சடலத்துடன் விடிய விடிய படுத்திருந்தேன்.. நீலிமா ராணி வெளியிட்ட பகீர் தகவல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

தமிழ் திரை உலகில் மட்டுமல்லாமல் சின்ன திரையிலும் தனக்கு என்று ஓர் ரசிகர் வட்டாரத்தை பிடித்து இருப்பவர் நடிகை நீலிமா ராணி இவர் 1992 ஆம் ஆண்டு முதல் திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார்.

இதையும் படிங்க: நாட்டுக்கட்ட.. வெடக்கோழி.. வெறும் சிம்மீஸ்.. கட்டழகை காட்டி மூச்சு முட்ட வைக்கும் பிரிகிடா சாகா..!

குறிப்பாக இவர் தேவர் மகன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானதை அடுத்து பல படங்களில் குழந்தை நட்சத்திரமாகவே நடித்து பின் சின்னத்திரை சீரியல்களில் நடிக்க ஆரம்பித்து புகழடைந்தார்.

நடிகை நீலிமா ராணி..

நடிகை நீலிமா ராணியை பொருத்த வரை 2002 ஆம் ஆண்டு வெளி வந்த மெட்டிஒலி என்ற சீரியலில் பக்குவமாக தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருப்பார். இது வரை 30-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்திருக்கிறார்.

இவர் நடித்த படங்களில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய படமாக நான் மகான் அல்ல என்ற படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகைக்கான விருதினை பெற்றிருக்கிறார். மேலும் இருவர் உள்ளம், பண்ணையாரும் பத்மினியும் போன்ற படங்களில் நடித்து தனது அசாத்திய திறமையை வெளிப்படுத்தியவர்.

சீரியல்களைப் பொறுத்த வரை கோலங்கள், என் தோழி என் காதலி என் மனைவி, புதுமைப்பெண்கள், தென்றல், இதயம், பவானி செல்லமே போன்ற பல சீரியல்களில் நடித்து அசத்தியிருக்கிறார்.

சடலத்துடன் விடிய விடிய படுத்திருந்தேன்..

இந்நிலையில் அண்மை பேட்டி ஒன்றில் இவர் பேசும் போது தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை பதிவு செய்திருக்கிறார். இந்த பதிவை பார்த்து ரசிகர்கள் அனைவரும் கடுமையான அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.

இதற்குக் காரணம் நடிகை நீலிமா ராணி தன்னுடைய தந்தை பற்றி சில விஷயங்களை நினைவுக்கு கொண்டு வந்ததோடு மட்டுமல்லாமல் அவருக்கு புகை பிடிக்கும் பழக்கம் இருந்ததால் சிறு வயதிலேயே அவரை இழக்க நேரிட்டது என்ற விஷயத்தை தெரிவித்தார்.

மேலும் தந்தையின் அரவணைப்பு இல்லாமல் தாயின் அரவணைப்பில் வளர்ந்தேன். என்னுடைய தந்தை இறந்த போது அவர் இறந்து விட்டார் என்று கூட எனக்கு தெரியாது. மேலும் எதற்காக அழுகிறார்கள் என்று தெரியாமல் இருந்தேன்.

அதிர்ச்சி தரும் பகீர் தகவல்..

எப்போதுமே நான் என் தந்தையின் அருகில் தான் படுத்து உறங்குவது வழக்கம். அது போல என் தந்தை இறந்த போதும் அவர் அருகில் தான் நான் படுத்து இருந்தேன். அவர் இறந்த அன்று அவரை கட்டிப்பிடித்து படுத்து கொண்டு விட்டேன்.

நேரம் ஆகியும் அவர் எந்திரிக்கவில்லை அவரை எழுப்பிய போது தான் தெரிந்தது அவர் இறந்துவிட்டார் என்று தூங்கிக் கொண்டிருக்கும் போதே என் தந்தை இறந்துவிட்டார் இதனை அடுத்து அனைவரும் அழுதார்கள்.

எனக்கு என்ன நடக்கிறது என்று ஏதும் புரியவில்லை இறந்த தந்தையின் உடலுடன் விடிய, விடிய நான் படுத்து உறங்கி இருக்கிறேன். ஆனால் அது அந்த வயதில் எனக்கு தெரியவே இல்லை. இந்த சம்பவத்தை என் வாழ்க்கையில் நான் மறக்கவே மாட்டேன் என்று பதிவு செய்திருக்கிறார்.

நீலிமா ராணி பேசும் போது புகைப்பிடிக்கும் பழக்கம் ஆபத்தானது. அது புகை பிடிப்பவரை மட்டுமல்ல அவருடைய குடும்பத்தையும் பாதிக்கும் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். சிறு பிள்ளையாக நான் இருக்கிறேன். தந்தை இல்லாமல் என் அம்மா என்னை வளர்க்க எவ்வளவு சிரமப்பட்டார் என்பதை எனக்குத் தான் தெரியும்.

இதையும் படிங்க: முதன் முதலில் இவருடன் தான் முதலிரவு நடந்துச்சு.. வெக்கமே இல்லாமல் ஓப்பனாக சொன்ன ஷகீலா..!

ஒருவேளை என் தந்தை என் அருகில் இருந்திருந்தால் இவ்வளவு சிரமங்களை நான் அனுபவித்து இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறேன்.
இந்த கெட்ட புகை பிடிக்கும் பழக்கத்தை கைவிடுங்கள்.

அதன் மூலம் உங்கள் வாழ்வும் உங்களைச் சார்ந்தோரின் வாழ்வும் சிறப்பாக இருக்கும் என்று நீலிமா ராணி கூறி இருப்பதை அனைவரும் வரவேற்று இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version