நடிகை கோபிகா திருமண வாழ்க்கையில் கும்மியடிக்க முயன்ற நயன்தாரா… குடும்பத்தில் வெடித்த பூகம்பம்..!

கேரளாவை சேர்ந்த மலையாள நடிகையான கோபிகா முட்டக்கண்ணு அழகியாக ஹோம்லியான கதாபாத்திரத்திற்கு பக்காவாக பொருந்தும் நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் வட்டாரத்தை பிடித்தார் .

நடிகை கோபிகா:

முதன் முதலில் கன்னடம், மலையாள திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்த இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக அறியப்பட்டார்.

நேச்சுரலான அழகில் ரசிகர்களை கவர்ந்த கோபிகாவுக்கு திரைப்பட வாய்ப்புகள் அடுத்தடுத்து கிடைத்துக் கொண்டே இருந்தது.

தமிழில் நடிகை கோபிகா நடிப்பில் 2007 ஆம் ஆண்டு வீராப்பு என்ற திரைப்படம் வெளியாகியிருந்தது இதுதான் அவரது முதல் அறிமுக திரைப்படம் .

அதை அடுத்து பரத் மற்றும் நாசர் நடிப்பில் வெளியாகியிருந்த எம் மகன் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார் கோபிகா .

கோபிகாவின் திரைப்படங்கள்:

2006 ஆம் ஆண்டு வெளிவந்திருந்த இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி திரைப்படம் ஆக அமைந்தது. அது மட்டும் இல்லாமல் கோபிகாவின் வாழ்க்கையில் மிகப்பெரிய அடையாள திரைப்படமாகவும் அந்த படம் பார்க்கப்பட்டு வருகிறது .

தொடர்ந்து அரண் , தொட்டி ஜெயா ,பொன்னியின் செல்வன், கனா கண்டேன், ஆட்டோகிராப் , 4 ஸ்டுடண்ஸ் உள்ளிட்ட திரைப்படங்களில் கோபிகா நடித்திருக்கிறார் .

மிக குறுகிய காலத்திலேயே வளர்ந்து வந்த நடிகையாக பார்க்கப்பட்ட இவருக்கு யார் கண்ணு பட்டதோ தெரியவில்லை திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காமல் மார்க்கெட் இழந்தார்.

இந்த சமயத்தில்தான் கன்னடம் மற்றும் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட பிறமொழி திரைப்படங்களில் நடிக்க கவனத்தை செலுத்தினார் .

திருமண வாழ்க்கை:

அங்கும் பெரிதாக அவருக்கு மார்க்கெட் கிடைக்காதுதால் கடந்த 2008 ஆம் ஆண்டு அஜிலேஷ் சாக்கோ என்பவரை திருமணம் செய்து கொண்டார் .இவர்களுக்கு எமி, எய்தீன் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

திருமணம் குழந்தை குடும்பத்திற்கு பிறகு சினிமா பக்கமே தலை காட்டாமல் இருந்து வந்தார் நடிகை கோபிகா.

இந்த நிலையில் நடிகை கோபிகாவின் திருமண வாழ்க்கையில் நயன்தாரா கும்மியடிக்க முயற்சித்த சம்பவம் ஒன்று இணையத்தில் வெளியாகி பூகம்பமாக வெடிக்க துவங்கியது. அதைப் பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

நயன்தாரா மற்றும் சிம்பு நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் வல்லவன் இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளரான பி எல் தேனப்பன் சமீபத்திய பேட்டி ஒன்றில் நயன்தாரா மற்றும் சிம்பு ஷூட்டிங் ஸ்பாட்டில் செய்த சேட்டை குறித்து வெளிப்படையாக பேசி இருக்கிறார்.

அதாவது, சிம்புவும் நயன்தாராவும் என்னுடைய ஃபோனை மறைமுகமாக எடுத்துக்கொண்டு நடிகை கோபிகாவின் நம்பருக்கு ஐ லவ் யூ என மெசேஜ் அனுப்பி விட்டு இருக்கிறார்கள்.

பின்னர் மறுநாள் கோபிகா போன் போட்டு என்ன சார் இப்படி எல்லாம் மெசேஜ் அனுப்பி இருக்கீங்க என்று கேட்டாங்க .

கோபிகா வாழ்க்கையில் குமியடித்த நயன்:

எனக்கு ஒண்ணுமே புரியல உடனே போனை ஆன் பண்ணி அந்த மெசேஜ் ஓப்பன் செய்து பார்த்தபோது நான் படு பயங்கரமாக ஷாக் ஆகிவிட்டேன்.

அப்புறம் தான் நைட் சிம்புவும் நயன்தாராவும் என்னுடைய ஃபோனை மறைமுகமாக வைத்து யூஸ் பண்ணி கொண்டு இருந்ததை அவர்களிடம் தெரிவித்தேன் .

ஆனால், கோபிகா இதை எடுத்துக்கொண்டார் என தெரியவில்லை நான் எப்படியோ சமாளித்தேன் இப்படித்தான் நயன்தாராவும் சிம்புவும் ஆரம்ப காலகட்டத்தில் ஷூட்டிங் ஸ்பாட்டில் பயங்கரமாக சேட்டை செய்வார்கள் என தயாரிப்பாளர் அந்த பேட்டியில் கூறி இருக்கிறார்.

நயன்தாராவின் இந்த குழந்தை தனமான விளையாட்டு சேட்டைகள் பார்த்த ரசிகர்கள் லேடி சூப்பர் ஸ்டார் இப்படிப்பட்டவரா? என விஷயத்தை வைரல் ஆக்கி இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version