நடிகை நயன்தாரா பல படங்களில் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார் என்றாலும் கூட நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான பில்லா படத்தின் டூ பீஸ் நீச்சல் உடையில் நடித்து ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களை அதிர வைத்தார் நடிகை நயன்தாரா.
தற்போது இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் உருவாகியுள்ள கநெக்ட் என்ற திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தில் நடிகர்கள் சத்யராஜ் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.
இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. திகில் படமாக உருவாகியிருக்கும் இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதாகவே தெரிகிறது.
இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் நயன்தாரா கவர்ச்சியாக நடித்தேன் என்று போட்டு உடைத்திருக்கிறார். அதற்கு பதிலளித்த நடிகை நயன்தாரா இயக்குனர் விஷ்ணுவர்தன் தவிர வேறு யாருக்கும் என் மீது நம்பிக்கை இல்லை.
இந்த திரைப்படத்திற்கு நான் ஒத்து வருவேனா என்று பலரும் சந்தேகப்பட்டார்கள். இந்த கதாபாத்திரத்தை என்னால் பண்ண முடியுமா..? என்று நினைத்தார்கள். ஏன் இந்த தயக்கம் என்றால் அந்த நேரத்தில் நான் நடித்தது எல்லாமே கிராமப்புறம் சார்ந்த குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து வந்தேன்.
ஆனால், கவர்ச்சியான கேங்ஸ்டர் திரைப்படத்தில் வரக்கூடிய ஹீரோயின் போல என்னால் நடிக்க முடியுமா..? என்று பலரும் சந்தேகப்பட்டார்கள். என் மனதிற்குள் அது உறுத்திக்கொண்டே இருந்தது. ஏன் என்னால் செய்ய முடியாது.. என்ற ஒரு வேகம்.
அதன் மூலம் எனக்கு கிடைத்தது நான் நிச்சயம் நடிப்பில் அசத்தி காட்டுவேன் என்ற நம்பிக்கை எனக்குள் வந்தது. யாராவது என்னிடம் ஒரு விஷயத்தை முடியாது என்று சொன்னால் என்னால் முடியும் நான் பண்ணி காட்டுகிறேன் பாருங்கள் என்று சொல்வது என்னுடைய இயல்பு.
அப்படித்தான் என்றாலும் ஸ்டைலாகவும் கிளாமராகவும் நடிக்க முடியுமென்று நடித்துக்காட்டி தெரிவித்தேன். இதுதான் நான் கவர்ச்சியாக நடிப்பதற்கு காரணம் என்று பதில் கொடுத்துள்ளார் நடிகை நயன்தாரா. இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.