முட்டாள்.. அவங்க தரத்துக்கு கீழ இறக்கி.. கடுப்பான நயன்தாரா.. ஒரு TEA-யால் வெடித்த சர்ச்சை..!

சமீப காலங்களாக பிரபலங்கள் கூறும் விஷயங்கள் என்பது எவ்வளவுக்குஉண்மை தன்மையுடன் இருக்கிறது என்பது கேள்விக்குறியான விஷயங்களாக இருந்து வருகிறது. ஏனெனில் வர வர பிரபலங்கள் தங்களுக்கு தோன்றுகிற விஷயங்களை எல்லாம் பேசுகிறார்களோ என்று யோசிக்கும் அளவிற்கு சில நேரங்களில் வதந்திகளை கூட பேசி விடுகின்றனர்.

உதாரணத்திற்கு கொரோனா காலகட்டத்தில் ரஜினி மாதிரியான பெரும் நடிகர்கள் பலரே தவறான விஷயங்களை எந்த மருத்துவ ஆதாரமும் இன்றி பேசியிருந்தனர். இந்த நிலையில் சமீபத்தில் நயன்தாரா பகிர்ந்த விஷயம்தான் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.

ஹைபிஸ்கஸ் டீ எனப்படும் செம்பருத்தி டீ யின் மகிமையை கூறும் விதத்தில் பதிவு ஒன்றை போட்டு இருந்தார் நயன்தாரா. அந்த பதிவில் இந்த செம்பருத்தி டீ எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. இது ஆயுர்வேதத்தில் வெகு காலங்களாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

நயன்தாரா கூறும் மருத்துவம்:

இதில் நிறைய ஆண்டி ஆக்சிடெண்ட் இருப்பதால் சர்க்கரை நோயை குறைப்பதற்கு உதவுகிறது. மேலும் கெட்ட கொழுப்புகள் இதயம் தொடர்பான பிரச்சனைகள் போன்றவற்றை இது சரி செய்கிறது. மேலும் சருமம் தொடர்பான பிரச்சனைகளையும் இது சரி செய்கிறது.

குளிர்காலத்தில் வரும் பிரச்சனைகளை சரி செய்ய உதவும் விட்டமின்களும் இதில் அதிகமாக இருக்கிறது என்று ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார் நயன்தாரா. இந்த நிலையில் இதற்கு பதில் அளிக்கும் வகையில் சிரியாக் அபி பிலிப்ஸ் என்னும் கேரள மருத்துவர் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார்.

அதில் அவர் கூறும் பொழுது இந்த மாதிரி செம்பருத்தி பல நன்மைகளை செய்யும் என்று கூறுவதற்கு எந்த ஒரு அறிவியல் ஆதாரங்களும் கிடையாது மேலும் செம்பருத்தி டீ யை தொடர்ந்து ஒருவர் அருந்தி வந்தால் அவருக்கு மலட்டு தன்மை ஏற்படும்.

பதிலளித்த மருத்துவர்:

ஆயுர்வேத மருத்துவம் என்பதே ஆதாரமற்ற பொய்கள்தான் எனவே பிரபலங்கள் இப்படியான தவறான மருத்துவ செய்திகளை பரப்ப கூடாது என கூறியிருந்தார்.

இதனை அடுத்து அந்த பதிவையே நீக்கி இருக்கிறார் நயன்தாரா. அதோடு விடாமல் அந்த மருத்துவர் அந்த பதிவை நீக்கிய ஸ்க்ரீன் ஷாட்டை போட்டு குறைந்தபட்சமாக இதற்காக மன்னிப்பு கூட கேட்காமல் இந்த பதிவை டெலிட் செய்திருக்கிறார் நயன்தாரா.

இந்த மாதிரி பிரபலங்கள் தவறான மருத்துவ செய்திகளை பரப்புவதற்கு அவர்களுக்கு தண்டனை கொடுக்கும்படி சட்டம் கொண்டுவர வேண்டும் என்று அவர் கூறினார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக நயன்தாரா எப்போதுமே முட்டாள்களோடு விவாதம் செய்யக்கூடாது அவர்கள் அவர்களது தரத்திற்கு நம்மை இறக்கி பிறகு அதை வைத்தே நம்மை அடிப்பார்கள் என்று பதிவிட்டு இருந்தார்.

அவர் மருத்துவர் சிரியாக் அபி பிலிப்ஸைதான் குறிப்பிடுகிறார் என்று பலரும் கருத்து தெரிவித்தனர். இந்த நிலையில் அந்த பதிவுக்கு பதில் அளிக்கும் வகையில் சிரியாக் அபி பிலிப்ஸ் கூறும் பொழுது முட்டாள் என்று நயன்தாரா அவரை தான் கூறுகிறார் என்பதாக ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். தற்சமயம் இந்த சண்டைதான் சமூக வலைதளத்தில் பெரிதாக பேசப்பட்டு வருகிறது

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version