10 நிமிஷம் போதும்..! – இதை பண்ணுங்க..! – கழுத்து கருமை நீங்கி பளபளக்கும்..!

கழுத்து கருமை நீங்க : பொதுவாகவே முகப்பகுதி பளபளவென மின்னினாலும் முகத்துக்குக் கீழ் இருக்கும் கழுத்துப் பகுதியில் அதிக அளவு அழுக்கு சேர்ந்து கருமையான நிறத்தில் காட்சி அளிக்கும்.

இதை நீக்குவதற்காக எவ்வளவோ வேதிப்பொருட்களை பயன்படுத்தியும் முகத்தை பிளிச் செய்வது போல கருப்பு ஆக இருக்கும் அந்த கழுத்துப் பகுதியை பிளிச் செய்தால்  சில நாட்கள் மட்டுமே அது அப்படியே இருக்கும். அதன் பிறகு  மீண்டும் கருப்பு நிறத்தை அடைந்து விடும்.

 இதனைத் தவிர்த்து நிரந்தரமாக கருப்பு நிறம் ஏற்படாமல் இயற்கை முறையில் தேவையான ஊட்டத்தையும் கொடுத்து முகத்தில் இருக்கக்கூடிய முக துவாரங்கள் அடைத்துக் கொள்ளாமல் முகமும் படபடப்பாக கரும்புள்ளிகள் மற்றும் கருந்திட்டுகள் இல்லாமல் பளிச்சென்று மாற்றுவதற்கு ஒரு வழி உள்ளது. அது தான்…

கருப்பு உளுந்து பேஸ்ட்:

 பொதுவாகவே உளுந்து உடல் ஆரோக்கியத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.ஸஇதில் வெள்ளை உளுந்தை காட்டிலும் கருப்உளுந்து அதிகளவு சத்தி உள்ளது. எனவே இந்த கருப்பு உளுந்தினை சிறிதளவு ஊற வைத்து நன்றாக பேஸ்ட் பதத்தில் அரைத்துக் கொள்ள வேண்டும்.

அவ்வாறு அரைக்கும் போது நீர் அதிக அளவு சேர்க்கக்கூடாது. நன்றாக மைய அரைத்து எடுத்த பின் இதனோடு பன்னீர் துளிகள் சிலவற்றை சேர்த்துக்கொண்ட பின் கருப்பாக இருக்கும் கழுத்து பகுதி மற்றும் முகத்தில் நன்றாக பூசிக்கொள்ள வேண்டும்.

 இதன் பிறகு 10 நிமிடம் முதல் அரை மணி நேரம் இதனை அப்படியே காயும் வரை கழுத்து மற்றும் முகத்தில் வைத்துக் கொண்டிருந்து பின்பு கழுவி விடலாம்.

இதனைத் தொடர்ந்து வாரத்தில் மூன்று நாட்கள் பயன்படுத்த வேண்டும் அவ்வாறு செய்வதின் மூலம்  கழுத்துப் பகுதியில் இருக்கக்கூடிய அந்த கருப்பு நிறம் மெல்ல மெல்ல மாறி உங்கள் இயல்பான மேனி நிறத்தை அடைந்து விடும்.

 அதுமட்டுமல்லாது முகத்தில் இருக்கக்கூடிய முகத்துவாரங்களை சரியான முறையில் திறந்து விடுவதால் முகப்பொலிவு அதிகரிக்கும். மேலும் இறந்த செல்கள் அனைத்தும் நீங்குவதன் காரணமாக முகம் பார்ப்பதற்கு பள பள என மின்னும்.

 அதுமட்டுமல்லாமல் முகத்துக்கு தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்களை இந்த உளுந்து தருவதால் செயற்கையாக நாம் எடுத்துக் கொள்ளக்கூடிய வைட்டமின்களை கூட தவிர்த்துவிடலாம் .

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …