ரௌடி பிக்சர்ஸ் தயாரிப்பில் கடந்த 2022ம் ஆண்டில் வெளியான படம் கனெக்ட். இந்த படத்தில் பிரதான கேரக்டரில் நயன்தாரா நடித்திருந்தார். அஷ்வின் சரவணன் டைரக்ட் செய்த இந்த படத்தில் சத்யராஜ், அனுபம் கெர், ஹனியா நபிஷா ஆகியோர் லீடிங் ரோல்களில் நடித்திருந்தனர்.
ஆனால் இந்த படம் சரியாக போகவில்லை. எதிர்பார்த்த அளவில் பெரிய வெற்றியை பெறவில்லை. ஆனால் ரசிகர்கள் விமர்சன ரீதியாக இந்த படத்தை ரசித்ததாக கூறினர்.
மாளவிகா மோகனன்
இந்த படம் வெளிவருவதற்கு முன்பு, நடிகை மாளவிகா மோகனன், ஒரு நேர்காணலில் பேசியிருந்தார். அப்போது நயன்தாரா பெயரை குறிப்பிடாமல் அவர் நடித்திருந்த ஒரு காட்சி குறித்து கிண்டலாக விமர்சனம் செய்திருந்தார்.
உண்மை இல்லையே?
அதாவது ஒரு முன்னணி நடிகை, மருத்துவமனையில் அட்மிட் ஆகி படுக்கையில் படுத்திருக்கும் போது கூட புல் மேக்கப்பில் தலைமுடி கூட கலையாமல் இருக்கிறார். சாகும் தருவாயில் உள்ள ஒருவர் எப்படி அப்படி இருக்க முடியும். கமர்ஷியல் படமாக இருந்தாலும், அது சிறிதளவாவது உண்மைத்தனம் இருக்க வேண்டாமா என கேட்டிருந்தார்.
நயன்தாரா
இந்நிலையில் கனெக்ட் படத்தின் பிரமோ நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை நயன்தாரா, ஒரு நடிகை என் பெயரை குறிப்பிடாமல் நான் நடித்திருந்த மருத்துவமனை காட்சி குறித்து விமர்சித்து பேசியிருந்தார்.
தலைமுடி கலைந்திருந்தால்…
மருத்துவமனை காட்சியில் பக்காவாக இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அதற்கெல்லாம் முடியை எல்லாம் கலைத்துக்கொண்டா அங்கு இருக்க முடியும்? நிஜத்தில் மருத்துவமனைக்கு சென்றால் கூட தலைமுடி கலைந்திருந்தால், அங்கு அவர்களே தலைமுடியை இணைத்து பிணைத்து கட்டி விட்டு விடுவார்கள்.
ரியலிஸ்ட்டிக் படங்களில்…
வணிக ரீதியான படங்களுக்கும், யதார்த்த சினிமா படங்களுக்கும் பெரிய வித்யாசங்கள் இருக்கின்றன. ரியலிஸ்ட்டிக் படங்களில் நடிக்கும் போது நம்மால் இயன்ற வரை அந்த கேரக்டருக்கு ஏற்றது போல, நிறைய மெனக்கெடலாம். ஆனால் அந்த நடிகை குறிப்பிட்டது கமர்ஷியல் படம்.
கமர்ஷியல் படத்தில் இயக்குனர் என்ன கேட்கிறாரோ அதைத்தான் நான் கொடுக்க முடியும். அந்தந்த படங்களுக்கு ஏற்றவாறு தான் அதில் நடிப்பவர்கள் நடிப்பை கொடுக்க முடியும். அது படங்களுக்கு ஏற்றவாறு மாறுபடும் என, நயன்தாரா அதற்கு பதில் அளித்தார்.
இந்த விஷயங்களை பொருத்தவரை, நடிகை மாளவிகா மோகனன் நயன்தாரா பெயரை எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. படத்தின் பெயரையும் குறிப்பிடவில்லை. ஒரு திரைத்துறை சார்ந்தவராக தனது கருத்தை வெளிப்படுத்தினார்.
சாகும் போது கூட இது வேணுமா?
அதே போல் நயன்தாரா நடித்த படத்தின் ஒரு காட்சியை ஒருவர் விமர்சித்த நிலையில், அதில் நடித்த ஒரு கலைஞராக தன் தரப்பில் என்ன விளக்கமோ, அதை அழகாக சொல்லி விட்டார் நயன்தாரா. அவரும் தன்னை விமர்சித்த நடிகையின் பெயரை எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
பிரச்னை சுமூகமாக முடிந்தது என்றாலும், சாகும் போது கூட இது வேணுமா.? என்று பஞ்சாயத்து கூட்டிய வகையில் மாளவிகா மோகனன் சொன்ன விமர்சனத்துக்கு நயன்தாரா கொடுத்த நச் பதில் வைரலாகி விட்டது.