தமிழ் சினிமாவில் பிரபலமான சீரியல் நடிகையையும் குணச்சித்திர நடிகையும் ஆக பார்க்கப்பட்டு வருபவர் தான் நீலிமா ராணி.
இவர் மிகச்சிறந்த குணச்சித்திர வேடங்களை ஏற்று நடித்து பிரபலமான நடிகையாக தமிழ் சினிமா ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகிறார்.
குறிப்பாக சீரியல் திரைப்படம் என எது எடுத்துக் கொண்டாலும் தன்னுடைய கேரக்டருக்கு அவ்வளவு கச்சிதமாக நடித்து கொடுப்பார்.
நீலிமா ராணி:
இவரது கேரக்டர் குணச்சித்திர ரோல்தான் என்றாலும் கூட அந்த கேரக்டர் மக்கள் மனதில் நன்கு பதியும் படி அவர் நடித்து விட்டு செல்வதாக செல்வார்.
இதுதான் நீலிமா ராணியின் ஸ்பெஷல் என்றே கூட கூறலாம். இவர் முதன் முதலில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்தார்.
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த தேவர் மகன் திரைப்படத்தில் சிவாஜியின் பேத்தியாக நடித்து குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
முதல் படத்திலே நீலிமா மக்கள் மனதில் நல்ல இடத்தை பிடித்தார். அதன் பிறகு திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரை தொடர்களின் மூலம் தொடர்ச்சியாக நடித்த வந்தார் .
இதுவரை கிட்டத்தட்ட 60க்கும் மேற்பட்ட சீரியலில் நீலிமா ராணி நடித்திருப்பார். மேலும் 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார் .
நான் மகான் அல்ல திரைப்படத்தில் அவர் மிகச்சிறந்த துணை நடிகைகாண தேசிய விருது பெற்றார். அந்த படத்தில் அவரது நடிப்பு இன்றளவும் மக்களால் மறக்க முடியாத கேரக்டராக பார்க்கப்பட்டு வருகிறது.
திரைப்படம், சீரியல்:
தொடர்ந்து தமிழில் வெளிவந்த பல திரைப்படங்களில் இவர் குணசத்திர வேடங்களில் நடித்து புகழ் பெற்ற நடிகையாக பார்க்கப்பட்டார்.
இதனிடையே சீரியல் என எடுத்துக்கொண்டுமானால் மெட்டி ஒலி, கோலங்கள் புதுமை பெண்கள் தென்றல் இதயம் செல்ல. செல்லமே மகாபாரதம் உள்ளிட்ட பலகை தொடர்களில் இவர் நடித்திருக்கிறார்.
திரைப்படம் என எடுத்துக்கொண்டோம் ஆனால் தேவர் மகன், பாண்டவர் பூமி, விரும்புகிறேன், பிரியசகி, நான் மகான் அல்ல, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பண்ணையாரும் பத்மினியும்,அமளித்துமல்லி உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார்.
குறிப்பாக பண்ணையாரும் பத்மினியும் திரைப்படத்தில். நடிகர் ஜெயபிரகாஷின் மகளாக நீலிமா ராணி நடித்திருப்பார்.
இந்த படத்தில் அவரது கேரக்டர் எல்லோருக்கும் ஒரு வெறுப்பை தரும் படி இருக்கும். கல்யாணம் கட்டி கொடுத்த பிறகு தன்னுடைய அம்மா வீட்டிற்கு வரும்போது போகும்போது எல்லாம் வீட்டில் இருக்கும் டிவி, ரேடியோ, பைக், கார் உள்ளிட்ட பொருட்களை ஒன்றுவிடாமல் வாங்கிக்கொண்டு போய்விடுவார்.
கிட்டத்தட்ட வீட்டில் இருக்கும் எல்லாவற்றையுமே கொடுங்கள் கொடுங்கள் என கேட்டு வாங்கிக்கொண்டு போவார் .
பண்ணையாரும் பதமினியும்:
அப்படத்தில் பண்ணையார் ஜெயப்ரகாசின் நண்பர் ஊருக்குப்போகும்போது அவரிடம் தனது பத்மினி கார் கொடுத்துவிட்டுச் செல்கிறார்.
பண்ணையாருக்கு கார் ஓட்ட தெரியாது. விஜயசேதுபதியின் உதவியுடன் ஓட்ட பழகுவார். ஆனால்,ஒரு கட்டத்தில் ஜெயப்பிரகாஷுக்கு மிகவும் பிடித்தமான அந்த கார் கூட நீலிமா வாங்கிக்கொண்டு போவார்.
மகளின் பாசத்திலிருந்து மீற முடியாமல் ஜெயப்பிரகாசம் அந்த காரை கொடுக்க மனம் இல்லாமல் கொடுத்து அனுப்புவார்.
படத்தின் நீலிமா கேரட்ட்ரை திட்டத்தவர்களே இல்லை. அந்த படத்திலேயே அவரது அவரது கேரக்டர் மட்டும்தான் மக்களால் வெறுக்கப்பட்ட கேரக்டராக பார்க்க முடிந்தது.
இனிக்கையில் சமீபத்தை பேட்டி ஒன்றில் அந்த கேரக்டரில் தான் நடித்தது குறித்து அனுபவத்தை பகிர்ந்துள்ளார் நீலிமா ராணி.
விஜய் சேதுபதி தான் இந்த ரோல் உங்களுக்கு பக்காவாக பொருந்தும் என எடுத்துக்கூறி என்னை நடிக்க வைத்தார். அவர் கூறியதை போலவே ரொம்ப சிறப்பாக அமைந்தது.
நான் மட்டும் தான் மோசமானவள்:
எனக்கு பிடித்தது ஒரே ஒரு பாயின்ட் தான். அதாவது இந்த படத்தை பார்க்கும் ஆடியன்ஸ் எல்லோரும் எப்போ இவ அந்த காரை எடுத்துக் கொண்டு போவாள் என்ற ஒரு பாயிண்ட்டிலே காத்துக்கொண்டிருப்பார்கள்.
அந்த ஒரு எதிர்பார்ப்பு தான் என்னுடைய கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் மக்களிடையே பேசப்படும் என நான் உணர்ந்தேன்.
அந்த படத்தில் நான் மட்டும் தான் மிகவும் மோசமானவன். அதுதான் பாயிண்ட் .அந்த பாயிண்ட்டில் தான் நான் பிரபலமான நடிகையாக தெரிந்தேன் என்று நீலிமா ராணி ஓப்பனாக கூறி இருக்கிறார்.