என்னோட முதல் கணவர் இவரு தான்.. ரசிகரின் கேள்விக்கு Neelima Rani கொடுத்த பதிலை பாருங்க..!

வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் பயணம் செய்யும் நடிகை நீலிமா ராணி 1992-ஆம் ஆண்டு கமலஹாசன் நடிப்பில் வெளி வந்த தேவர் மகன் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்.

இதனை அடுத்து பல திரைப்படங்களில் நடிக்க கூடிய வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. அந்த வகையில் இவர் குணசித்திர கதாபாத்திரங்களை ஏற்று பல படங்களில் நடித்திருக்கிறார்.

நடிகை நீலிமா ராணி..

அந்த வகையில் இவர் நடிப்பில் வெளி வந்த நான் மகான் அல்ல திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான விருதினை பெற்றிருக்கிறார். அது மட்டுமல்லாமல் இவர் நடிப்பில் வெளி வந்த அமளி துமளி, இருவர் உள்ளம், பண்ணையாரும் பத்மினியும் போன்ற படங்கள் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்தது.

மேலும் இவர் 50-க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி தொடர்களில் நடித்திருப்பதோடு 30-க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்து அசத்தியவர். சின்னத்திரையை பொறுத்த வரை 2002-இல் வெளி வந்த மெட்டி ஒலி சீரியல் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார்.

இதனைத் தொடர்ந்து 2003-இல் கோலங்கள் 2005-இல் என் தோழி என் காதலி என் மனைவி 2008-இல் புதுமைப் பெண்கள் 2009-இல் தென்றல் 2010-இல் இதயம் 2012-இல் பவானி 2013-இல் செல்லமே போன்ற தொடர்களில் நடித்து இல்லத்தரசிகள் விரும்பும் பெண்ணாக மாறினார்.

என்னோட முதல் கணவர் இவர்தான்..

அண்மை காலமாக சீரியலில் இருந்து நடிப்பதை தவிர்த்து வந்திருக்கும் நீலிமா ராணி சமீபத்திய பேட்டி கொண்டு கலந்து கொண்டு முக்கிய தகவல்களை பகிர்ந்து இருக்கிறார்.

இந்த பேட்டியின் போது நீலிமா ராணி இடம் உங்களைப் பற்றி அதிக அளவு google செய்யப்பட்ட சில கேள்விகளை எடுத்து வந்திருக்கிறோம். இந்தக் கேள்விகளில் முதலாவதாக உங்களுடைய முதல் கணவர் யார் என்று ரசிகர்கள் பலரும் கூகுளில் தேடி இருக்கிறார்கள்.

இதற்கு உங்களுடைய பதில் என்ன என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு என்ன பதில் அளித்து இருப்பார் நீலிமா ராணி என்று உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியுமா?

நீலிமா ராணி கொடுத்த பதிலை பாருங்க..

இதற்கு நீலிமா ராணி அளித்த பதிலை அறிந்தால் நீங்கள் திணறிப் போவீர்கள். இந்த கேள்வியை கேட்ட உடனே நீலிமா ராணி இது போன்ற கேள்விகள் என்னிடமும் கேட்கப்பட்டு உள்ளது. எதனால் இப்படி கேட்கிறார்கள் என்று வரை எனக்கு புரியவில்லை.

இதற்கு காரணம் ஒரு வேளை எனக்கும் என் கணவருக்கும் அதிக வயது வித்தியாசம் இருப்பதால் தான் முதலில் யாரையாவது திருமணம் செய்து தெரிந்திருப்பேன் என நினைத்திருக்கிறார்கள் போல தெரிகிறது.

ஆனால் இது உண்மை கிடையாது என்னுடைய முதல் கணவரும் இரண்டாவது கணவரும் கடைசி வரை என் கணவராக இருக்கப் போவதும் என் கணவர் இசை தான் என்ற பதிலை சிறப்பாக தந்து சிரித்தார்.

இந்த பதிலை கேட்டு ரசித்த ரசிகர்கள் அனைவரும் அவரை பாராட்டு இருப்பதோடு மிகவும் சாதுரியமாக அளித்த பதிலை எண்ணி அவர்களுக்குள் பேசி வருகிறார்கள்.

இந்த பதிலானது தற்போது இணையத்தில் வைரலாகவும் பேசும் பொருளாகவும் மாறி உள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version