அப்பாடா.. அது வெறும் புருடாவாம் பா.. – நிம்மதி பெருமூச்சு விட்ட நயன்தாரா ரசிகர்கள்..!

கடந்த சில நாட்களாக சரவணா ஸ்டோர்ஸ் சரவணன் நடிப்பில் வெளியான லெஜெண்ட் திரைப்படத்தில் நடிகை நயன்தாரா ஹீரோயினாக நடிக்க 20 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு தாகவும். ஆனால் 20 கோடி அல்ல 30 கோடி கொடுத்தாலும் அவருக்கு நான் அவருடன் நடிக்க மாட்டேன் என்று நடிகை நயன்தாரா மறுத்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

மேலும் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுதேலா இந்த படத்தில் நடிக்க 20 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி உள்ளார் என்ற தகவலும் இணையத்தில் தீயாக பரவி உள்ளது.

எனவே தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்ற பட்டியல் எடுத்தால் அதில் நடிகை ஊர்வசி ரவுதேலா தான் முதலிடத்தில் இருப்பார் எனவே லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கபடும் நடிகை நயன்தாரா லெஜன்ட் சரவணனுடன்ன் நடிக்க மறுத்து அதிக சம்பளம் பெறும் நடிகைகள் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு சென்றுவிட்டார் என்று தகவல்கள் பரவி வந்தன.

இதனால் நயன்தாரா ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா,, 9th வொண்டர் நயன்தாரா.. என்று கோஷம் எழுப்பி வந்தனர். இந்நிலையில் நடிகை ஊர்வசி ரவுதேலா இந்த படத்தில் நடிக்க 20 கோடி ரூபாய் சம்பளம் பெற்றதாக வெளியான தகவல் புருடா என்றும் அவர் படத்துக்கு 8 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி உள்ளார் என்றும் கூறப்படுகிறது.

அதனால் நடிகை நயன்தாரா ஒரு படத்திற்கு 10 கோடி ரூபாய் வரை சம்பளம் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே நடிகை நயன்தாரா தான் இன்னமும் அதிக சம்பளம் பெறும் நடிகர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார் என்ற தகவல் நயன்தாரா ரசிகர்களை நிம்மதி பெருமூச்சு விட வைத்தது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …