தன்னுடைய மகனின் கல்யாணத்தில் இப்படி ஒரு விஷயம் செய்யப்போகிறாரா நெப்போலியன்..! கொளுத்திப்போட்ட நடிகர்..!

ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த நடிகர்களில் நடிகர் நெப்போலியனும் ஒருவர். முக்கியமாக வில்லன் நடிகராக பல திரைப்படங்களில் சிறப்பாக நடித்திருக்க கூடியவர் நெப்போலியன். எஜமான் மாதிரியான திரைப்படங்களில் எல்லாம் நெப்போலியன் நடிக்கும் பொழுது அவரது நடிப்பை பார்த்து பயந்தவர்கள் உண்டு என்று கூறலாம்.

அந்த அளவிற்கு அவருடைய நடிப்பில் வில்லத்தனத்தை பார்க்க முடியும். இந்த நிலையில் சினிமாவில் ஆரம்பத்தில் வந்து அதே சமயம் அரசியலிலும் ஆர்வம் காட்டி வந்தார் நெப்போலியன். இந்த நிலையில் ஜெயசுதா என்பவரை திருமணம் செய்து கொண்டார் நெப்போலியன்.

நெப்போலியன் மகன்:

அவர்களுக்கு மூத்த மகனாக தனுஷும் இரண்டாவது மகனாக குணால் என்பவரும் பிறந்தார்கள். தனுசுக்கு 4 வயது இருக்கும் போது அவருக்கு அவர் நடப்பதில் நெப்போலியன் வித்தியாசம் தெரிவதை பார்த்தார். அதனை தொடர்ந்து அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற பொழுது அவருக்கு தசை பிறழ்வு நோய் என்கிற அரிதான ஒரு நோய் இருப்பது தெரியவந்தது.

அந்த நோய்க்கு சிகிச்சை கிடையாது என்றும் மருத்துவர்கள் கூறி இருந்தார்கள். இருந்தாலும் பல நாடுகளுக்கு சென்று அதற்கான சிகிச்சையை தேடிக்கொண்டிருந்தார் நெப்போலியன்.

இந்த நிலையில் திருநெல்வேலியில் பாரம்பரிய முறையில் அளிக்கப்படும் ஒரு சிகிச்சை முறை மூலமாக தனது மகனை சரி செய்ய முடியும் என்று அறிந்து மகனை அங்கு அழைத்து வந்தார். அது ஓரளவு கை கொடுக்கவும் செய்தது.

ஆனால் தாமதமாக மகனை அழைத்து வந்ததால் ஓரளவுதான் அவரது மகனை சரி செய்ய முடிந்தது. எனவே இந்த மாதிரி நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இனி தனது மகன் போன்ற நிலையை அடையக்கூடாது என்பதற்காக அங்கே மருத்துவமனையை கட்டினார் நெப்போலியன்.

அமெரிக்காவில் செட்டில்:

அதற்குப் பிறகு அவர் அமெரிக்கா சென்று தனது குடும்பத்தோடு செட்டில் ஆகிவிட்டார். ஏனெனில் மகன் தனுஷ்க்கு அமெரிக்காதான் பிடித்திருந்தது நெப்போலியனின் மகன் தனுஷால் விமானத்தில் பயணம் செய்ய முடியாது. அதனால் அவரை அழைத்துச் செல்லும் பொழுது கப்பலில்தான் அழைத்து சென்றனர்.

தற்சமயம் அவருக்கு 25 வயதாகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள விவேகானந்தன் என்பவருடைய மகள் அக்ஷயாவுடன் இவருக்கும் நிச்சயதார்த்தம் ஆகியுள்ளது. ஆன்லைன் வீடியோ கால் மூலமாகவே இந்த நிச்சயதார்த்தம் நடந்தது.

இந்த நிலையில் திருமணத்தை திருநெல்வேலி பக்கம் எல்லாம் மணமகள் ஊரில்தான் நடத்துவார்கள் எனவே அதற்காக தனது மகனை தமிழ்நாடு அழைத்து வர திட்டமிட்டு இருக்கிறார் நெப்போலியன்.

அவரை விமானத்தில் அழைத்து வர முடியாது என்பதால் இப்பொழுது சொகுசு கப்பலை அவர் புக் செய்து விட்டார் என்று கூறப்படுகிறது. குடும்பத்தினர், உறவினர்கள் என அனைவரும் திருமண தேதிக்கு முன்பாகவே இந்தியாவிற்கு வருவது போன்று அந்த கப்பல் புக் செய்யப்பட்டுள்ளது என்று இது குறித்து பயில்வான் ரங்கநாதன் தனது பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.

மேலும் பயில்வான் ரங்கநாதன் கூறும்பொழுது தமிழ் சினிமாவிலேயே சர்ச்சைகளில் சிக்காத நடிகர்களில் நெப்போலியனும் ஒருவர் அவர் எம்.எல்.ஏவாக இருந்து மத்திய அமைச்சராக இருந்து தமிழ் நடிகர்களுக்கு பெருமை சேர்த்தவர் என்று கூறி இருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version