நயன்தாராவின் வாடகை தாய்.. அதுக்காகதான் போட்டோ எடுத்துக்கிட்டோம்.. வெளிவந்த உண்மைகள்..!

தமிழ் சினிமாவில் அறிமுகமான காலகட்டங்களில் இருந்து அதிக வரவேற்பை பெற்ற நடிகையாக இருந்து வருபவர் நடிகை நயன்தாரா. மலையாள சினிமாவில் நடிகையாக அறிமுகமான நயன்தாராவிற்கு மலையாளத்தை விடவும் தமிழில் நடிகைகளுக்கு நல்ல சம்பளமும் நல்ல மார்க்கெட்டும் இருக்கிறது என தெரிந்தது.

அதனை தொடர்ந்து இளம் வயதிலேயே தமிழ் சினிமாவில் முயற்சி செய்யத் தொடங்கினார். அந்த வகையில் அய்யா திரைப்படத்தில் முதன் முதலாக கதாநாயகியாக நடித்தார் நயன்தாரா. அந்த திரைப்படத்திலேயே நயன்தாராவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

வாடகை தாய்

அதனை தொடர்ந்து சந்திரமுகி திரைப்படத்தில்  துர்கா என்னும் கதாபாத்திரத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார். அது முதலே அவரை லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்று பலரும் கூப்பிட துவங்கி விட்டனர். அதன் பிறகு நிறைய திரைப்படங்களில் வாய்ப்பை பெற்ற நயன்தாரா தற்சமயம் தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார்.

சொல்ல போனால் தமிழ் சினிமாவிலேயே அதிகம் சம்பளம் வாங்கும் நடிகை நயன்தாராதான் என்று கூறப்படுகிறது. அந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் வளர்ச்சியை பெற்று இருக்கிறார் நயன்தாரா. தற்சமயம் நயன்தாரா நடித்து வரும் திரைப்படங்களில் பெரும்பாலும் அவர் மட்டும் கதாநாயகியாக நடிக்கும் படங்களின் மீது கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த நிலையில் நயன்தாரா வாடகை தாய் முறையில் குழந்தை பெற்றது முதலே அது குறித்து நிறைய சர்ச்சைகள் இருந்து வருகின்றன. அது நடந்து பல ஆண்டுகள் ஆன பிறகும் கூட இப்பொழுதும் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் இருந்து கொண்டு தான் இருக்கின்றனர்.

போட்டோ எடுத்துக்கிட்டோம்

இந்த நிலையில் நயன்தாராவின் வாடகை தாய் யார் என்கிற கேள்வி அப்போதிலிருந்தே இருந்து வந்தது. ஆனால் இந்த வாடகை தாய் முறையை பொறுத்த வரை வாடகை தாயிடம் யாருக்கு அவர்கள் குழந்தை பெற்று தர போகிறார்கள் என்கிற விஷயத்தை கூற மாட்டார்கள்.

அதேபோல சம்பந்தப்பட்ட பெற்றோர்களிடமும் எந்த வாடகை தாய் இவர்களுக்கு குழந்தை பெற்று தர போகிறார்கள் என்பதையும் கூற மாட்டார்கள். இருவருக்கும் இடையே தொடர்பே இருக்காது என்கிற நிலை தான் இருக்கும்.

வெளிவந்த உண்மைகள்

இந்த நிலையில் நயன்தாராவிற்கு குழந்தை பிறந்த பின்னர் நயன்தாரா விக்னேஷ் சிவனுடன் ஒரு பெண் சேர்ந்து நிற்கும் புகைப்படம் அதிக பிரபலமானது. அவர்தான் குழந்தை பெற்றுக் கொடுத்த வாடகை தாய் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் நடிகை ஷகிலா இது குறித்து வீடியோ ஒன்றை அப்பொழுது வெளியிட்டிருந்தார். அதில் அந்த சம்பந்தப்பட்ட பெண் தன்னுடைய தோழி என்று கூறியிருக்கிறார் ஷகிலா. அவரை எனக்கு ஐந்து வருடங்களுக்கு மேலாகவே தெரியும் என்று அந்த பெண்ணையும் அந்த பேட்டியில் அழைத்து வந்திருந்தார் ஷகிலா.

அந்தப் பெண் கூறும் பொழுது நானும் விக்னேஷ் சிவனும் நல்ல நண்பர்கள் விக்னேஷ் சிவனின் அம்மாவுக்கும் எனக்கும் நல்ல பழக்கம் உண்டு. நாங்கள் குடும்ப நண்பர்கள். எங்களது குடும்பம் அவர்களது வீட்டிற்கு செல்வது வாடிக்கையான ஒரு விஷயமாகும்.

இப்படி ஒரு முறை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் என்னை கோவிலில் சந்திக்கும் ஒரு சம்பவம் நடந்தது. அன்றைய தினத்தில் நாங்கள் சேர்ந்து போட்டோ எடுத்துக் கொண்டோம். குடும்ப நண்பர்கள் என்பதால்தான் அன்று போட்டோ எடுத்துக் கொண்டோம். ஆனால் அந்த புகைப்படத்தை எடுத்து தான் இப்பொழுது என்னை வாடகைத்தாய் என்று பரப்பி வருகின்றனர் அது எனது குடும்பத்திற்கு பிரச்சனையாக இருக்கிறது என்று அவர் கூறியிருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version