“தப்பெல்லாம் நடக்கும்.. கூட என் கணவர் கூட இருப்பார்..!..” – போட்டு உடைத்த நீலு ஆண்ட்டி..! – அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

பிரபல துணை நடிகையான நீலு நஸ்ரின் நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான சிங்கம் புலி என்ற திரைப்படத்தில் நடித்திருந்த கதாபாத்திரம் இவரை பட்டிதொட்டியெங்கும் பிரபலமாக்கியது.

ஆனால், நீலு நஸ்ரினிடம் இதுகுறித்து கேட்டால் இந்த படத்தில் நடித்தது தான் நான் மிகவும் மோசமான அனுபவம் என்று கூறுவேன். எனக்கே தெரியாமல் இப்படியான காட்சிகள் படமாக்கப்பட்டது. என்னிடம் ஒரு மாதிரி சொன்னார்கள் ஆனால் படத்தில் பார்க்கும் பொழுது வேறு மாதிரி காட்டி இருந்தார்கள்.

இது எனக்கு பெருத்த ஏமாற்றத்தை கொடுத்தது எனது குடும்பத்தினர் மத்தியிலும் எனக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தி கொடுத்தது. ஆனால் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் கடந்து வந்துவிட்டேன். அதன் பிறகு சினிமாவில் நடிக்கும் ஆசையே போய்விட்டது என்று கூறுகிறார்.

குறிப்பாக கொரோனா சமயத்தில்தான் இவரது பிரபலம் தொடங்கியது என்று கூறலாம். ஏன் என்றால் சிங்கம் புலி படத்தில் மட்டுமில்லாமல் பல திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்து உள்ள இவரது புகைப்படங்களை எடுத்து எந்தெந்த படங்களில் நடித்துள்ளார் என்று மீம்களை சகட்டுமேனிக்கு பறக்கவிட்டு கொண்டாடினார் இவரது ரசிகர்கள்.

அங்கு தொடர்ந்து பல பேட்டிகளில் பேசியுள்ள இவர் படப்பிடிப்பு தளங்களில் நடக்கும் விஷயங்களை மிகவும் வெளிப்படையாக கூறி வருகின்றார். அந்த வகையில் நாள் கணக்கில் பயணித்து படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற பிறகு குட்டையான உடைகளை எடுத்துக்கொண்டு நடிக்கவேண்டும் நடனமாட வேண்டும் என்று கூறுவார்கள்.

நீண்ட தூரம் பயணித்து வந்த நடிகைகள் மற்றும் அப்போது பணத்திற்கான தேவை அதிகமாக இருக்கும் நடிகைகள் வேறு வழியில்லாமல் ஒப்புக் கொண்டு நடிப்பார்கள். ஆனாலும்  சில நடிகைகள் அப்படியான சிறிய ரக ஆடைகளை அணிந்துகொண்டு நடிக்க தயங்கி கொண்டு திரும்ப சென்று விடுவார்கள் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் உங்களிடம் யாராவது தவறாக நடந்து கொண்டிருக்கிறார்களா..? அல்லது தவறாக ஏதாவது கேட்டு இருக்கிறார்களா.? என்று ஒரு பேட்டியில் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த அவர் படப்பிடிப்பு தளத்தில் இதுபோன்ற தப்பெல்லாம் நடக்கும் ஆனால் என்னுடன் எனது கணவர் இருப்பார் எனக்கு தனிப்பட்ட முறையில் இப்படியான தொந்தரவுகள் வந்தது கிடையாது. ஒருபக்கம் இப்படியான தவறுகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. நீங்கள் குறிப்பாக என்னிடம் கேட்பதால் சொல்கிறேன், எனக்கு தனிப்பட்ட முறையில் இப்படியான தொந்தரவுகள் நடந்தது கிடையாது இதுதான் உண்மை என்று கூறியுள்ளார் நடிகை நீலு நஸ்ரின்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …