குழந்தை பெற்றுக்கொண்ட நயன்தாரா..! – பாய்கிறது வழக்கு..? – அமைச்சர் அதிரடி..! – பரபரப்பில் தமிழகம்..!

நடிகை நயன்தாரா திருமணம் ஆகி 3 மாதங்கள் கடந்துள்ள நிலையில் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டிருக்கிறார். இது மிகப்பெரிய அதிர்வலைகளை தமிழகம் முழுக்க ஏற்படுத்தியுள்ளது.

சினிமா ரசிகர்கள் பலரும் நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதிக்கு வாழ்த்துக்களை கூறி வந்தாலும்கூட மறுபக்கம் இவர்களை கேலி செய்து கலாய்க்கும் கருத்துக்களை பதிவிடும் இணையவாசிகளையும் பார்க்க முடிகிறது.

இந்நிலையில் நயன்தாரா குழந்தை பெற்றுக் கொண்டது குறித்த விவாதங்கள் இணைய வட்டாரங்களில் எழுந்திருக்கின்றது. இதில் முக்கியமாக நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடி வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வதற்கான விதிகளை மீறி இருக்கிறார்கள் என்று பரவலாக பேசப்படுகிறது.

மேலும் இந்த விதிமீறல் உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் மற்றும் இவர்களுக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர்கள் மருத்துவமனை மீது வழக்கு பாயும் என்றும் உச்சகட்டமாக சிறை செல்லவும் வாய்ப்பு இருக்கிறது என்றும் இணையத்தில் பேசி வருகிறார்கள்.

இது ரசிகர்களை இன்னும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கின்றது. நயன்தாராவுக்கு குழந்தை பிறந்திருக்கிறது என்ற அதிர்ச்சியில் இருந்தே இன்னும் வெளியில் வராத ரசிகர்களுக்கு அடுத்த அதிர்ச்சியாக இப்படி வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதற்கான விதிமீறல்.. வழக்கு.. சிறை தண்டனை என தகவல் வெளியாகி கொண்டிருப்பது ரசிகர்களை மேலும் அதிர்ச்சியாக்கி இருக்கிறது என்று தான் கூற வேண்டும்.

அதாவது வாடகை தாய் மூலம் பெற்றுக் கொள்வதற்கு குழந்தை பெற்றுக் கொள்வதில் சில விதிமுறைகளை வைத்திருக்கிறது இந்திய அரசு. அதன்படி வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள இருப்பவர்களுக்கு திருமணம் முடிந்து குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும். இந்த ஐந்தாண்டுகளுக்குள் கணவன்-மனைவி ஆகியோரில் யாராவது ஒருவருக்கு குழந்தை பேறு பெறுவதற்கு உண்டான தகுதி இல்லை என நிருபணம் ஆகியிருக்க வேண்டும்.

தம்பதி மற்றும் வாடகைத் தாய் என இரு தரப்புக்கும் தகுதிச் சான்றிதழ் வாங்குவது கட்டாயம். ஒரு பெண் ஒரு முறைதான் வாடகை தாயாக இருக்க முடியும். அப்படி வாடகை தாயாக வரக்கூடிய பெண் தம்பதிகளுக்கு நெருங்கிய உறவுகளில் ஒருவராக இருத்தல் அவசியம்.

மேலும் வாடகை தாய்க்கு 16 மாதம் இன்சூரன்ஸ் எடுக்க வேண்டும். இப்படி இந்த விதிகளை எல்லாம் பின்பற்றித்தான் இருவரும் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டார்களா…? திருமணம் முடிந்து மூன்று மாதங்கள் தான் ஆகிறது என்ற நிலையில் எப்படி இவர்கள் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டார்கள் என்ற விவாதம் எழுந்திருக்கின்றது.

மறுபக்கம் அவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டார்கள் இதன் பிறகு இப்படி சட்டம் சிறை தண்டனை என கூறுவது எல்லாம் பொருத்தமாக இருப்பதாக தெரியவில்லை என்றும் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்ற தமிழகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியம் அவர்களிடம் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதி வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டு இருக்கிறார்களா..? என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அமைச்சர் அவர்கள், நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதிக்கு தம்பதிகள் விதிகளுக்கு உட்பட்டுத்தான் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றார்களா..? என்று விளக்கம் கேட்கப்படும்.

ஏனென்றால் திருமணமாகி ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகுதான் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற முடியும். எனவே சுகாதாரத்துறையின் மருத்துவக்கல்லூரி இயக்குனரகத்தின் மூலம் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதியிடம் விளக்கம் கேட்டு அதன் பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருக்கிறார். இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

இந்த விவகாரத்தில் குழப்பமான தகவல்களே இணையத்தில் பரவி வருகின்றது. இந்த விவகாரம் எங்கே போய் முடியப் போகிறது என்றே தெரியவில்லை.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …