நயன்தாராவுக்கு வாழ்க்கை கற்றுக்கொடுத்த பாடம்..!

ஐயா திரைப்படம் தமிழில் நல்ல வரவேற்பு கொடுத்த உடனே நயன்தாராவிற்கு தமிழில் வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது. நயன்தாரா சினிமாவில் அறிமுகமான சமயத்தில் நிறைய நடிகைகள் புதுமுகங்களாக அறிமுகமாகி இருந்தனர்.

இளம் தலைமுறைக்கு அப்பொழுது வாய்ப்புகள் அதிகமாக இருந்து கொண்டிருந்ததால் நயன்தாராவும் உடனே வாய்ப்புகளை பெற்றார் தொடர்ந்து அவர் நடித்த சந்திரமுகி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து வாய்ப்புகளை பெற துவங்கினார்.

நயன்தாரா வளர்ந்து வரும் நடிகையாக மாறத் துவங்கிய பிறகு அவரை நிறைய திரைப்படங்களில் நடிப்பதற்கு அழைத்தனர். ஆனால் நயன்தாரா கதை தேர்ந்தெடுத்து மட்டுமே நடித்து வந்தார். சிவகாசி திரைப்படத்தில் கூட ஒரு கெஸ்ட் ரோலில் நயன்தாராவை அழைத்திருப்பார்கள்.

நயன்தாராவிற்கு இருந்த மார்க்கெட்:

விஜய் படம் என்பதால் அந்த திரைப்படத்தில் வந்து நடித்து கொடுத்திருப்பார் நயன்தாரா. இந்த நிலையில் பிரபல நடிகரும் இயக்குனருமான நடிகர் சசிகுமார் நயன்தாராவுக்கு வாய்ப்பு கொடுத்த சம்பவமும் நடந்திருக்கிறது. இயக்குனர் அமீரிடமும் பாலாவிடமும் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்தார் சசிகுமார்.

அதற்கு பிறகு தனியாக படம் இயக்க முடிவு செய்தார். அதன்படி சுப்பிரமணியபுரம் திரைப்படத்தின் கதையை எழுதினார் சசிகுமார். அந்த திரைப்படத்தில் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்தார். படத்திற்கு அது ஒரு நல்ல விளம்பரமாக இருக்கும் என்று கருதினார் சசிகுமார்.

எனவே நயன்தாராவை நேரில் சந்தித்து தன்னுடைய திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். அப்பொழுது ஜெய் பெரிய நடிகராக இல்லை வளர்ந்து வரும் நடிகராகதான் இருந்து வந்தார்.

சசிக்குமாரை நிராகரித்த நயன்:

Director M Sasikumar at the Thalaimuraigal Team Press Meet showing their National Award for 2013

மேலும் சசிகுமாருக்கும் இது முதல் படமாகும். ஆனால் சசிக்குமாருக்கு பதிலளித்த நயன்தாரா அந்த திரைப்படத்தில் நடித்தால் என்னுடைய மார்க்கெட் குறைந்து விடும் என்று மூஞ்சியில் அடித்தார் போல சசிகுமாரிடம் கூறியிருக்கிறார்.

ஆனால் 60 லட்சத்தில் எடுக்கப்பட்ட சுப்பிரமணியபுரம் திரைப்படம் 30 கோடிக்கு ஓடி பெரும் வசூல் சாதனையை படைத்தது. அந்த திரைப்படத்தில் நடித்த நடிகை சுவாதிக்கும் அதற்கு பிறகு நிறைய வாய்ப்புகளை அது பெற்றுக் கொடுத்தது.

அதற்கு பிறகு சசிகுமார் தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குனராகவும் நடிகராகவும் மாறினார். தற்சமயம்வரை அவரது மார்க்கெட் என்பது குறையவே இல்லை. ஆனால் நயன்தாராவின் மார்க்கெட் தற்சமயம் குறைய தொடங்கியிருக்கிறது.

அதிலும் அன்னபூரணி திரைப்படம் பெரும் தோல்வியை கண்டதை அடுத்து அவருக்கு வாய்ப்புகளும் குறைய தொடங்கியிருக்கின்றன. இந்த நிலையில் சசிகுமார் அடுத்து இயக்கும் திரைப்படத்தில் நடிப்பதற்கு நயன்தாராவே சசிகுமாரிடம் சென்று வாய்ப்பு கேட்டுள்ளாராம்.

ஆனால் நயன்தாராவை நடிக்க வைத்தால் அதிக சம்பளம் தர வேண்டுமே என்று சசிகுமார் இதை குறித்து யோசித்து வருகிறார் என்று கூறப்படுகிறது இப்படி வாழ்க்கை ஒரு வட்டம் என்னும் பாடத்தை நயன்தாராவிற்கு வாழ்க்கையே கற்றுக் கொடுத்திருக்கிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version