இதனால் தான் எனக்கு சீரியல் வாய்ப்பு இல்லாம போச்சு.. ரகசியம் உடைத்த நடிகை நீலிமா ராணி..!

எல்லா தொழில்களிலும் போட்டியும் பொறாமையும் அதிகமாக இருந்து வருகிறது. குறிப்பாக கோடிக்கணக்கில் பணமும் புகழ், செல்வாக்கு மிகுந்த சினிமாத் துறையில் இது போன்ற போட்டி, பொறாமை, துரோகங்கள் ஏமாற்றங்கள் என நடந்து கொண்டே இருக்கிறது.

அதனால் முன்னணி நடிகைகளாக, நடிகர்களாக வரவேண்டிய ஒரு சிலர் இது போன்ற துரோகிகளால் தங்களது சினிமா பயணத்தில் ஒரு கட்டத்தில், தங்களது எதிர்கால வாழ்க்கையை இழக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகின்றனர்.

நீலிமா ராணி

நடிகை நீலிமா ராணி தென்றல், அழகி, தெய்வமகள், மெட்டி ஒலி உள்ளிட்ட டிவி சீரியல்களில் நிறைய நடித்திருக்கிறார். டிவி சேனல்களில் பல சீரியல்களில் அவரது நடிப்பு மிகுந்த பாராட்டை பெற்றிருக்கிறது.

அதேபோல் சினிமாவிலும் அவர் பல படங்களில் நடித்து இருக்கிறார். குறிப்பாக, தேவர் மகன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நீலிமா ராணி நடித்திருந்தார். பிறகு பாண்டவர் பூமி, விரும்புகிறேன் உள்ளிட்ட படங்களில் அவர் நடித்திருந்தார்.

காஜல் அகர்வால் தோழி

அதேபோல் நான் மகான் அல்ல படத்தில் கார்த்தியின் தோழியாக நடித்திருப்பார். அதேபோல் பல படங்களில் கதாநாயகி காஜல் அகர்வால் தோழியாக கல்லூரி மாணவியாக நடித்திருக்கிறார்.

நடிகர் விஷால் நடித்த திமிரு படத்தில் ரீமாசென் தோழியாக நீலிமா ராணி நடித்து இருப்பார்.

சீரியல்களில்….

இப்படி சீரியலிலும் சினிமாவிலும் தொடர்ந்து நடித்த நீலிமா ராணி பெரிய அளவில் சினிமாவில் சாதிக்க முடியவில்லை. சீரியல்களில் அவர் நடித்த வகையில் 50க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போதும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் இருந்து வருகின்றன சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் நீலிமா ராணி, தொடர்ந்து தனது புகைப்படங்களை, வீடியோக்களை பதிவு செய்து வருகிறார்.

இந்த நிலைமைக்கு வந்தேன்

இந்நிலையில் சமீபத்தில் தனது சினிமா வாழ்க்கையில், சீரியல் வாழ்க்கையில் கிடைத்த அனுபவ பாடங்கள் குறித்து அவர் கூறுகையில், பலரது துரோகத்தால் தான் நான் இந்த மாதிரியான ஒரு நிலைமைக்கு வந்தேன் என்று வெளிப்படையாக நீலிமா ராணி பேசியிருக்கிறார்.

சீரியல் நடிப்பு, தயாரிப்பு என பிஸியாக இருந்த நடிகை நீதிமாராணி சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அதில் பேசிய அவர், நான் நம்பிய பல பேர் எனக்கு துரோகம் செய்திருக்கிறார்கள். என்னுடைய முதுகில் குத்தி இருக்கிறார்கள். அதுதான் எனக்கு வாய்ப்புகள் இல்லாமல் போனதற்கு காரணமாக அமைந்தது.

நடுத்தெருவில் வாழ்க்கையை தொடங்கியவள்

ஆனால் நடுத்தெருவில் இருந்து வாழ்க்கையை தொடங்கியவள் நான். இப்போது எனக்கு சொந்தமாக வீடு இருக்கிறது. இங்கிருந்து என்னால் வாழ்க்கையை முன்னோக்கி எடுத்துச் செல்லத் தெரியாதா, அதனால் நான் சோர்ந்து விடப் போவதில்லை.

துரோகத்தால்தான்…

மீண்டும் எழுந்து வரத்தான் போகிறேன் என தன்னுடைய நம்பிக்கைக்கு உரியவர்கள் செய்த துரோகம் குறித்து பேசி இருக்கிறார் நடிகை நீலிமா ராணி.

நம்பிக்கைக்கு உரியவர்கள் செய்த துரோகத்தால் தான் எனக்கு சீரியல் வாய்ப்பு இல்லாம போச்சு என்று ரகசியம் உடைத்திருக்கிறார் நடிகை நீலிமா ராணி.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version