சொந்த ஊரில் நீலிமா ராணி செய்த விஷயம்..! – என்ன பண்ணி இருக்கார் பாருங்க..!

 ஒவ்வொரு குடும்பத்தில் இருக்கக்கூடிய நபருக்கும் புதிதாக சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்ற எண்ணம் இருக்கும் அந்த வகையில் தற்போது சின்னத்திரை சீரியல்களில் பக்காவாக நடித்திருக்க கூடிய நீலிமா சொந்த வீடு கட்டப் போவதான செய்தியை அறிவித்திருப்பது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 நடிகை நீலிமா சின்னத்திரை மட்டுமல்லாமல் வெள்ளித்திரை இரண்டிலும் கலக்கியவர். வெள்ளித்திரையை பொறுத்த வரை நான் மகான் அல்ல, பாண்டவர் பூமி, பண்ணையாரும் பத்மினியும், மன்னன் வகையறா உள்ளிட்ட பல படங்களில் நடித்த இவருக்கு ரசிகர்கள் வட்டாரம் அதிக அளவு உள்ளது.

 

 அது போலவே இவர் சீரியல்களில் படு பக்காவாக நடித்து இல்லத்தரசிகளின் வீட்டில் இவரும் ஒரு பெண்ணாகவே மாறியவர். அந்த வரிசையில் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வந்த செல்லமே ,வாணி ராணி, அரண்மனைக்கிளி உள்ளிட்ட பல தொடர்களில் இவன் நடித்து ரசிகர்களின் வட்டாரத்தை விரிவுபடுத்திக் கொண்டார்.

 மேலும் இவர் இசை வாணன் என்பவரை திருமணம் செய்து கொண்டு பக்காவாக செட்டில் ஆகிவிட்ட இவருக்கு பிள்ளை குட்டி உள்ளது.

 திருமணத்திற்கு பிறகும் நடித்து வந்த நீலிமா திடீரென்று நடிகர்களுக்கு ஷாக் கொடுக்கக்கூடிய வகையில் இனி நடிக்க மாட்டேன் என்று அறிவித்தது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

 எனினும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து ஆக்டிவாக இருக்கக்கூடிய நீலிமா தனது குடும்பத்தாருடன் இருக்கக்கூடிய புகைப்படங்களையும் மற்ற புகைப்படங்களையும் பதிவிட்டு ரசிகர்களின் மனதில் இடம் பிடிப்பார்.

அந்த வரிசையில் தற்போது ஒரு மகிழ்ச்சியான நிகழ்வினை ரசிகர்களுக்கு மத்தியில் பகிர்ந்து இருக்கிறார். அது என்னவெனில் அவர் தனது சொந்த ஊரில் சொந்த வீட்டை கட்ட இருப்பதாக கூறியிருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் அங்கு பூமி பூஜை போடப்பட்ட சில புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களின் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறார்.

 இப்போது இந்த புகைப்படத்தை பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருவதோடு புது வீடு சிறப்பாக அமைய வேண்டும் என்பதையும் கூறி இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version