“அது எல்லாம் சாதரணமா நடக்கும்..” – என் கூட என் புருஷன் இருப்பார்.. போட்டு உடைத்த கூறிய நீலு ஆண்ட்டி..!

நீலு ஆண்ட்டி : சிங்கம் புலி என்ற படத்தில் சில காட்சிகளில் மட்டுமே நடித்து ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒரு நடிகையாக வலம் வருபவர் நடிகை நீலு நஸ்ரின். இவருடைய உண்மையான பெயர் நீலு நஸ்ரின் என்பதாகும்.

ஆனால், ரசிகர்கள் பலரும் இவரை நீலு ஆண்ட்டி என்று தான் நியாபகம் வைத்திருக்கின்றனர். அந்தளவிற்கு சிங்கம் புலி திரைப்படத்தில் இவருடைய கதாபாத்திரம் இருந்தது. ஆனால், எனக்கு தெரியாமலேயே என்னுடைய கதாபாத்திரம் மோசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை கொடுத்தது படப்பிடிப்பில் ஒரு மாதிரியும் படமாக பார்க்கும் பொழுது ஒரு மாதிரியும் இருந்தது என கூறுகிறார் நீலு.

இதனால் மிகவும் விரக்தியடைந்தேன். ஏன் இவ்வளவு மோசமான காட்சியில் நடித்தேன் என்று மிகவும் வேதனைப்பட்டேன். சில நாட்கள் சாப்பிடாமல் கூட இருந்து இருக்கின்றேன். அதன் பிறகு சினிமாவில் இருந்து விலக்கி விட்டு தற்போது பியூட்டி பார்லர் நடத்தி வருகிறேன் என்று ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து சினிமாவில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் குறித்து அவரிடம் கேட்டபோது, அதெல்லாம் சாதாரணமாக நடக்கும் நான் நான் கண்கூடாக பார்த்த விஷயங்கள் இதெல்லாம். ஆனால், நான் படப்பிடிப்புக்கு செல்லும்போது என்னுடைய கணவர் என்னுடன் தான் இருப்பார். அதனால் எனக்கு இப்படியான தொல்லைகள் வந்தது கிடையாது.

மற்றபடி சாதாரணமாக நடக்கக் கூடிய ஒரு விஷயம் தான் இது என்று போட்டு உடைத்துள்ளார். மேலும் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் வாருங்கள் என்று அழைப்பார்கள். ஆனால் படப்பிடிப்பு தளத்துக்கு சென்று சென்ற பின்பு குட்டையான ஆடைகளை அணிந்துகொண்டு நடனமாட சொல்வது மற்றும் கவர்ச்சியான காட்சிகளில் நடிக்க சொல்வது உள்ளிட்டவற்றை செய்ய சொல்வார்கள்.

நீண்ட தூரம் பயணித்த கலைப்பில் இருப்போம். கிட்டத்தட்ட ஒரு நாட்கள் இரண்டு நாட்கள் கூட பயணங்கள் இருக்கும். அப்படி பயணித்து படப்பிடிப்பு தளத்திற்கு வந்த பிறகு இப்படியான காட்சிகளில் நடிக்க வேண்டுமா என்று யோசிப்பவர்கள் உண்டு.

அதே நேரம் இவ்வளவு தூரம் பயணித்து வந்து விட்டோம் நடித்து விடலாம் என்ற கட்டாயத்தில் நடிப்பவர்களும் உண்டு சிலர் பணத்தின் தேவைக்காகவும் வேறு வழியில்லாமல் பல்லைக் கடித்துக் கொண்டு இப்படியான காட்சிகளில் நடிப்பார்கள்.

எல்லோருக்குமே இந்த உலகத்தில் பணம் தேவை அந்த தேவையை பூர்த்தி செய்ய தனக்கு கிடைத்த தொழிலை தெய்வமாக நினைத்து செய்யும் நடிகைகள் இருக்கிறார்கள்.

ஆனால், பணமும் தேவை இல்லை இரண்டு நாள் பயணம் வீண் ஆனாலும் பரவாயில்லை என்று திரும்பி செல்லும் நடிகைகளையும் நான் பார்த்திருக்கிறேன் என்று கூறுகிறார் நீலு நஸ்ரின்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …