காருக்கு பின்னால் கவர்ச்சி உடையை கழட்டி.. நயன்தாரா செய்த செயலை பாருங்க..!

திரைப்படத்தில் வெற்றி தோல்வி, வாழ்க்கையில் பெறும் சர்ச்சை, காதல் தோல்விகள், விமர்சனங்கள் என பல தோல்விகளை சந்தித்து தனது வாழ்க்கையில் படிப்படியாக முன்னேறி இன்று லேடி சூப்பர் ஸ்டார் என்ற இடத்தை தக்க வைத்துக் கொண்டிருப்பவர் தான் நடிகை நயன்தாரா.

அவர் இந்த இடத்திற்கு மிகவும் சுலபமாக வந்து விடவில்லை. அதற்காக அவர் கடந்து வந்த பாதைகளை புரட்டிப் பார்த்தால் அதில் பல வேதனைகளும் ,கஷ்டங்களும் அடங்கிக்கிடக்கும்.

நடிகை நயன்தாரா:

அப்படித்தான் நடிகை நயன்தாரா ஆரம்பத்தில் தனது சொந்த ஊரான கேரள மாநிலத்தில் உள்ள லோக்கல் சேனல் ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக தனது கெரியரை தொடங்கினார் .

அவருக்கு திரைப்படத்துறையில் நடிக்கும் வாய்ப்பும், ஆர்வமும் அங்கு தான் கிடைத்தது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது தான் மலையாள படத்தில் வாய்ப்புகள் கிடைக்க ஒரு சில திரைப்படங்களில் நயன்தாரா நடித்து 2005 ஆம் ஆண்டு ஐயா திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது .

அங்கிருந்து மிகவும் சாதாரணமான பெண்ணாக கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு கிளம்பி வந்தார். முதல் படத்திலேயே சரத்குமாருக்கு ஜோடியாக மிகவும் பவ்யமான கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்ததார்.

சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியான நயன்தாரா:

எல்லோருக்கும் பிடித்தமான ஹீரோயினாக நயன்தாரா பார்க்கப்பட்டார். அதையடுத்து இரண்டாவது படமே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக சந்திரமுகி திரைப்படத்தில் நடித்திருந்தார் .

இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படமாக அப்போது பார்க்கப்பட்டதால் நயன்தாராவுக்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.

அந்த திரைப்படத்தில் துர்கா என்ற கேரக்டரில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். தொடர்ந்து சிவகாசி, கஜினி, கல்வனின் காதலி ,வல்லவன் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்

மேலும், சிவாஜி , பில்லா , யாரடி நீ மோகினி, குசேலன் , சத்தியம் , ஏகன் , வில்லு, பாஸ் என்கிற பாஸ்கரன், ஆதவன் , ராஜா ராணி , ஆரம்பம் , எதிர்நீச்சல், தனி ஒருவன், நானும் ரவுடிதான் உள்ளிட்ட பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்தார் நயன்தாரா.

தொடர்ந்து அடுத்தடுத்த வெற்றி படங்களில் நடித்து முன்னணி இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார் . இதனிடையே அவர் பிரபுதேவாவை சில வருடங்கள் காதலித்து பின்னர் பெரும் சர்ச்சையில் சிக்கினார் .

அதிலிருந்து அவமானப்படுத்தப்பட்ட நயன்தாரா சினிமா பக்கமே தலைகாட்டாமல் சில காலம் வீட்டிலேயே முடங்கி கிடந்தார்.

பல வருடங்கள் கழித்து ரீ என்ட்ரி:

அதன் பிறகு தான் நான் ராஜா ராணி திரைப்படத்தின் மூலமாக நயன்தாரா மீண்டும் பல வருடங்கள் கழித்து ரீ என்ட்ரி கொடுத்தார் .

இந்த திரைப்படம் அவருக்கு மாபெரும் வெற்றி படமாக அமைந்ததோடு தொடர்ச்சியாக மீண்டும் நடிக்க ஆரம்பித்து ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதை தேர்ந்தெடுத்து நடித்ததால் லேடி சூப்பர் ஸ்டார் என்ற இடத்தை தக்க வைத்துக்கொண்டார்.

இந்நிலையில் இந்த இடத்தை தக்க வைக்க நடிகை நயன்தாரா ஆரம்பத்தில் எவ்வளவு கஷ்டப்பட்டார் என்பதை பற்றி தற்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது .

அதாவது, ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் கஜினி திரைப்படத்தில் நயன்தாரா நடித்திருப்பார். அந்த திரைப்படத்தின் ஒரு காட்சிக்காக படு கிளாமரான உடையை அணிந்து வந்து ஷார்ட்டுக்காக ரெடியாகி நின்றாராம்.

காருக்கு பின்னால் நயன்தாரா செய்தது என்ன?

அதை பார்த்து ஏ ஆர் முருகதாஸ் இந்த உடையில் நான் உங்களை படம் பிடிக்கவே மாட்டேன். வேறு உடை இருந்தால் தயவு செய்து மாற்றிக் கொள்ளுங்கள் என கூறி இருக்கிறார்.

அதற்கு நயன்தாரா என்னிடம் வேறு உடை இல்லை எனக் கூற உடனடியாக அசிஸ்டன்ட் டைரக்டரை பக்கத்தில் இருந்த ரோட்டு கடைக்கு அனுப்பி வைத்து அங்கிருந்து ஒரு சாதாரண உடை ஒரு வாங்கி வரச் சொன்னாராம் .

அதை உடனடியாக மாற்ற சொல்லி இருக்கிறார் ஏ ஆர் முருகதாஸ். அப்போது நயன்தாராவுக்கு வசதி எதுவுமே இல்லாததால் காருக்கு பின்னால் சென்று அந்த மாட்டரன் உடையை கழட்டி இந்த சாதாரண உடையை மாற்றி வந்து மீண்டும் நடித்தாராம்.

இன்று நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தை பெற்று பல கோடி கணக்கில் கேரவனை சொந்தமாக வைத்து இருக்கும் நயன்தாரா ஆடை மாற்ற கூட இடம் இல்லாமல் நடுரோட்டில் காருக்கு பின்னால் உடை மாற்றியதை கேள்விப்பட்ட அவரது ரசிகர்கள் “இவ்வளவு கஷ்டப்பட்டு தான் நீங்கள் இந்த இடத்தை தக்க வைத்திருக்கிறீர்களா”?என வியந்து அவரை பாராட்டி தள்ளி உள்ளனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version