காதலர்கள் பிரியாமல் இருக்க “இதை” செஞ்சிக்கிட்டே இருக்கணும்…” மேடையில் ஓப்பனாக பேசிய நஸ்ரியா..

தமிழில் நேரம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை நஸ்ரியா. அறிமுகமான ஒரு சில படத்திலேயே பெருவாரியான இளசுகளின் மொபைல் வால்பேப்பராக குடியேறினார் நஸ்ரியா.

இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவானது. ராஜா ராணி, திருமணம் எனும் நிக்ஹா, வாயை மூடி பேசவும் உள்ளிட்ட திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். நடிகர்கள் விஜய், சிம்பு, விக்ரம், சூர்யா என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகும் வாய்ப்பு நஸ்ரியாவுக்கு கிடைத்தது.

நஸ்ரியா

ஆனால் கதை நன்றாக இருந்தால் மட்டும்தான் படத்தை ஒப்புக் கொள்வேன் பெரிய ஹீரோ என்பதால் படங்களை ஒப்புக் கொள்ள மாட்டேன் என்று விடாப்பிடியாக இருந்தவர் நடிகை நஸ்ரியா.

ஒரு கட்டத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நையாண்டி திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று கூறியிருந்தார் நடிகை நஸ்ரியா. ஆனால் நஸ்ரியாவிற்கு பதிலாக வேறு ஒரு பெண்ணை டூப் போட்டு நஸ்ரியா தான் கவர்ச்சி காட்டியதாக படத்தில் காண்பித்து விட்டார்கள் என கூறப்பட்டது.

குறிப்பாக என்னுடைய தொப்புள் என்று வேறொரு நடிகையின் தொப்புளை காட்டி ஏமாற்றி விட்டார்கள் என்றெல்லாம் பேட்டி கொடுத்து பெரும் பரபரப்பை கிளப்பி இருந்தார் நடிகை நஸ்ரியா. இந்த விவகாரம் பெரும் சர்ச்சை ஆனது.

சொல்லப்போனால் நையாண்டி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மோசமான விமர்சனத்தை பெற்று தரைதட்டி நின்றது. இந்த சர்ச்சை காரணமாக ஒரு சில காட்சிகள் படத்திற்கு வசூலை குவிந்தன.

புறநானூறு ரீ-என்ட்ரி

இது ஒரு பக்கம் இருக்க திடீரென நடிகர் பகத் பாஸில் திருமணம் செய்து கொண்ட நடிகை நஸ்ரியா சினிமாவுக்கு முழுக்கு போட்டார். தற்பொழுது மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கும் இவர் துல்கர் சல்மான் நடிக்கக்கூடிய புறநானூறு என்ற திரைப்படத்தில் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார்.

இந்த படத்தில் நடிகர் சூர்யா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று தெரிகிறது. இயக்குனர் சுதாக கொங்கரா இந்த படத்தை இயக்குகிறார். சமீபத்தில், தன்னுடைய படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை நஸ்ரியாவிடம் காதல்… மதம் மாறி காதலிப்பது…. ஜாதி மாறி காதலிப்பது.. என்றாலே பிரச்சனையான விவகாரம் தான்.

அப்படி காதலிக்க கூடிய நபர்களுக்கு நீங்கள் சொல்வது என்ன..? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அவர் அதற்கு பதில் அளித்த நடிகை நஸ்ரியா.. ஆம் காதல் என்றாலே பிரச்சினை வரத்தான் செய்யும்.

இதை செஞ்சிகிட்டே இருக்கணும்..

காதலர்கள் தங்களுடைய காதல் வெற்றி பெறும் வரை சண்டையிட வேண்டும். தங்களுடைய பெற்றோரை சம்மதிக்க வைக்க வேண்டும். அவர்கள் சம்மதிக்கும் வரை சண்டை செஞ்சிக்கிட்டே இருக்கணும். ஏனென்றால், நம்முடைய காதல் என்பது எல்லாவற்றிற்கும் மேலானது.

நம் வாழ்க்கை முழுவதும் நம்மோடு பயணிக்க கூடிய ஒரு நபர்… பெற்றோர்களாக பார்த்து திடீரென ஒரு நபரை திருமணம் செய்து வைத்தால் அவருடன் மனம் ஒத்துப் போகுமா..? ஒத்துப் போகாதா..? அவர்களுடைய சுவை எப்படி இருக்கும்.. அவர்கள் சமூகத்தை எப்படி பார்க்கிறார்கள்… இதெல்லாம் புரிந்து கொள்வதற்கு சில காலங்கள் ஆகும்..

சில நேரங்களில் நம்முடைய சுவைக்கு அவர்கள் ஒத்து வராமல் போகலாம். ஆனால், காதல் அப்படி கிடையாது.. இருவரும் ஒரே விதமாக சமூகத்தை அணுகுவோம்.. ஒரே விதமான எண்ண ஓட்டங்களில் இருப்போம்.. ஒரே விதமான எதிர்பார்ப்புகளில் இருப்போம்… ஒருவர் மீது ஒருவர் அன்பாகவும்.. ஒரு வித பைத்தியமாகவும் இருப்போம்.. அப்படியான உறவுகள் அமைவதெல்லாம் சாத்தியம் இல்லாத விஷயம்.. ஆனால், காதலில் அது சாத்தியம்.

எனவே காதலுக்காக நாம் சண்டையிடுவது எந்த ஒரு தவறும் கிடையாது. எனவே காதலிப்பவர்கள் விடாமல் சண்டை செய்யுங்கள். உங்களுடைய பெற்றோர்களை சமாதானம் செய்யுங்கள் என்று கூறியிருக்கிறார் நடிகை நஸ்ரியா. இவருடைய இந்த பேச்சு குறித்து உங்களுடைய கருத்தை இங்கே பதிவு செய்யலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version