நடு ரோட்டில் வெறும் ஜட்டியுடன் நடிகை நீலிமா ராணி..! – ரசிகர்கள் ஷாக்..!

நடிகை நீலிமா ராணி நான் நடுத்தெருவில் ஜட்டியோடு நடந்து போனேம் என்று ஒரு பேட்டியில் பேசி இருக்கக் கூடிய விஷயம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

தமிழ் சினிமாவில் பிரபலமாக இருக்கும் நடிகைகள் தங்களுடைய மவுசு குறைந்து விடாமல் இருக்க இணைய பக்கங்களில் ஆக்டிவாக இருக்கிறார்கள். அந்த வகையில் சின்னத்திரை வெள்ளித்திரை என இரட்டை குதிரை சவாரி செய்து வரும் நடிகை நீலிமா ராணி இணைய பக்கங்களில் ஆக்டிவாக இருக்கிறார்.

கடந்த 1992ஆம் ஆண்டு நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான தேவர் மகன் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை நீலிமா ராணி தொடர்ந்து பல படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்திருக்கிறார்.

சீரியல்களிலும் நடித்திருக்கிறார். சமீபத்தில் ஒரு பேட்டியில் தன்னுடைய குழந்தை பருவ நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார் நடிகை நீலிமா ராணி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.

அவர் கூறியதாவது, என்னுடைய அப்பா நான் தூங்கி கொண்டு இருக்கும் பொழுது இறந்து விட்டார். அவர் இருக்கும் பொழுது நான் அவளை கட்டிப்பிடித்தபடி அருகில் படுத்து இருந்தேன்.

நீலிமா ராணியின் தந்தை

இப்போது வரை அது என்னுடைய ஞாபகத்தில் இருக்கிறது. என்னுடைய தந்தை விசாகப்பட்டினத்தில் ஒரு எலெக்ட்ரானிக் கடை நடத்தி வந்தார். அந்த கடை நாங்கள் இருந்த வீட்டின் தெருவின் மூலையில் தான் இருந்தது. அப்போது எனக்கு வயது வெறும் மூன்று தான்.

ஒருமுறை அப்பாவை காணவில்லை என்று அப்பாவை தேடிக்கொண்டே தெரு முக்கில் இருக்கும் கடை வரை வெறும் ஜட்டி மட்டும் அணிந்துகொண்டு அப்பா அப்பா நடந்து போய்க்கொண்டு இருந்தேன்.

எங்கே என்னை காணவில்லை என்று வீட்டில் தேடி இருக்கிறார்கள். அப்பொழுது எதிரில் வந்த என்னப்பா எங்க நம்ம பொண்ணு மாதிரி தெரியுது.. என்று என்னை பார்த்து வண்டியை நிறுத்தி என்னை அவருடன் ஸ்கூட்டரில் கூட்டிக் கொண்டு சென்றார்.

என்னுடைய தந்தையை உயிரை காவு வாங்கியது அவருக்கு இருந்த புகைப்பழக்கம் தான். அந்தப் பழக்கத்தால் தான் என்னுடைய அப்பா உயிர்நீத்தார். உங்களுக்கும் புகை பழக்கம் இருந்தால் அதனை இன்றே நிறுத்தி விடுங்கள். தவிர்த்து விடுங்கள் என்று கூறியிருக்கிறார் நடிகை நீலிமா ராணி.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam