கவர்ச்சிக்கு நோ சொன்ன நஸ்ரியாவா இது..? என்னங்கய்யா ஒண்ணுமே புரியலையே..

திருவனந்தபுரத்தைச் சேர்ந்த நஸ்ரியா நசீம் மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்திய மிகச்சிறந்த நடிகையாக விளங்குகிறார்.

இவர் குழந்தையாக இருந்த போது மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததை அடுத்து தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றிய பின்பு ஹீரோயினியாக பல படங்களில் நடித்திருக்கிறார்.

நடிகை நஸ்ரியா..

பிராமணி, ஒரு நாள் வரும் போன்ற மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த நடிகை நஸ்ரியா தமிழைப் பொறுத்த வரை 2006 -ஆம் ஆண்டு வெளி வந்த ஒரு நாள் ஒரு கனவு என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனார்.

இதனை அடுத்து இவரது சிறப்பான நடிப்பை பார்த்த இவருக்கு நேரம், ராஜா ராணி, நையாண்டி, திருமணம் எனும் நிக்கா, நீ நல்லா வருவடா, வாய்மூடி பேசவும் போன்ற தமிழ் திரைப்படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு அடுத்தடுத்து கிடைத்ததை அடுத்து அந்த படங்களை தனது திறமையை நிரூபித்த இவருக்கு ரசிகர்கள் வட்டாரம் அதிகரித்தது.

இந்நிலையில் தமிழ் மற்றும் மலையாள படங்களில் தொடர்ந்து நடித்து வந்த நடிகை நஸ்ரியா 2014-ஆம் ஆண்டு மலையாள முன்னணி இயக்குனர் பாசில் என்பவரின் மகனும் மலையாள நடிகருமான பகத் பாசிலை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த இவர் மீண்டும் தனது செகண்ட் இன்னிங்ஸ் ஆரம்பித்து இருக்கிறார். மேலும் இன்ஸ்டா பக்கத்திலும் அடிக்கடி வகை வகையான புகைப்படங்களை தினசு தினசாக வெளியிட்டு ரசிகர்களை சொக்க வைத்து விடுவார்.

கவர்ச்சிக்கு நோ சொன்ன நஸ்ரியாவா?

ட்ரான்ஸ் என்கின்ற மலையாள படம் மூலம் மீண்டும் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்து இருக்கும் நஸ்ரியா இதை அடுத்து நானிக்கு ஜோடியாக அடடே சுந்தரா என்கிற தெலுங்கு படத்தில் நடித்த பின்பு தமிழில் சூர்யாவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார். இந்த படத்தை சுதா கொங்கரா இயக்க உள்ளார்.

பொதுவாகவே இவர் நடிப்பில் வெளி வந்த படங்களில் அதிக அளவு கவர்ச்சியை காட்டாமல் குடும்ப பங்கினியாக நடித்து கவர்ச்சிக்கு குட்பை சொல்லி இருந்த நஸ்ரியாவா இது? என்று சொல்லக்கூடிய வகையில் தற்போது நஸ்ரியா செய்திருக்கும் செயலால் என்ன நஸ்ரியா கவர்ச்சிக்கு நோ என்று சொன்னதை மறந்து விட்டாரா? என்று கேட்க வைத்துவிட்டது.

ஒரு காலத்தில் நடிகை நஸ்ரியா பட வாய்ப்புக்காக கவர்ச்சியாக நடிக்க வேண்டும் என்ற அவசியம் தனக்கு இல்லை என்றும் நான் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன். கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு தான் ரசிகர்களை கவர வேண்டும் என்ற விதி எதுவும் கிடையாது என சொல்லி இருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் சாதாரண புடவையிலேயே நான் ரசிகர்களை சுண்டி இழுப்பேன் என கூறிக் கொண்டிருந்த நடிகை நஸ்ரியா தற்போது கவர்ச்சியில் களம் இறங்கி இருப்பதைப் பார்த்து ரசிகர்கள் பல்வேறு விதமான கேள்விகளை முன் வைத்து இருக்கிறார்கள்.

வேற லெவல் கவர்ச்சியில்..

பல்வேறு நடிகைகளும் சினிமாவில் தங்களை தக்க வைத்துக் கொள்ள கவர்ச்சி காட்டுவது புதிதல்ல. எனினும் கவர்ச்சியை காட்டமாட்டேன் என்று உறுதியாக இருந்த நடிகை நஸ்ரியா தற்போது வெப் சீரியல் ஒன்றில் படு கிளாமரான காட்சிகளில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார்.

இந்த விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை அறிந்த ரசிகர்கள் என்னங்கையா இது ஒண்ணுமே புரியலையே கவர்ச்சிக்கு நோ சொன்ன நஸ்ரியாவா இது? என்று புலம்பி தள்ளி இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version