12 வயசு வித்தியாசம்.. ஆனாலும் ஃபகத் பாசிலை கல்யாணம் பண்ணது ஏன்..? நஸ்ரியா விளக்கம்..!

திருவனந்தபுரத்தில் பிறந்து வளர்ந்த நடிகை நஸ்ரியா நசீம் அங்கிருக்கும் கிறிஸ்தவ பள்ளியில் பள்ளிப்படிப்பை படித்ததோடு மட்டுமல்லாமல் 2013-ஆம் ஆண்டு இளங்கலை வணிகவியலில் படிப்பில் சேர்ந்த இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைத்ததால் கல்லூரி படிப்பை தொடர முடியவில்லை.

இவர் மலையாள படங்கள் மட்டுமல்லாமல் சில தமிழ் படங்களிலும் நடித்து அசத்தியிருக்கிறார். அத்தோடு சின்ன திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த நிலையில் இவருக்கு திரைப்பட வாய்ப்பு கிடைத்தது.

நடிகை நஸ்ரியா..

2006-ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக மலையாள திரைப்படத்தில் நடித்த இவர் பளுங்கு என்ற படத்தில் நடித்து அசத்தினார். அடுத்து இதே ஆண்டு தமிழில் ஒரு நாள் ஒரு கனவு என்ற திரைப்படத்தில் நடித்திருக்க கூடிய இவர் ரசிகர்கள் விரும்பும் நாயகியாக திகழ்கிறார்.

இந்த தமிழ் படத்தை அடுத்து 2013-இல் நேரம், ராஜா ராணி, நய்யாண்டி, திருமணம் எனும் நிக்கா போன்ற படங்களில் நடித்த இவர் 2014-இல் வாயை மூடி பேசவும் படத்தில் நடித்து ரசிகர்கள் பட்டத்தை அதிகரித்துக் கொண்டார்.

நேரம் படத்தின் மூலம் தமிழ் திரையுடத்திற்கு நாயகியாக அறிமுகம் ஆன நஸ்ரியா 2014-ஆம் ஆண்டு மலையாள திரைப்பட இயக்குனர் மகன் பகத் பாசிலை திருமணம் செய்து கொண்டார்.

12 வயது வித்தியாசம்..

இந்நிலையில் நடிகை நஸ்ரியாவிற்கும் பகத் பாசிலுக்கும் 12 வருட வயது வித்தியாசம் இருந்தாலும் திருமணம் செய்து கொண்டு இன்று வரை மகிழ்ச்சியாக வாழ்ந்து வருவதாக சொல்லி இருக்கும் இவர் பலரும் இது பற்றி கேள்விகளை எழுப்பி இருப்பதாகவும் சொல்லியிருக்கிறார்.

இந்தக் கேள்விக்கு ஒற்றை வரியில் காதல் என்று பதில் அளித்து இருக்கக் கூடிய இந்த தம்பதிகள் பெங்களூர் டேஸ் படத்தில் நடிக்கும் போதே இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் பிடித்துப் போக காதல் சிறகு விரித்து பறக்க ஆரம்பித்ததாக சொல்லி இருக்கிறார்.

இந்நிலையில் முதலில் நஸ்ரியா தான் பகத்திடம் தன் காதலை வெளிப்படையாக வெளிப்படுத்த அவரும் அதற்கு பச்சைக்கொடி காட்டி விட்டதால் என்று மனம் போல் மகிழ்ச்சியோடு வாழ்வதாக சொல்லிவிட்டார்.

பகத் பாசிலை கல்யாணம் பண்ணிய ரீசன்..

மேலும் பகத் பாசில் தன்னை ஒரு குழந்தை போல் கடைசி வரை கண்கலங்காமல் பார்த்துக் கொள்வேன் என்று நஸ்ரியாவிடம் கூறியதை அடுத்து உருகிப்போன நஸ்ரியா பகத் பாசில் காதலுக்கும் ஓகே சொன்னதால் இன்று வரை அவர்கள் இருவரும் காதலித்து இருப்பதாக பேசியது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நட்சத்திர தம்பதிகளாக திகழக்கூடிய இவர்கள் இன்று போல் என்றும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருவதோடு இவர்கள் காதலின் பலம் அவர்களின் மகிழ்ச்சி என்று கூறி இருக்கிறார்கள்.

இதனை அடுத்து இருவரும் ஒருவரின் மேல் ஒருவர் கொண்டிருக்கும் காதலால் தான் வயது வித்தியாசத்தை பார்க்காமல் இந்த திருமணம் நடந்துள்ளது என்பதை வெளிப்படையாக சொன்ன விஷயத்தை ஒப்புக் கொண்டார்கள்.

மேலும் இந்த விஷயத்தை அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வரக்கூடிய ரசிகர்கள் இந்த விஷயத்தை பெரிதாகி பேசி பேசும் பொருளாக மாற்றி விட்டார்கள்.

“காட்டு தேக்கு.. பட்ட ஜிலேபி..” நெகு நெகு தொடையை காட்டி திணறடிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..!

Comments are closed.
Exit mobile version