கணவருக்கு இது பெருசா இருக்குறது பற்றி எனக்கு.. நடிகை நீலிமா ராணி ஓப்பன் டாக்..!

கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கும் மேலாகவே தமிழ் சினிமாவில் நடிகையாக பயணித்து வருபவர் நடிகை நீலிமா ராணி. பெரும்பாலும் தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் அல்லது பெரிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமாக இருந்தால் மட்டுமே மக்கள் மத்தியில் அதிக பிரபலமாக ஒரு நடிகையை தெரியும்.

ஆனால் அப்படியெல்லாம் பிரபலமாகாமல் கூட மக்கள் மத்தியில் பிரபலமான ஒரு நடிகையாக இருந்து வருபவர் நடிகை நீலிமா ராணி. அதற்கு முக்கிய காரணம் அவர் துணை கதாபாத்திரங்களில் நடித்தாலும் கூட அவருக்கு என தனிப்பட்ட சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவர் நீலிமா ராணி.

சிறப்பான நடிப்பு:

திரைப்படங்களில் ஒன்று அல்லது இரண்டு காட்சிகளில் தோன்றினாலும் கூட மனதில் நிற்கும் ஒரு கதாபாத்திரமாக நீலிமா ராணி இருப்பதற்கு அதுவே காரணமாக இருக்கிறது. நான் மகான் அல்ல, மொழி மாதிரியான திரைப்படங்களில் எல்லாம் சின்ன சின்ன கதாபாத்திரங்களில்தான் நீலிமாராணி நடித்திருப்பார்.

இருந்தாலும் அவரை பார்த்த உடனேயே அந்த திரைப்படத்தில் எந்த காட்சிகளில் அவர் வந்தார் என்பது பெரும்பாலும் நினைவிருக்கும். திரைப்படங்களை விடவும் டிவி சீரியல்களில் நீலிமாராணி மிகவும் பிரபலமான நடிகை ஆவார்.

ஒரு காலத்தில் சன் டிவியில் பெரும் வெற்றி கொடுத்த மெட்டி ஒலி நாடகத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நீலிமா ராணி நடித்திருப்பார். நீலிமா ராணியின் இளமை தோற்றத்தை பார்க்கும் பலரும் ஏன் நீலிமா ராணிக்கு கதாநாயகியாக நடிக்க வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று கேட்பது உண்டு.

திருமண வாழ்க்கை:

நீலிமாராணியே மிக இளம் வயதிலேயே திருமணம் செய்து கொண்டார். இளமையாக இருக்கும் பொழுது மிகவும் சின்ன பெண்ணாக பார்க்க அழகாக இருப்பார் நீலிமா ராணி. ஆனால் அவர் திருமணம் செய்து கொண்ட நபர் நீலிமாராணியை விட அதிக வயதுடைய தோற்றத்தில் இருந்தார்.

வயது வித்தியாசத்திலும் அவருக்கு நீலிமா ராணியை விட மிகவும் அதிக வயது என்று கூறப்படுகிறது. இப்போது வரை அந்த விஷயம் ஒரு சர்ச்சையான விஷயமாகவே பேசப்பட்டு வருகிறது. எதற்கு நீலிமா ராணி இவ்வளவு அழகாக இருந்தும் இவ்வளவு வயது வித்தியாசத்தில் ஒருவரை திருமணம் செய்து கொண்டார் என்று பேச்சுக்கள் இருக்கின்றன.

இது குறித்து ஒரு பேட்டியில் பேசிய நீலிமாராணி கூறும் பொழுது கண்டிப்பாக உங்களுக்கு அமையும் துணை உங்களை விட வயது வித்தியாசம் அதிகமாகதான் இருக்க வேண்டும். மனைவியை விட கணவருக்கு அதிக வயிறு வித்தியாசம் இருக்கும்பொழுதுதான் அவர் நம்மை நன்றாக பார்த்துக் கொள்வார்.

நான் 18 வயதில் என்னுடைய கணவரை முதன்முதலாக பார்த்தேன். 21 வயதில் அவரை திருமணம் செய்து கொண்டேன். அதற்கு பிறகு என்னை முழுமையாக வளர்த்ததே அவர்தான் என்று கூறவேண்டும். சினிமாவில் எப்படி நடிப்பது என்பதில் துவங்கி எப்படி மேக்கப் போட வேண்டும் என்பது வரை அனைத்தையும் எனக்கு சொல்லி கொடுத்தவர் எனது கணவர்தான்.

அவரை முதன் முதலில் பார்த்ததை விடவும்  வியப்பும் காதலும் இப்பொழுது அதிகரித்து இருக்கிறதே தவிர குறையவே இல்லை என்று கூறுகிறார் நீலிமா ராணி.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version