரா போட்ட கண்டிஷன்:

ஆனால் அந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் நடிப்பதற்கு நிறைய விதிமுறைகளை நயன்தாரா போட்டதாக பேச்சுக்கள் உண்டு. வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் ஸ்ரீ திவ்யாவை கையாண்டது போல என்னை கையாளக் கூடாது.

எனக்கு ஊதா கலரு ரிப்பன் மாதிரியான பாடல்கள் எல்லாம் வைக்க கூடாது. நான் லேடி சூப்பர் ஸ்டார் என்பதால் என்னை மிகவும் டீசண்டாகதான் படத்தில் காட்ட வேண்டும் என்று கண்டிஷன் போட்டு இருக்கிறார். நயன்தாராவை சிவகார்த்திகேயன் தொடுவது போன்ற காட்சிகள் கூட அந்த திரைப்படத்தில் அவ்வளவாக இருக்காது.

இவ்வளவு கண்டிஷனையும் ஏற்று நடித்த சிவகார்த்திகேயன் நயன்தாராவிடம் மிகவும் பணிவாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. அதனால்தான் அதற்குப் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் மிஸ்டர் லோக்கல் என்கிற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த பொழுது அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார்.

இப்பொழுது வரை சிவகார்த்திகேயனுக்கும் நயன்தாராவிற்கும் நல்ல நட்பு இருந்து வருகிறது. இந்த விஷயத்தை பத்திரிகையாளர் செய்யாறு பாலு ஒரு பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version