என் வாழ்க்கையில் நான் எடுத்த மோசமான முடிவு இது..! நயன்தாரா வேதனை..!

தமிழில் அதிக வரவேற்பு பெற்ற ஸ்டார் நடிகர்கள் எப்படி இருக்கிறார்களோ அதே போல அதிக வரவேற்பை பெற்ற ஸ்டார் நடிகைகளும் உண்டு இப்படியான ஸ்டார் அந்தஸ்தை நடிகைகள் பெறுவது என்பது மிகப்பெரிய போராட்டம் என்று கூறலாம்.

நடிகைகள் தங்களுக்கான இடத்தை சினிமாவில் தக்க வைத்துக் கொள்வது என்பது கடினமான விஷயமாக இருக்கும்பொழுது அதில் ஸ்டார் நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா. ஐயா திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நயன்தாரா ஆரம்பத்தில் மிகவும் டீசண்டாகதான் உடை அணிந்து நடித்து வந்தார்.

மாடர்ன் லுக்கில் படம்:

ஆனால் சந்திரமுகி திரைப்படத்திற்கு பிறகு அவர் நடித்த கஜினி திரைப்படத்தில் முதன்முதலாக மாடன் லுக்கில் நடித்தார் நயன்தாரா பெரும்பாலும் தமிழ் சினிமாவில் நயன்தாரா கவர்ச்சியாக நடித்த திரைப்படங்கள் எதுவும் பெரிதாக வெற்றியே பெறவில்லை.

இதை ஒரு துரதிஷ்டமாக கருதியே நயன்தாரா அதற்குப் பிறகு கவர்ச்சி காட்டுவதை முழுமையாக குறைத்துக் கொண்டார். இந்த நிலையில் அவர் முன்பு ஒரு பேட்டியில் பேசும்பொழுது கஜினி படத்தில் நடித்துள்ளது குறித்து பேசி இருந்தார்.

அதில் அவர் கூறும் பொழுது கஜினி படத்தில் நடித்ததுதான் நான் எடுத்ததிலே மோசமான முடிவு என்னுடைய கதாபாத்திரம் அந்த திரைப்படத்தில் அவ்வளவு சரியாக இல்லை. மேலும் அந்த படத்தில் என்னை காட்டியிருந்த விதமே எனக்கு பிடிக்கவில்லை என்று புகார் கூறியிருந்தார்.

இயக்குனர் பதில்:

அதற்கு பதில் அளிக்க படத்தின் இயக்குனரான ஏ.ஆர் முருகதாஸ் கூறும் பொழுது ஒரு நடிகைக்கு பிடிக்கிறது பிடிக்கவில்லை என்பதற்காக கதாபாத்திரத்தை குறைக்கவோ அல்லது பெரிதாகவோ முடியாது.

சில நேரங்களில் அவர்களுக்கு பிடித்த கதாபாத்திரமாக இருந்தாலும் படத்தில் சின்ன கதாபாத்திரமாகதான் இருக்கும். கஜினி திரைப்படத்தை பொருத்தவரை அந்த படம் நயன்தாராவிற்கு பெரிதாக உதவவில்லை ஆனால் அசினுக்கு அது பெரிதாக உதவியது இதை நாங்கள் முடிவு செய்வதில்லை என்று ஏ.ஆர் முருகதாஸ் கூறியிருந்தார்.

ஆனால் இப்பொழுது பார்க்கும் பொழுது நடிகை அசின் பாலிவுட்டிற்க்கு கஜினி திரைப்படம் மூலமாக சென்றார் என்றாலும் கூட அதன் பிறகு திருமணமான பிறகு சினிமாவை விட்டு அவர் விலகிவிட்டார். ஆனால் நயன்தாராவை பொருத்தவரை தற்சமயம் தமிழ் சினிமாவில் பெறும் நட்சத்திரமாக இருக்கிறார்.

எனவே ஒரு திரைப்படத்தில் வரும் கதாபாத்திரம் மட்டும் ஒரு நடிகையின் வளர்ச்சியை முடிவு செய்வதில்லை என இதன் மூலம் தெரிகிறது

“காட்டு தேக்கு.. பட்ட ஜிலேபி..” நெகு நெகு தொடையை காட்டி திணறடிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..!

Comments are closed.
Exit mobile version