ரசிகர்களுக்கு மிகவும் நெருக்கமானவர் நடிகை என்று அறியப்படும் கூடிய நடிகை நீலிமா ராணி சில சமயங்களில் கோபம் கொப்பளிக்க பதிலடி கொடுப்பதும் வழக்கமாக வைத்திருக்கிறார்.
அந்த வகையில் தன்னுடைய இணைய பக்கங்களில் மோசமாக பேசிய அல்லது கருத்து தெரிவித்த ரசிகர்களுக்கு நடிகை நீலிமா ராணி சரியான பதிலடி ஒன்றை கொடுத்திருக்கிறார்.
அப்படி தன்னை மோசமாக கிண்டல் செய்த கருத்து தெரிவித்த நடிகர்களை ரசிகர்களை பிளாக் செய்து இருக்கிறார் அம்மணி. இவர் பிளாக் செய்த பட்டியலை எடுத்தால் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
அந்த பட்டியலை அப்படியே ஒரு வீடியோவாக எடுத்து தன்னுடைய இணையப் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார் நடிகை நீலிமா ராணி. இதன் மூலம் தன்னுடைய இணையப் பக்கத்தில் மோசமான கருத்துக்களை பதிவு விடுபவர்களுக்கு இதுதான் பதிலடி என்று சொல்லியுள்ளார் நீலிமாராணி.
மட்டும் இல்லாமல் நம்மை சுற்றி எதிர்மறையாக பேசக்கூடிய எதிர்மறையாக சிந்திக்கக்கூடிய நபர்கள் இருக்கவே செய்கிறார்கள். அவர்களை கடந்து விட்டு செல்வது தான் நமக்கு நல்லது எங்கே நான் அவர்களை பிளாக் செய்து இருக்கிறேன் என்று கேப்ஷன் வைத்திருக்கிறார் நடிகை நீலிமா ராணி.
இந்த வீடியோ காட்சிகளை பார்த்த ரசிகர்கள் அவ்வளவு தான்.. நம்மிடம் எதிர்மறையாக இருப்பவர்கள் அல்லது நம்மை குறை சொல்லி கொண்டே இருப்பவர்களுக்கு நாம் பதில் சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதில்லை.
அவர்களை கடந்துவிட்டு நம்முடைய வாழ்க்கை பயணத்தை தொடர்வது தான் உத்தமம் என நடிகை நீலிமா ராணியின் இந்த செயல் வரவேற்கத்தக்கது என்று அவருடைய ரசிகர்கள் பலரும் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.