நான் மகான் அல்ல படத்திற்கு பிறகு எனக்கு நடந்த கொடுமை.. நீலிமா ராணி ஓப்பன் டாக்..!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சிலர், இன்று பெரிய நடிகர்களாக, சீரியல் நடிகைகளாக ரசிகர்கள் மனங்களில் இடம்பிடித்துள்ளனர். ஆனால் ஒரு சிலர் சின்ன வயதில் நடிப்புத்துறையில் இருந்து விட்டு வளர்ந்த பின் வேறு துறைகளுக்கும் சென்றிருக்கிறனர்.

ஆனால் ஒரு சிலர் சினிமாவில் தொடர்ந்து நடித்து பெரியவர்களான பின்பும் அதே சினிமா பாதையில் பயணிக்கின்றனர். அதில் ஒரு சிலர் பெரிய அளவில் சாதிக்கின்றனர். அப்படி குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகைகளில் குறிப்பிட்டு சொல்லத் தகுந்தவர் நடிகை ஸ்ரீதேவி. வளர்ந்த பின் பெரிய ஸ்டார் நடிகையானார்.

ஆனால் ஸ்ரீதேவி போன்று சிலருக்கு மட்டுமே இந்த ஸ்டார் அந்தஸ்து அளவுக்கு பெரிய உயர்வும், அங்கீகாரமும் கிடைக்கிறது. மற்றவர்களுக்கு அது வாய்க்காமல் போய் விடுவதும் உண்டு.

நீலிமா ராணி

தேவர் மகன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் நீலிமா ராணி. தொடர்ந்து பாண்டவர் பூமி, விரும்புகிறேன், தம், பிரியசகி போன்ற படங்களில் சிறுமியாகவும் நீலிமா ராணி நடித்தவர்.

அதன்பிறகு சினிமாவில் தொடர்ந்து சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தவர். மொழி, சந்தோஷ் சுப்ரமணியம், ராஜாதி ராஜா, நான் மகான் அல்ல, முரண், அமளி துமளி, பண்ணையாரும் பத்மினியும் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.

டிவி சீரியல்கள்

சினிமாவை காட்டிலும், டிவி சீரியல்களில் மிக அதிக எண்ணிக்கையில் நீலிமா ராணி நடித்திருக்கிறார். பல சீரியல்களில் இவர் வில்லி கேரக்டரில் நடித்தும் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.

மெட்டி ஒலி, கோலங்கள், புதுமைப்பெண்கள், தென்றல், இதயம், பவானி, செல்லமே உள்ளிட்ட பல சீரியல்களில் நீலிமா ராணி நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

இதையும் படியுங்கள்: அவங்க வாயில குத்தனும்.. தீயாய் பரவும் திரிஷாவின் வீடியோ.. என்ன காரணம்..?

திறமையான நடிகை

கடந்த 1992ம் ஆண்டில் வெளிவந்த தேவர்மகன் படத்தில் துவங்கி 36 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் இருந்து வரும் நடிகை நீலிமா ராணி, திறமையான நடிகையாக, அழகான நடிகையாக இருக்கிறார். ஆனால் அவரால் சினிமாவில் ஒரு குறிப்பிட்ட இடத்தை பெற முடியவில்லை.

அதிலும் நான் மகான் அல்ல படத்தில், அவரது சுதா கேரக்டர் மிகவும் ரசிக்கும்படியாக இருந்தது. கார்த்தி மற்றும் கஜோல் ஆகியோரின் தோழியாக சுதா என்ற கேரக்டரில் நடித்திருந்த அவரது நடிப்பு ரசிகர்களின் மனம் கவர்ந்தது.

ஆனால் அந்த படத்தில், அப்படி ஒரு கேரக்டரில் நடித்த பிறகு பெரிய அளவில் தனக்கு பட வாய்ப்புகள் வரும் என்ற எதிர்பார்த்த நடிகை நீலிமா ராணிக்கு பலத்த ஏமாற்றமே மிஞ்சியது.

நான் மகான் அல்ல

இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகை நீலிமா ராணி கூறியதாவது,
என்ன எழுதியிருக்கோ அதுதான் நடக்கும். உங்களுக்கு என்ன அமையணுமோ அதுதான் அமையும்.

எனக்கு நான் மகான் அல்ல மாதிரியான ஒரு பிரேக், அமேஸிங்க் ஆன படம், அமேஸிங்க் கேரக்டர். சுதா மாதிரி ஒரு பிரண்ட், நம்ம லைப்ல இருக்கணும் அப்படீன்னு எல்லோரும் நினைக்கற மாதிரியான ஒரு கேரக்டர்.

இதையும் படியுங்கள்: 2வது மனைவியாகும் நடிகை அஞ்சலி..! மாப்பிள்ளை யாரு தெரியுமா..?

அந்த படத்துல நடிச்சேன். அது ஒரு வெற்றிப் படம். அந்த படத்துல நடிச்ச பிறகு அடுத்தடுத்து எனக்கு எத்தனை படங்கள் வந்ததுன்னு பார்த்தால், ஒண்ணுமே கிடையாது. அதற்கு பிறகு பெரியதாக எனக்கு நடிப்பதற்கான படங்களே அமையவில்லை, என்று வருத்தப்பட்டு கூறியிருக்கிறார்.

தனக்கு நடந்த கொடுமையாக…

நான் மகான் அல்ல படத்திற்கு பிறகு, தொடர்ந்து நல்ல கேரக்டர்களில் நடிக்க ஆசைப்பட்டேன். ஆனால் அதற்கான வாய்ப்பின்றி, எனக்கு படங்களே அமையவில்லை என்று, தனக்கு நடந்த கொடுமையாக நீலிமா ராணி ஓப்பனாக அந்த நேர்காணலில் பேசியிருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version