பில்லா படத்தில் இது ரொம்ப ரொம்ப கஷ்டம்.. வெக்கமின்றி கூறிய நடிகை நயன்தாரா..!

லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகை நயன்தாரா கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர். ஆரம்ப காலத்தில் மலையாள படங்களில் நடிக்க ஆரம்பித்த இவருக்கு தென்னிந்திய மொழிகளில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது.

அந்த வகையில் தமிழில் சுப்ரீம் ஸ்டார் என்று அழைக்கப்படும் சரத்குமாரோடு இணைந்து ஐயா படத்தில் அறிமுக நாயகியாக அறிமுகம் செய்யப்பட்டதை அடுத்து தமிழ் திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக தற்போது வலம் வருகிறார்.

நடிகை நயன்தாரா..

ஒரு வார்த்தை பேச ஒரு வருஷம் காத்திருந்தேன் என்ற பாடல் வரிகளில் தனது எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் இடத்தைப் பிடித்துக் கொண்ட நடிகை நயன்தாரா தமிழில் முன்னணி நடிகர்களாக இருக்கும் நடிகர்களோடு இணைந்து நடித்திருக்கிறார்.

அந்த வகையில் இவர் தல அஜித்தோடு இணைந்து பில்லா திரைப்படத்தில் நடித்து அனைவரையும் அசத்தியதோடு அடுத்தடுத்து பல படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தை பெற்றார்.

சமூக வலைதளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது பாலிவுட் படத்தில் நடித்த அசத்து இருக்கிறார். அந்த வகையில் அட்லீ இயக்கத்தில் வெளி வந்த ஜவான் திரைப்படத்தில் நடித்ததின் மூலம் பாலிவுட் நடிகை என்ற அடையாளத்தை பெற்று விட்டார்.

பில்லா படத்தில்..

மிகச் சிறந்த நடிகையாக திகழக்கூடிய இவர் பல தொழில்களில் முதலீடு செய்து இருப்பதால் தொழில் அதிபராகவும் திகழ்கிறார். இதனை அடுத்து அண்மை பேட்டி ஒன்று கலந்து கொண்ட நடிகை நயன்தாராவிடம்  உங்களை மிகவும் கவர்ந்த திரைப்பட கதாபாத்திரம் என்னவென்றால் எதை கூறுவீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு நயன்தாரா முதலில் நான் நடித்த அனைத்து படங்களுமே அனைத்து கதாபாத்திரங்களுமே எனக்கு பிடித்தது தான். இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் எனக்கு எதை சொல்வது என தெரியவில்லை என கூறினார்.

மேலும் அதனை தொடர்ந்து எந்த படத்தில் நடித்த பிறகு நிறைய பேர் உங்களை பாராட்டினார்கள் என்ற கேள்வி எழுப்பினார் தொகுப்பாளர். இதற்கு பதிலளித்த நடிகை நயன்தாரா பில்லா திரைப்படத்தில் நடித்த பிறகு நான் நிறைய பேரிடமிருந்து பாராட்டைப் பெற்றேன்.

மேலும் பில்லா படத்தில் நான் நடிப்பதற்கு எந்த ஒரு காட்சியும் இல்லை. எனவே நடிப்பதற்கு பில்லா படத்தில் இடமே கிடையாது ஆனால் படம் முழுக்க நான் ஒரு Attitude-டை மெயின்டைன் செய்ய வேண்டும் அது மிக மிக கடினமான விஷயம். 

இது ரொம்ப ரொம்ப கஷ்டம்..

அதுவும் எனக்கு ரொம்ப ரொம்ப கஷ்டமாக இருந்தது நடிப்பது கூட ஒரு நிமிடத்தில் நடித்து முடித்து விடலாம். ஆனால் படம் முழுக்க ஒரு தெனாவட்டான ஒரு Attitude-டை மெயின்டைன் செய்வது ரொம்ப ரொம்ப கஷ்டம் என பேசி இருக்கிறார் நடிகை நயன்தாரா.

இதனை அடுத்து இந்த விஷயமானது இணையத்தில் வைரலாக மாறிவிட்டதோடு ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகி விட்டது. மேலும் பில்லா படத்தில் ஒரு அருமையான ஆளுமை போல நயன்தாரா நடித்திருப்பது பற்றி ரசிகர்கள் பலரும் பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள்.

இதனை அடுத்து லேடி சூப்பர் ஸ்டார் என்று அவர் பெயர் பெற இது போன்ற ஆட்டிட்யூட் சில படங்களில் வெளிப்பட்டு இருப்பதை அடுத்த தான் ரசிகர்கள் அனைவரும் இவருக்கு அவரகளது ஆதரவுகளை தொடர்ந்து தந்த வண்ணம் இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version