இன்னும் கிட்ட வந்து கிஸ் பண்ணு என்ற விக்னேஷ் சிவன்.. சைக்கோ என திட்டிய நயன்தாரா..!

தற்சமயம் தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக இருப்பவர் நடிகை நயன்தாரா. நடிகை நயன்தாராவை பொருத்தவரை அவர் தேர்ந்தெடுக்கும் கதைகளில் அதிக கவனம் கொண்டவர், இருந்தாலும் அவருக்கு ஒரு சில திரைப்படங்கள் தோல்வியை கொடுக்கதான் செய்கின்றன என்றாலும் தொடர்ந்து திரைப்படங்களை தேர்ந்தெடுக்கும் பொழுது அதில் இன்னும் அதிக கவனம் செலுத்தி வருகிறார் நயன்தாரா.

தமிழில் முதன் முதலாக நயன்தாரா ஐயா என்கிற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார். அதற்கு பிறகு நயன்தாராவின் தமிழ் சினிமா பயணம் என்பது மிகவும் கடினமான ஒரு பயணமாக இருந்தது. தொடர்ந்து சினிமாவில் வரவேற்பை பெற்ற நடிகையாக இருப்பதற்கு நிறையவே போராட வேண்டியிருந்தது.

படங்களில் சர்ச்சைகள்:

இதற்கு நடுவே நயன்தாரா குறித்து அதிகமாக வந்த சர்ச்சைகளும் அவருக்கு அதிக பிரச்சனையை ஏற்படுத்தி கொடுத்தன. இந்த நிலையில் தான் நானும் ரவுடிதான் திரைப்படத்தின் பொழுது இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவிற்கும் இடையே காதல் ஏற்பட்டது.

அதற்கு முன்பு அவருக்கு ஏற்பட்ட காதல் எல்லாம் கடைசியில் தோல்வியில்தான் முடித்தது. ஆனால் விக்னேஷ் சிவனுடன் ஏற்பட்ட காதல்தான் திருமணத்தில் முடிந்தது. ஐந்து வருடங்களாக லிவிங்கில் இருந்த பிறகு 2022 ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று அனைத்து துறையில் உள்ள பிரபலங்களும் இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறார் நயன்தாரா. திருமணத்திற்கு பிறகுதான் பாலிவுட்டில் கதாநாயகியாக அவர் அறிமுகமானார்.

திருமணத்திற்கு பிறகு..

ஜவான் திரைப்படத்தில் கொஞ்சம் கவர்ச்சியாகவே நடித்திருந்தார். அதனை தொடர்ந்து தமிழிலும் அவரது நடிப்பில் அன்னபூரணி திரைப்படம் வெளியானது. ஆனால் அந்த திரைப்படத்திற்கு பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை. மேலும் அந்தப் படத்தை வாங்கிய நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் அதை ஹிந்தியில் டப்பிங் செய்து வெளியிட்டதால் சில பிரச்சனைகளும் வந்தன.

திருமணத்திற்கு பிறகு வாடகைதாய் முறையில் இரண்டு குழந்தைகளை பெற்றுக் கொண்டார் நயன்தாரா. தற்சமயம் அந்த குழந்தைகள் மீது அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் நானும் ரவுடிதான் திரைப்படத்தின் பொழுது  நடந்த நிகழ்வை  விக்னேஷ் சிவன் ஒரு பேட்டியில் பகிர்ந்திருக்கிறார்.

அந்த திரைப்படம் படமாக்கப்படும் பொழுது நயன்தாராவிற்கும் விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் ஏற்பட்டது இதனால் விஜய் சேதுபதியுடன் படத்தில் நெருக்கமான காட்சிகளில் நயன்தாரா மிக நெருக்கமாக நடிக்காமல் இருந்தார். இப்படியாக ஒரு காட்சியில் விஜய் சேதுபதி நயன்தாராவை முத்தம் கொடுப்பது போன்ற காட்சி வரும். அப்பொழுது நயன்தாரா மிகவும் விலகி நின்று இருக்கிறார். ஆனால் அது அந்த காட்சிக்கு சரியாக இல்லை என்று நெருக்கமாக நின்று இருவரும் முத்தம் கொடுக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார் விக்னேஷ் சிவன். பிறகு அந்த படப்பிடிப்பு முடிந்த பிறகு விக்னேஷ் சிவனிடம் வந்து சைக்கோ என்று செல்லமாக திட்டிவிட்டு சென்றாராம் நயன்தாரா.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version