AK62 ட்ராப்..! – அப்படி என்ன தான் லைக்கா நிறுவனத்தில் நடந்தது..? – இதோ விளக்கம்..!

தென்னிந்திய மொழிகளில் முன்னணி கதாநாயகிகளின் வரிசையில் முதல் நிலையில் இருக்கக்கூடியவர் தான் நடிகை நயன்தாரா. இவரை அனைவரும் அன்புடன் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைப்பார்கள்.

 மக்கள் மத்தியில் மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியலும் பிரபலமான ஃபிகராக திகழும் நயன்தாரா அண்மையில் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டு வாடகை தாய் மூலம் இரட்டைக் குழந்தைகளை பெற்றுக் கொண்டார்.

இந்நிலையில் அண்மையில் பொங்கல் விருந்தாக ரசிகர்களுக்கு தல அஜித் நடிப்பில் வெளிவந்த துணைவு திரைப்படம் சக்கை போடு போட்டதை தொடர்ந்து அஜித்தின் அடுத்த படமாக அஜித் 62 என்ற படத்தை நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது அனைவரும் அறிந்ததே.

 இந்த சூழ்நிலையில் அல்டிமேட் ஸ்டார் ஆன அஜித்தின்  அஜித் 62 படத்திற்கான கதை தயாரிப்புக்காக குறிப்பிட்ட நேரம் கொடுத்த லைக்கா தயாரிப்பு நிறுவனம் திடீரென விக்னேஷ் சிவனை இந்த ப்ராஜெக்ட் இல் இருந்து வெளியேற்றி விட்டதாக செய்திகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளது.

 இதற்கு காரணம் என்னவென்றால் லைக்கா நிறுவனத்திற்கு விக்னேஷ் சிவன் சொன்ன கதை பிடிக்கவில்லையாம். மேலும் கொடுத்திருந்த நேரத்திற்கு மேல் அதிக காலம் ஆன பின்னும் அவர் சரியாக கதையை கூறாத காரணத்தாலும், குழந்தை குடும்பம் என கவனம் செலுத்தி கொடுத்த பொறுப்பில் சரியாக செயல்படாமல்  அலட்சியமாக இருந்ததால் அவர் நீக்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்தது.

 இதனை அடுத்து நடிகை நயன்தாரா லைகா நிறுவனத்திடம் தனது கணவருக்காக வக்காலத்து வாங்கியும் அவர்கள் செவி கொடுக்காமல் வேறு இயக்குனரை வைத்து படம் இயக்கப் போவதாக கூறி போனை துண்டித்து விட்டார்களாம்.

 மேலும் அந்தப் படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கப் போவதாகவும் அதில் அஜித்துக்கு ஜோடியாக உலக அழகி ஐஸ்வர்யா ராய் நடிக்க வாய்ப்புகள் உள்ளதாகவும் அரவிந்தசாமி என்ற படத்தில் வில்லனாக  நடிக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.

 அதுமட்டுமல்லாமல் காமெடி நடிகராக இருந்து கதாநாயகனாக மாறிய காமெடி நடிகர் சந்தானம் இந்த படத்தில் முக்கிய காமெடி வேடத்தில் மீண்டும் நடிக்க உள்ளதாக பேசப்பட்டு வருகிறது.

எனவே அஜித்தை வைத்து விக்னேஷ் சிவன் இயக்குவாரா? இல்லையா? என்பது உறுதியாக இனி வரக்கூடிய நாட்களில் தெரியவரும்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version